
இதன் தாக்கம் சிந்தை மிக்க மனிதன் தன்னை அடையாளப்படுத்தவும் மற்றும் தனது சிந்தனையினை தனித்துவப்படுத்தவும் இறைவன் என்ற கருவை களைக்க முயற்சித்து பாரியளவில் வெற்றியும் கண்டுள்ளான் என்பதனை காணமுடிகின்றது. இவ்வாறான வெற்றியின் பிரதிபலன் உலக சனத்தொகையில் அதாவது 7.5 billion இல் 1.6 Billion இறை மறுப்பாளர்களை (நாஸ்திகர்களை) தோற்றுவித்துள்ளது. இருந்தபோதும் இவ்வாறான நாஸ்திகர்கள் இடத்தில் தன்னை அறியாமலேயே ஒரு சிறு சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றது இறைவன் இருக்கின்றானோ என்று.... இது மானிட உளவியல் கூறும் ஒரு உண்மை நிலைப்பாடு.

கண்ணால் காண்பதை மட்டும் ஏற்கும் மனோநிலைமை அதிகரித்து வரும் சமகால சூழலில் ஏன் கண்ணை திறந்து பார்க்க வில்லை என்ற ஒரு கேள்வி எழுகின்றது நாஸ்திகர்களை நோக்கி....
ஏனோ தெரியவில்லை நாஸ்திகர்கள் தங்களை சூழவுள்ள பல போலி சிந்தாந்த கொள்கை மற்றும் நம்பிக்கையை சிந்தித்து சிறப்புற ஒரு படி உயர்நிலை பெற்றதன் விளைவோ இறை நிராகரிப்பு கொள்கை மனதில் குடிகொள்ள வாய்பாகியதோ தெரியவில்லை!!!!!! ஆனாலும் பல நாஸ்திகர்கள் இறைவனை தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தேடலை புதிய பரிணாமத்தில் பரிமானம் அடையச்செய்தால் ஒருவேளை இவர்களின் கேள்விகளுக்கு விடைகிடைக்க வாய்ப்புள்ளது...
எதேர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்கள் மூலமே இயற்கை என்ற ஒன்று தோற்றம் பெற்றது என்ற நிலைப்பாடு பலரது மூலோபாயமாக இருந்து வருகின்றது. சரி அதை பற்றி சற்று பாப்போம்.
பெருவெடிப்பு நிகழ்வின் மூலமே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெற்றது. இது இயற்கையாக நிகழ்ந்தது என்று வைத்துக்கொண்டால் பல கேள்விகளுக்கு பதில் தொக்கி நிற்கும் நிலைப்பாடு உருவாகின்றது.... அவற்றில் சில கீழே

2. ஏன் பூமியில் மாத்திரம் உயிரினம் தோற்றம்பெற வேண்டும்?
3. பூமியின் அமைப்பு, சூழ்நிலை ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்?
4. சக்திகள், வளங்கள் தொடர்ந்து நிலைபேறு அடைகின்றதே?
5. எந்தவொன்றிற்கும் தொடக்கம் காட்டும் இந்த உலகம் பிரபஞ்ச உருவாக்கத்திற்கு தொடக்கம் இதுவரை காட்டவில்லையே?
6. டார்வின் கோட்பாடு பொய் என்றால் மனிதன் எவ்வாறு உருவாகினான்?
No comments:
Post a Comment