பிரபஞ்சம் முழுவதையும் அலசி ஆராய்கையில் பூமியினை ஒத்த எந்தவொரு கிரகமோ இல்லை என்று கூறும் அளவிற்கு மனிதனின் தனித்துவம் நிலைபெற்று ஊர்ஜீதமகியுள்ளது. இருந்தபோதும் அறிவியல் சளைப்பில்லாமல் தனது எட்டமுடியாத ஒரு இலக்கையும் காரணியையும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது.
சூரிய குடும்பத்தில் தனக்கென ஒரு தனித்துவ இருப்பை உறுதிசெய்த புவி எதேர்ச்சையாக நடைபெற்ற இயற்கை நிகழ்வான பெருவெடிப்பில் தோற்றம் பெற்றது என்று கூறுகின்ற நாஸ்திகர்கள் ஏன் பூமியின் அமைவு பற்றி சற்று ஆழமாக சிந்திக்க தவறினார்களோ தெரியவில்லை....
சூரியனில் இருந்து 149.6 million km தூரத்தில் சரியாக அமைந்துள்ளது. இவ்வாறு அமையாமல் அன்மையாகவோ அல்லது தொலைவாகவோ அமைந்து இருந்தால் இந்த பூமியில் உயிரின வாழ்க்கை சாத்தியமாகுமா???? ஆக இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று உங்கள் நம்பிக்கை தளரவில்லையா????
“பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” (அல்குர்ஆன் 2:36)
சந்திரன் பூமிக்கு அவசியமா???
இவ்வினாவிற்கு எளிமையாக விடை தேடிவதனால் இதுவும் இறைவனை நினைவு கூறுகின்றதே.... அதாவது சந்திரன் அமையப்பெற்ற தூரம், சந்திரன் அளவு, சந்திரன் சுழற்சி வேகம், சாத்திரன் ஈர்ப்பு விசை என்பன பூமியின் உயிரின நிலவுகைக்கு ஒரு மிக அடிப்படை வேண்டப்பாடாகும்.
கிரகணங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றது?

பூமியை பொறுத்தவரையில் இரு கிரகணங்கள் நிலவுகின்றது. சூரிய கிரகணம், சந்திரக் கிரகணம். இவ்வாறன கிரகணங்கள் பூமியில் மாத்திரமன்றி ஏனைய கோள்களிலும் உண்டாகும்.
சூரியனை புவியும், புவியை சந்திரனும் தங்களின் சுழற்சிப்பாதையில் வருகின்றபோது ஒரே நேர்கோட்டில் இவை மூன்றும் வருகின்ற நிலைப்பாட்டில் கிரகணங்கள் தோற்றம் பெறுகின்றது.
சந்திரன் பூமிக்கு முன்பாக (சூரியன்-சந்திரன்-பூமி) நகரும் போது சூரிய கிரகணமும், சாத்திரன் பூமிக்கு பின்னாக நகரும் போது (சூரியன்-புவி-சந்திரன்) சந்திரக் கிரகணமும் உண்டாகும். சூரியக் கிரகணத்தின் போது பூமியில் சந்திர நிழல் விழும். அதாவது சூரியனை சந்திரன் மறைக்கும். இதுபோல சந்திரக் கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது.
மானிட நம்பிக்கை அடிப்படையில் கிரகணங்கள்.....
பண்டைய கால மக்களின் நம்பிக்கையில் குறிப்பாக கிரேக்க கால மக்கள் கிரகணங்களை கடவுளிற்கு எதிரான சக்தியான றேகன் (Dragon) விழுங்குவதாக நம்பப்பட்டது. இக்கருத்துக்கள் மதங்களின் புனித வேதங்களிலும் இடம்பெற்றதுதான் மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

குறிப்பாக பைபிளின் ஆதாரங்கள் அடிப்படையில் தொடர்ந்து வரும் சந்திர சூரிய கிரகணங்கள் ஒரு முன்னறிவிப்பாக இடம்பெற்றுள்ளது. இதனை யூதர்களும் கிறிஸ்தவர்களும் எதிர்பார்த்து காத்திருந்து அவர்களுக்கு மகிழ்வும் உண்டானது சுமார் மூன்று ஆண்டுகள் முன்னர். அதாவது 2014, 2015 இல் ஏற்பட்ட நான்கு சந்திரக் கிரகணம் மற்றும் இரண்டு சூரிய கிரகணம்.
"கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்" (பைபிள் 2:31)
மேற்படி வசனத்தின் அடிப்படையில் யூதர்கள் நீண்டாலமாக எதிர்பார்த்து காத்திருந்த அவர்களின் புனித தினங்களில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்பட்டமையும் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் அருட்கொடையும், ஆட்சி அதிகாரமும் இன்னும் சக்தி வாய்ந்த தூதரின் வருகையும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு இதில் மாறுபட்டதாக காணப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் ஹதீஸ் கீழ்வருமாறும் அமைகின்றது.
"இமாம் மஹ்தியுடைய வருகையின் அடையாளம் ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு சந்திரக் கிரகணமும் அதே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு சூரிய கிரகணமும் ஏற்படும்" (தாரகுத்னி பாகம் 1 பக்கம் 188)
பழங்கால மனிதர்கள் ஏன் கிரகணங்களை பயந்தார்கள்?????
பொதுவாக மனித வரலாற்றில் கிரகணங்கள் சற்று அச்சத்தை உண்டாக்கும் காரணியாக அமைந்தது. இதற்கான காரணத்தை அண்மைய அறிவியல் ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.
1. UV (புற ஊதா) கதிர்வீச்சுக்கள் சாதாரண அளவை விட பூமியிற்கு வெளிவிடப்படுகிறது.
2. பூமியின் மின்காந்த மற்றும் புவிக்காந்த அலைவுகளில் சடுதியான மாற்றம் உண்டாதல்.
3. பூமியின் ஈர்ப்பு விசையில் மாற்றம் உண்டாதல்.
4. கதிர்வீச்சு தாக்கங்கள் காரணமாக கர்பினைத்தாய், சிறுவர்கள், முதியோர்களில் உடலில் தாக்கம் ஏற்படும்.
சந்திரனும் (கிரகணத்தால்) ஒளியும் மங்கி (அல்குர்ஆன் : 75:8)
உசாத்துணைகள்
No comments:
Post a Comment