தனது வாழ்வை பொது சேவைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் தன்னையும் இனைத்துக்கொண்டர் “
#என்னால்_முடியும்” என்ற நம்பிக்கையை பலரில் விதைத்தவர் இயற்க்கையான சுவாசத்தை இழந்தும் செயற்கையான சுவாசத்துடன் வாழ்ந்து சாதித்து வந்த இரும்புமனிதன்.
19 வருடங்கள் படுக்கையில் இருந்துகொண்டே விரல் நுனியின் அசைவில் தனது பறந்துபட்ட சிந்தனையின் பலத்தை உலகிற்கு வெளிக்காட்டி நிரூபித்தார்.
#மூன்று_நூல்களை வெளியீடு செய்து உலகில் தான் இருந்த அடையாளத்தை எழுத்துக்கள் மூலம் தன்னை இவ்வுலகில் என்றும் வாழவைத்துவிட்டார். சிறந்த எழுத்தாளன் என்பதற்கு அப்பால் சிறந்த ஊக்குவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுருக்க வரலாறு
1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி தனது உம்மாவின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் வரைக்கும் மாத்தறையில் வசித்துவிட்டு, பிறகு, தனது வாப்பாவின் பிறந்த ஊரான தர்கா நகருக்குவந்து குடியேறினர்.“தர்கா நகர் ஸாஹிறா கல்லூரியில் தான் நான் கல்வி கற்றேன்.
பாடசாலைக்கு நடந்து செல்வதில் சிரமங்கள் இருந்தன. இரண்டாம் வகுப்பு வரை நடந்து சென்றேன் ஆனால் பிறகு எனது நாநா தான் என்னை சைக்கிளில் கூட்டிச் சென்றார். ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய பின்பு ஆகஸ்ட் விடுமுறை முடிந்ததும் பாடசாலை செல்ல முடியவில்லை. அடிக்கடி கீழே விழுவதும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முடியாத பல சிக்கல்கள் இருந்தன. ஐந்தாம் வகுப்புக் கல்வியுடன் பாடசாலை வாழ்க்கை முற்றுப் பெற்றது. வகுப்பில் பாடங்களில் நான் எனது ஏனைய சகோதரர்களைப் போன்று திறமை காட்டவில்லை. பாடசாலைக் கல்வி ஐந்தாம் வகுப்புடன் முடிந்ததும் எனக்கு வீட்டிலே இருப்பது பெரிய சந்தோசத்தைத் தந்தது. பாடசாலை செல்வதிலும், வகுப்பறையில் கூட நடமாட முடியாத நிலை காரணமாக வீட்டில் இருக்க கிடைத்தது மனதிற்கு பெரிய ஆறுலாய் இருந்தது.” என்கின்றார் எழுத்தாளர் இர்பான்.

இர்பானுக்குநேர்ந்தது என்ன? என்னநோய் அவரை பாதித்தது? ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவரால் எப்படி மூன்று பிரசுரங்களுக்கு உயிர் கொடுக்க முடிந்தது?
“பாடசாலைக் கல்வி இடையில் விடுபட்டதும் எனக்கு ஆங்கில மொழியில் பேசக் கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தது. எனது வாப்பாவின் மூத்த தம்பியின் பிள்ளைகள் ஆங்கில மொழியில் தான் கல்வி கற்று வந்தார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாமலிருந்தமையும் எனக்கு ஆங்கிலம் தெரியாமலிருந்தமையும் அவர்களோடு பேசி உறவாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது என் மனதைப் பெரிதும் பாதித்தது. எப்படியாவது ஆங்கில மொழியைக் கற்று அவர்களுடன் ஒரு நாளைக்கு பேசுவேன் என்று உறுதி பூண்டேன். ஆங்கிலம் படிப்பதை பெரும் சவாலாகக் கருதி எனக்கு நானே ஆசானானேன். எனது தனி முயற்சியால் அச்சவாலை வெற்றிகொண்டேன்.

“என் கை விரல்களை மட்டுமே என்னால் அசைக்க முடியும். முதல் இரண்டு நூல்களும் எனது லப்டொப்பில் ஒன்ஸ்க்றீன் கீபோர்ட் உதவியுடன் மெளஸால் ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்வதன் மூலம் டைப் பண்ணினேன். மூன்றாவது நூலை எழுதும் போது என் விரல்களால் மெளஸை பயன்படுத்த முடியாமல் போயிருந்தது. ஆகவே எனது ஐபோனில் தான் Silent Thoughts முழுதையும் டைப் செய்தேன்.”
“வாழ்க்கை என்பது ஒரு சோதனைக் களம். சோதனைகள் பல விதமானவை. அவைகளை எவ்வாறு ஒருவர் நோக்குகிறார் என்பதே முக்கியமானது. இறை நம்பிக்கையும் மன பலமும் சோதனைகளைச் சாதனைகளாக ஆக்கிக்கொள்ள உதவுமென திடமாக நம்புகிறேன். சாதித்த மனிதர்களைப் பார்த்து எங்களால் அப்படி முடியவில்லையே என நினைத்து மனம் வாடிப் போகாமல் அவர்களின் வாழ்வினிலிருந்து எமது வெற்றிக்கு சாதகமான விடயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பெற்றோரை என்றும் மதிப்பவர்களாகவும் அவர்களின் அன்பைப் பெற்றவர்களாகவும் இருப்பின் இறைவன் என்றும் உங்களைக் கைவிட மாட்டான்.” என்கின்றார் உற்சாக நாயகன்.

இறுதியாக… “இன்று வரைக்கும் இன்னொரு நூல் எழுதுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆங்கிலத்தில் சிறுகதை எழுதி பேஸ்புக்கில் பதிவிடுவதில் ஆர்வமாய் உள்ளேன். இரண்டு கதைகள் எழுதினேன். இன்னும் எழுத உத்தேசித்துள்ளேன். தமிழிலும் கவிதை போன்று எழுத முயற்சித்து எழுதியும் உள்ளேன்.அல்லாஹ்வின் அருள் எனக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று சொல்வதில் என் மனம் குளிர்ச்சியடைகிறது. பெற்றோர்களின் தியாகம், சகோதரர்களின் பாசம், உறவினர்களின் உற்சாக வார்த்தைகள், நண்பர்களில் முக்கியமாக பேஸ்புக் நண்பர்களின் உந்துதல் என்பன நான் பெற்ற அருட்கொடைகளாகும்.” என்று சொல்லி முடிக்கின்றார் எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ்.
ஷதகத்துள் ஜாரியா (நிரந்தரமான தர்மம்) செய்த இவரையும் இவரின் நோக்கையும் அல்லாஹ் பெருந்திக்கொள்ளட்டும்.
No comments:
Post a Comment