சமகால நவீன அறிவியல் மனிதன் உலகத்தில் இருந்துகொண்டு உலகத்தை மாசாக்கிகொண்டிருந்து வேறு கிரகங்களை தேடி அதில் மானிடக்குடிகள் வாழ சாத்தியப்பாடுகள் இருக்கின்றதா என்று ஆய்வு செய்துகொண்டு இருக்கின்றான். அக்கறை மாட்டிற்கு இக்கரை பச்சை என்பார்கள் அதனைப்போல மானிடன் புது உலகத்தை தேடும் பணியை மிக நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்றான்.
ஆனாலும் மனிதனுக்கு சாத்தியமான ஒரு குடியிருப்பு தொகுதியை (எலிசியம்) விண்வெளியில் அமைக்க சாத்தியகூறுகள் உண்டென்று விஞ்ஞானிகள் எதிர்வுகூறல் கூறியுள்ளார்கள். இருந்தபோதும் இது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதில் சிக்கல் தன்மை இருதபோதும் ஆங்கிலத்தில் இதனை அடிப்படையாக்கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்து ஒரு கற்பனையினை நிஜத்தில் கொண்டுவந்த திருப்தியை அளிக்கின்றது.

அவ்வாறான கருப்பொருளில் வெளிவந்த உலகப்புகழ் பெற்ற திரைப்படமே Elysium என்ற திரைப்படம். August 7, 2013 இல் Neill Blomkamp தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் பூமியில் உண்டான இலத்திரனியல் கழிவு மற்றும் சூழல் மாசாக்கள் காரணமாக பூமியில் உள்ள மனிதர்கள் விண்வெளி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் நிலை உண்டாகின்றது. அவ்வாறானதொரு குடியிருப்பிற்கு அனுமதிபெற குறித்த அளவு பொருளாதார பின்னணி கொண்டிருக்க வேண்டும். பூமியில் வாழும் ஒருவன் எவ்வாறு அந்த எலிசியம் குடியிருப்பிற்கு அனுமதி பெற எவ்வாறான கஷ்டங்களை சோதனைகளை அனுபவித்து தனது முயற்சியில் வெற்றி பெறுகின்றான் என்பதை அடிப்படையாக்கொண்டு நகரும் கதையின் பாங்கு உண்மையில் சுவாரஸ்யமான போக்கை கொண்டுள்ளது.
அதி நவீன தொழிநுட்ப ஆய்வு கூட வசதிகள் மற்றும் செயற்கையாக உருவாக்கிய சுற்றுப்புற சூழல் அமைப்பு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் உள்ளடக்கி அமையும் எலிசியம் ஒருவகை திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மானிட உலகம் என்றுதான் கூறவேண்டும்.

அல்குர்ஆன் ஆய்வின் படி மேற்படி குடியிருப்பு சாத்தியமாகுமா???
"பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” (அல்குர்ஆன் 2:36, 7:24)
பூமியை போன்ற பல சாத்தியக்கூறுகள் கொண்ட கிரகங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளார்கள். இருந்தபோதும் மனிதன் வாழ பூமி மாத்திரமே சாத்தியமானது என்று அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளர்கள்.
உதாரணமாக பூமியின் சுழற்சி வேகம், காலநிலை மற்றும் தற்ப வெற்ப நிலைமை, வாயு மண்டலம், உட்பத்தியாக்கியான தாவரங்கள், சூரியனில் இருந்தான பூமியின் தூரம், புவிக்காந்த மண்டலம், சந்திரன் உபகோலாக கொண்டு காணப்படுவது, மனித ஆயுள் காலம், நீரின் மூன்று நிலை படிநிலைகள் மற்றும் இன்னோறென்ன என்பவற்றை உதாரணமாக கூற முடியும். இவைகள் யாவும் இயற்கையாக தோன்றியவைதான் என்று சில கற்ற முட்டாள்கள் கூறுவதை கேட்கையில் சற்று வேடிக்கையாக அமைகின்றது பலபொழுது.
No comments:
Post a Comment