
அண்மைகாலமாக அதிகரித்துவரும் நவீனத்துவ உற்பத்தி மாற்றங்கள் பல்வேறு தாக்கங்களை மானிட உடலியல் ரீதியாக உண்டாக்கியுள்ளது. இதனை இழிவலவாக்கும் முகமாக நிற அடையாளங்களை கொண்டு மனிதர்கள் இலகுவில் புரிந்துகொள்ளவும் இன்னும் தங்களுக்கு உகந்த தரமிக்க உற்பத்திகளை கொள்வனவு செய்யவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் உணவு, மருந்து, அழகியல் கிரீம்கள் மற்றும் சில சேர்மானங்கள் போன்றவற்றில் நிற அடையாள முறைமை நவீனத்துவமாக காட்சிப்படுத்தப்பட்டு மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. இருந்தபோதும் இந்த சமிஞ்சைகளை பலர் அன்றாட வாழ்வில் கருத்தில் கொள்வது கிடையாது.

குறிப்பாக உணவு உற்பத்தியில் சக்கரை (சீனி) அளவு, கொழுப்பு உள்ளடக்கம் மற்றும் சில இரசாயன சேர்மானங்களின் அளவுகளை Traffic Light color coding system என்ற சமிஞ்சை அடிப்படையில் வகைப்படுத்தி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குகிறது உற்பத்தி நிறுவனங்கள். மேற்படி அடையாள முறைமை அரசின் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட அரச சட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிறங்களில் குளிர்பான உற்பத்தியில் பயன்படும் சிப்பு நிற வர்ண அடையாளம் அதிக சீனியையும், மஞ்சள் இடைநிலை சீனியையும், பச்சை மிக குறைவான சீனி அல்லது சீனி முற்றாக அற்ற நிலையினை குறித்து நிற்பதாகும்.

இதேபோல் நாம் தினமும் பயன்படுத்தும் அடுத்த ஒரு பொருளே பற்பசை (Toothpaste). இவற்றிலும் இவ்வாறான நிற அடையாள முறை பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் பச்சை - இயற்கை சேர்மானம், நீளம் - இயற்கையுடன் மருத்துவ சேர்மானம், சிவப்பு - இயற்கை கலந்த இரசாயன சேர்மானம் மற்றும் கருப்பு - முழுமையாக இரசாயன சேர்மானத்தை உள்ளடக்கிய கூட்டுத்திரவியம் என்று விழிப்புணர்வு உண்டாக்க அடையலாம் இடப்பட்டது. இவ்வறான அடையாளங்கள் எம்மில் எத்தனை நபர்கள் அவதானித்து எமது பாவனை பொருட்களை உபயோகம் செய்வதுண்டு என்றால் மிக குறைவான ஒரு தரப்பாரே உள்ளார்கள் என்பது புலனாகின்றது.
இவ்வாறு பல்வேறு பொருட்களில் இவை காட்சிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக நாம் சாப்பிடும் சொக்லேட், இனிப்பு வகை, மற்றும் சவர்காரம், சம்போ, சிலவகை பேசியல் கிளீனர், பேசியல் கிரீம், லிப்டிக் கிரீம் போன்றவற்றை குறிப்பிட முடியும்.

பொதுவாக இயற்கை கூட்டுதிரவிய உள்ளடக்கத்தை கொண்டவை சந்தைகளில் விலை உயர்வானதாக இருப்பதுடன் இரசாயன கலப்படம் கொண்டவை மிக குறைவான மலிவான விலையிலும் கிடைக்கப்பெறும். பொதுவாக வளர்முக நாடுகளில் சில உற்பத்தியில் உயர்வாக உள்ள நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதன் காரணமாக தரம் குறைந்த மற்றும் இரசாயன அளவுகள் அதிகம் கொண்ட உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது.
மக்களின் அறியாமை மற்றும் பொருளாதார பின்னணி என்பன எமது உயிரை நாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு நாங்களே பின்னியில் இருக்கின்றோம். ஆகவே மேற்படி விடயத்தில் கற்ற சமூகம் ஒரு விழிப்புணர்வை சமூக அரங்கில் கொண்டுவருவதன் மூலமாக தரமான உற்பத்திகளை நுகர அதிக வாய்பளிக்கப்படும். இன்னும் சுகாதரமிக்க அடுத்த தலைமுறை தோற்றம் பெறவும் வழிகோலும்.
No comments:
Post a Comment