வகுப்பறைக் காலம் 1~5
மூதூர் அல்-ஹிலால் பள்ளியே என்னை தத்தெடுத்து வளர்த்த தாய். இத்தாயின் பாசறையில் வளர்ந்த ஒரு நாற்றே நான். என்னைபோன்ற பல நாற்றுகள் இன்றும் அந்த கமத்தில் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அவ்வாறு வளரும் கன்றுகளை பராமரித்து பாதுகாத்து நல்ல அறுவடையை உண்டுபண்ணும் கமத்தொழில் காரனே இன்றைய என் தலைப்பின் கதாநாயகன்.....
1999 இல் ஒரு நாற்றாக நடப்பட்ட நான் 2010 வரை வளர்க்கப்பட்டேன். நான் வளர்வதற்கு உரமும் பூச்சிகொல்லிகள் தெளித்தும் களைகள் அகற்றியும் என்னை பரமாரித்து பாதுகாத்த விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மனிதனுக்கான உணர்வுகளை மதித்தும் சில உணர்வுகளை மிதித்தும் (கோபம், கவலை, பொறாமை, வஞ்சகம், சுயநலம்) அன்போடு எவ்வாறு கற்றுத்தர உன்னால் மட்டும் முடிகின்றதோ தெரியவில்லை இன்றுவரை எனக்கு!
தாயாகவும், தந்தையாகவும், சகோதரனாகவும், நண்பனாகவும் சூழ்நிலைக்கு ஏற்றால்போல் உன்னை நீயே மாற்றி என்னோடு உறவாட யாரிடம் கற்றுக்கொண்டாயோ தெரியவில்லை.

எதிர்பார்ப்பற்ற பயன்தரும் கல்வியும் ஒழுக்க விழுமியமும் கற்றுக் கடன்தந்த உனக்கு எவ்வாறு கடனை அடைக்கப்போகின்றேனோ தெரியவில்லை. மீண்டும் உன்மடியில் ஒரு பிள்ளையாக வளரும் “வரம்” தரவேண்டுமையா நீ....

எனது ஆரம்ப பாடசாலையின் எந்தன் ஆசான்களையும் அன்றைய காலத்தில் எனக்கு அறிவை ஊட்டிய வெளியக ஆசான்களையும் இத்தொகுப்பு உள்ளடக்கியதாகும். சுமார் 76 ஆசான்களை உள்ளடக்கிய இப்பதிவு இன்ஷா ஆல்லாஹ் எதிர்வரும் காலத்தில் ஒரு நூலாகவும் வெளியீடு செய்யப்படும்.
அன்னை மடியிலே உயிர்பெற்று இரு வருடங்கள் வளர்ந்தேன்..... ஆனால் உன்மடியிலே பன்னீர் வருடங்கள் உண்மை உயிர்பெற என்னை வளர்த்தாயடா.....
வகுப்பறைக் காலம் 6~9

அ-ன்னையும் ஆ-சானும்
++++++++++++++++++++
அன்பெனும் பாலூட்டினாள்
மடி அன்னை
அறிவெனும் பாலூட்டினான்
மட ஆசான்
தன்னுடலுடன் மனிதன்
தருவாள் அன்னை
தன்னறிவுடன் மாமனிதன்
தருவான் ஆசான்
சுயநலத்துடன் சுகமினைந்த
ஒருபகுதியான் அன்னை
பொதுநலத்துடன் சீர்பெற்ற
ஒருபகுதியான் ஆசான்
ஓர்பிள்ளை பசி
தீர்ப்பாள் அன்னை
ஓராயிரம்பிள்ளை பசி
தீர்ப்பான் ஆசான்
கள்ளமில்ல பாசம்
புகுட்டுவாள் அன்னை
கள்ளமில்ல பாடம்
புகட்டுவான் ஆசான்

தவறுகள் செய்வின்
மறைப்பாள் அன்னை
தப்புகள் செய்வினும்
மறைத்துமறப்பன் ஆசான்
விரல்நுனி கோர்த்து
வழிநடப்பாள் அன்னை
விரல்நுனி கோந்து
வழிநடத்துவான் ஆசான்

பத்தாம் மாதம்
கொடிஅறுப்பாள் அன்னை
பத்தாண்டு காலமும்
கொடிசேர்ப்பான் ஆசான்
சில்லறை தந்து
வளர்ப்பாள் அன்னை
சில்லறைதான் வாங்கி
வளர்ப்பான் ஆசான்
அ-வென்ற அந்த(ம்)
எழுத்தோ அன்னை
ஆ-வென்ற ஆதி
எழுத்தோ ஆசான்
என் ஆசானுக்கே சமர்ப்பணம்........
வகுப்பறைக் காலம் 9~11

ஆசான் என்பவன் என்றும் ஆசானாக இருப்பதில்லை. மாறாக அவன் தன் மாணவனுக்கு நண்பன், உறவினர், சகோதரன், தந்தை இன்னும் அன்னையாகவும் சூழ்நிலைக்கு ஏற்றால் போல் தன்னை மாற்றிகொள்ளும் சாமர்த்தியசாலி மாத்திரமல்லாது அவன் சிறந்த திறமைசாலியும் கூட.
அந்தவகையில் ஒரு மாணவனின் தேவை, சந்தர்பம், உடல் உள சமூகவியல் சிந்தனை கொண்டு வழிகாட்டி வழிநடத்தும் ஆளுமை படைத்தவன். இவ்வாறான பல சிறப்பான தனித்துவ இயல்புகள் கொண்ட ஆசான்களே எனக்கு இறைவன் தந்த
#எந்தன்_ஆசான்....

பாடசாலையில் கல்வி என்ற ஒரு குறுகிய வட்டத்திற்கு அப்பால் ஒரு மாணவனை சிறந்த நற்பிரஜையாக தோற்றுவித்து சமூகத்திற்கு உயிரூட்டும் நல்லதோர் சேவை புரியும் இவர்கள் என்னைபோன்ற மாணவர்கள் உள்ளத்தில் மாத்திரமல்லாது உதிரத்திலும் ஊறிப்போன உறவுகள்.

இவர்கள் கல்வியை மாத்திரம் கற்றுத்தரவில்லை. இவர்கள் எனக்கு உண்மையில் கற்றுத்தந்தது பண்பாட்டையும் சிறந்த கோணலுரா சிந்தனைகளையும். அன்று அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொரு அறிவுரையும் பசுமரத்து ஆணிபோல் இன்றும் மனதில் பதிந்து உள்ளது. சிறந்த ஆசான்கள் சிறந்த மாணவ சமூகத்தை சமுதாயத்தில் சங்கமிக்க உறுதுணையாக திகழ்கின்றான்.
அவர்கள் எங்களை வழிபிறலாது வழிநடத்த சில பொழுதுகள் எங்களை கண்டித்து நடந்ததுண்டு. ஆனால் அன்று அவைகள் கசப்பாக இருந்தாலும் இன்று எமது வாழ்வு இனிப்பாக தித்திக்க அவர்கள் அன்று ஊட்டிய மருந்து என்று இத்தருணம் உணர்கிறோம்.
யா அல்லாஹ் உனது அருள்கொண்டு அறிவெனும் ஒளியை எமக்கு ஊட்டிய ஆசான் எனும் எந்தன் அன்னைக்கு ஈருலகிலும் அவர்களை பொருந்தி உன்னத கூட்டத்தில் ஒருவராக சேர்த்தருள்வாயாக................
(ஆமீன் ஆமீன்)
வகுப்பறைக் காலம் 1~5
வகுப்பறைக் காலம் 6~9
வகுப்பறைக் காலம் 9~1
No comments:
Post a Comment