
“முற்றத்து மல்லிகை மணப்பதில்லை” என்பதற்கு நாம் மூதூர் மண் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. உலக வரலாறுகள் பேசும் எம் தாயக பூமியின் அருமை பெருமை எப்போது உணரப்போகின்றோமோ தெரியவில்லை.
கொட்டியாபுரபற்று என்றாலே இயற்கை எழில்கொஞ்சும் பூமிதான் பலரது நினைவில் வருவதுண்டு. மூதூரின் பெயர் காரணங்கள் எவ்வாறு ஊரின் தனித்துவத்தை பேசுகின்றதோ அதேபோல் ஊரின் தனித்துவம் பேசும் சுவடுகளையும் நாம் கொண்டுள்ளோம் என்பதும் உண்மை.

அவ்வாறு இணங்காணப்பட்ட சில சுற்றுலாத்துறை தளங்கள்
1. தடயம் அருங்காட்சியகம் (பஹ்ரியா நகர்)
2. நொக்ஸ் மரத்தடி (நொக்ஸ் வீதி)
3. கேவுலியா வெளிச்சவீடு (சம்பூர்- கேவுலியா)
4. மூதூர் இறங்கு துறைமுகம் (தக்வா நகர்)
5. மூதூர் கடற்கரை (பஹ்ரியா நகர் தொடக்கம் கபீப் நகர் வரை)
6. மூதூர் தேவாலையம் (மூதூர் மத்தி)
7. மூதூர் பெரிய பள்ளிவாயல் (நொக்ஸ் வீதி)
8. பழங்கால கோயில் (சேனையூர்)
9. மலையேற்றம் - Hiking (ஜபல் நகர் – மூன்றாம் கட்டை)
10. பழங்கால கல்லறை (மூதூர் மத்தி)
11. முகாமிடல் - Camping (இலங்கைத்துறை முகத்துவாரம், கொக்கட்டி)
12. படகு பயணம் - Boating (கட்டபறிச்சான் ஆறு தொடக்கம் மூதூர் கடற்கரை வரை)
13. தூண்டில் மீன்பிடி - Bait Fishing (காரைத்தீவு, உமுறி ஆறு, மூதூர் இறங்கு துறைமுகம்)
14. நீச்சல் பயிற்சி இடம் - Swimming (தோப்பூர், மூதூர் கடற்கரை ஓரம்)
15. கழிமுகங்கள் (நாவலடி - கங்கை)
16. சேனைப்பயிர் செய்கை (அரபா நகர், இறால்குழி, சேனையூர், வேதத்தீவு)
17. பௌத்த விகாரை (இலங்கைத்துறை முகத்துவாரம்)
18. தோணிக்கல் மலை (சம்பூர்)
19. தோப்பூர் சுதந்திர போராட்ட வீரன்.

என்னால் இணங்காணப்பட்ட ஒருசில இடங்களை இங்கே பதிவிட்டுள்ளேன். ஆனாலும் இங்கே கூறப்பட்ட அநேக இடங்கள் முறையான பராமரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் பற்றாக்குறை காரணமாக எமது ஊரின் பெருமையை நாமே புதைக்கின்ற சூழலை உருவாக்கியுள்ளோம்.
மேலும் கடல் வளம் மற்றும் இயற்கை கடற்கரை சூழல் தீவுகள் போன்றவற்றை எமது மூதூர் பகுதி அதிகமாக கொண்டு காணப்படுகின்றது. இருந்தபோதும் இதனை வெறும் மீன்பிடி மற்றும் பெருமைப்பட மட்டுமே பயன்படுத்துகின்றோம். முறையான அனுமதி கொண்ட கடல் பயணம் மற்றும் சுற்றுலா போக்குவரத்து போன்றவற்றிற்கு திட்டமிட்டு முறையோடு பங்களிப்பு செய்தால் எமது ஊருக்கான வருமானம் மட்டுமன்றி எமது ஊரில் சுயதொழில் வளர்ச்சிக்கும் பங்காற்றும் என்பதில் ஐயப்பாடில்லை.

சூழல் பண்பாட்டு பாரம்பரிய கட்டுப்பாட்டுடன் கூடிய பராமரிப்பிற்கு மூதூர் சமூகத்தில் குறிப்பாக கரையோர சமூகத்தின் ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகள் வலுவூட்டப்படின் சிறப்பான வருமான துறையையும், மூதூரின் தனித்துவ பெருமையையும் உலகிற்கு பறைசாட்ட முடியுமாக இருக்கும்.
இவ்விடயத்தை யாவரும் கவனத்திலெடுத்து உங்களால் இயன்ற ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கிட முன்வரவேண்டும். குறிப்பாக மூதூர் முகநூல் பாவனையாளர்கள். காரணம் சமகாலத்தில் ஏற்பட்ட மூதூரின் அநேக எழுற்சிகர மாற்றங்களுக்கு இந்த சமூக வலைத்தளம் ஏதோ ஓர் வகையில் காரணமாகியுள்ளது. அந்தவகையில் இதுவும் சமூகத்தில் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment