
எந்தவொரு சமயத்திலும் இல்லாத பல ஒன்றுகூடல் ஒழுக்க மற்றும் ஒழுங்கு முறைமையைகள் இஸ்லாத்தில் காணப்படுகின்றபோதும் அவைகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதில் சற்று சந்தேகம் நிலவவே செய்கின்றது. ஐவேளை தொழுகை தொடக்கம் ஐந்தாம் கடமையான ஹஜ் வரைக்கும் எதவித அறிவிப்பும் இன்றி நேரம் வந்தவுடன் ப்ரோகிராம் செய்யப்பட ரோபோக்கள் போல முஸ்லிம்கள் குறிப்பாக முஃமீன்கள் இயங்குவது ஒருவகை ஆச்சரியம் தான். ஆனால் அவர்களின் இயக்கத்திற்கான நோக்கம் பல பொழுதுகள் திருப்தி அளிக்காமலே போகின்றமை கவலைக்குரிய விடயம்.
அநேகமான சந்தர்ப்பங்கள் பேசப்பட்ட தலைப்புக்கள் பேசப்பட்டு ஒருவகை சலிப்பை உண்டாக்குவது மாத்திரமன்றி ஏதோ சந்தர்பம் கிடைத்துவிட்டது என்று பெறுமதியான நேரத்தை காலம் கடத்தும் பல மேடைகளை எனது வாழ்வில் அதிகம் சந்தித்து உள்ளேன். ஆனாலும் எனது எதிர்பார்ப்புக்கள் அவ்வப்போது நிறைவேறுவது மனதிற்கு திருப்தியை அளிக்கின்றது.

1. திருமணம், பலதார திருமணம், இளம் வயது திருமணம் - இதில் தொடர்ந்து மேலோட்டமாக தொட்டுசெல்லும் முறை காணப்படுகின்றது. இதனாலோ தெரியவில்லை சமகாலத்தில் அதிக குடும்பங்கள் சீரழிய காரணமாகியது மட்டுமன்றி விபச்சாரம் மலிந்துள்ளது
2. நவீன காலத்து கொடுக்கல் வாங்கல் முறைமை - தொடர்ந்து வட்டியும் அளவை நிறுவியும் பற்றி நுனிப்புல் மேச்சல். நவீனகாலத்தில் பரிணாமம் பெற்ற வட்டி முறை மற்றும் வியாபர மோசடி பற்றி பேசப்படவில்லை)
3. கட்டிளமை பருவ மாற்றங்கள் மற்றும் உடலியல் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம் பற்றியும் ஆளிடை தொடர்பு பற்றி பேசப்படவில்லை.
4. சுய இன்பம் (masturbation), ஓரினச்சேர்க்கை (Homo sex- gays & lesbianism) - அதிகம் அதிகம் பேசப்பட வேண்டிய முக்கிய தலைப்பு. அதிகம் ஆண்கள் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன். ஆனால் பெண்களின் சதவீதம் சடுதியாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகிறது.
5. தலாக் (மணவிலக்கு) பற்றி அறவே தெளிவூட்டியது கிடையாது – சமகாலத்தில் அதிகம் நினைவூட்டப்படவேண்டிய ஒரு தலைப்பு ஆனால் மேடைகளில் ????
6. மரண சாசனம் மற்றும் சொத்து பங்கீடு – சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கு தெரிந்தால் தானே சொல்ல என்று பலர் கூற நான் கேட்டுள்ளேன்.
7. பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல் நடைமுறை
8. கூட்டு கடமைகள் பற்றி – சகாத், உல்ஹியா
No comments:
Post a Comment