
அவ்வகையில் மூளையின் அதீத செயல்திறன் E.S.P (Extra Sensory Perception) காரணமாக சில நம்பத்தகாத நடத்தைக் கோலங்கள் வெளிக்காட்டப்படும். அவற்றில் டெலிபதியும் (Telepathy) ஒன்றாகும். Telepathy மேலாக இன்னும் சில இத்துறை சார்ந்த விநோதமிகு செயல்திறன்களை குறிப்பிட முடியும்.
Precognition (முன்னறிவுப்பு/ முன்னுணர்வு) - எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை முன்கூட்டியே முன்னறிவிப்பு அல்லது வெளிப்பாடு செய்வது.
Clairvoyance (மனக்கண் பார்வை) - தான் இருக்கும் இடத்தில் ஆல்லாத வேறு தொலைதூரத்தில் நடப்பவற்றை அறிவிப்பு செய்வது.
Retro cognition (கடந்தகால அறிவிப்பு) - இறந்தகாலத்தில் இருந்த நபரின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் அவர் பற்றி தொடர்பில்லா ஒருவர் நிகழ்காலத்தில் அறிவிப்பு செய்வது.
மேற்படி நடத்தைகள் வரலாற்றில் பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.

Telepathy (உள்ளுணர்ச்சி) - இரண்டு உள்ளங்கள் உளவியல் ரீதியாக மிக நெருங்கிய தொடர்பில் இருக்கின்ற வேளையில் ஒருவர் சார்பாக அடுத்தவர் உணர்வில் தொடர்புகொள்வது. இது பண்டைய காலங்களில் நடைமுறையில் இருந்துள்ளதனை வரலாற்றில் காண முடிகின்றது. இதில் மற்றுமொரு பிரிவும் உண்டு. அதாவது ஒரே சிந்தனையில் உள்ள இரு வேறுபட்ட உள்ளங்கள்.
பொதுவாக இந்த திறன் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றது. அதில் ஒருசிலர் தங்களின் திறனை வளர்த்துகொண்டதனால் மேலும் விரிவாக அவர்களினால் செயற்பட முடியும் என்கிறது அறிவியல்.

எளிமையாக கூறுவதாயின் நீங்கள் ஒருவரை நினைக்கும் போது அவர் உங்களிற்கு முன் வருவது, தொலைபேசி அழைப்பு செய்வது, அல்லது அவர் சார்ந்த செய்தியை நீங்கள் கேள்வியுருவது போன்றவற்றை குறிப்பிட முடியும்.
பொதுவாக எமது எண்ணங்கள் மற்றும் சில சிந்தனைகள் மூளையின் மூலமாக வெளிப்படும் ஒருவகை மின்காந்த அலைவுகளாக சூழலில் பரவிக்காணப்படும் என்று நவீன அறிவியல் தெரிவிக்கின்றது. ஆனாலும் இதற்கு நிறுவப்பட்ட ஆதாரங்கள் முன்வைக்கவில்லை. இதனை ஒரு கருதுகோளாகவே முன்வைக்கின்றார்கள் சில ஆதாரணங்கள் வாயிலாக.

குறிப்பு - டெலிபதி பற்றி தமிழ் 2016 இல் நுண்ணுணர்வு என்ற திரைப்படம் வெளிவந்தது. ஆங்கிலத்தில் X-man, Scanner Cop, Race to Witch Mountain போன்ற திரைப்படங்களை குறிப்பிட முடியும்.
எது எவ்வாறோ நாம் எமது மூளையினை பற்றி நிறையவே அறியவேண்டி உள்ளதுடன் அதனை நிறையவே பயன்படுத்தவேண்டி உள்ளது என்று மட்டும் புலனாகின்றது.
தேடல் வலைத்தளங்கள்
- https://en.wikipedia.org/wiki/Telepathy
- https://en.wikipedia.org/wiki/The_Extended_Mind
- http://consc.net/papers/extended.html
- https://www.insidescience.org/video/telepathy-real
- https://www.britannica.com/science/telepathy
No comments:
Post a Comment