மனிதனை பச்சோந்திக்கு ஒப்பாக பல நேரங்களில் பேசுவதுண்டு. இதற்கான அடிப்படைக் காரணம் பச்சோந்தி சூழலிற்கு காட்டும் ஒரு விசேட பண்பே. அந்தவகையில் சூழலில் ஒரு அங்கி தனது பாதுகாப்பு மற்றும் இரை கவ்வல் செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு வித்தியாசமான இசைவாக்கங்களை கொண்டு காணப்படும். அவ்வாறில் குறிப்பாக போலித் தோற்றம் பூண்டுதல் குறிப்பிடத்தக்கது.
போலித் தோற்றம் காண்பிப்பதில் பச்சோந்தி, ஆமடில்லா, தவளை, ஒக்டோபஸ் மற்றும் சில எலி வகைகளை குறிப்பிட்டு கூறமுடியும். அவற்றில் உடலின் நிறத்தை தான் கொண்டுள்ள சூழலுக்கு ஏற்றால்போல் மாற்றும் வல்லமை பச்சோந்தி மற்றும் ஒக்டோபஸ் போன்ற உயிரிகள் கொண்டுள்ளன.
202 இனங்களை கொண்டுள்ள பச்சோந்தி (Chameleon) இனங்கள் பொதுவாக அயனமண்டல காடுகளை கொண்ட நாடுகளான இலங்கை, இந்தியா, ஆபிரிக்க நாடுகள் சில மற்றும் மடகஸ்கார் தீவுகளில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக இயற்கை சாகியங்கள் அதிகம் உள்ளடக்கிய பகுதிகளான மத்தியகோட்டை அண்மித்த நாடுகள் காணப்படும். இவ்வாறன இயற்கை சூழலில் பச்சோந்திகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றமை அறியப்பட்டுள்ளது.
நிறம் மாற்றும் இயல்பு

பச்சோந்திகளின் உடலில் இருவகையான தோல் படை காணப்படும். இந்த தோல் பகுதிகள் கொண்டுள்ள விசேட கலங்கள் கொண்டு காணப்படும் நிறவுரு மணிகள் (Pigments) சூழலில் இருந்து வெளிவிடப்படும் மின்காந்த கதிர்ப்புக்கள் மற்றும் ஒளி அலைகளை உள்வாங்கி அதற்கு ஏற்றால்போல் தனது உடலில் இருந்து கதிர்ப்பை காலல் செய்யும் தரனை இவை பெற்றுள்ளது. இதனால் தன்னை சூழல்வுள்ள புறச்சூழலின் நிறத்தை ஒத்ததான தனது உடலின் நிறத்தை பிரதிபலிக்கின்றது. இவ்வாறு இருப்பதனாலேயே குருடான ஒரு பச்சோந்தியாலும் தனது சூழலிற்கு ஏற்றால்போல் நிறத்தை மாற்றும் திறன் படைத்துள்ளது.

அதுமட்டுமன்றி பச்சோந்திகள் நிறமாற்றத்தை காண்பிப்பது பொதுவாக அதன் உணர்வுகளின் வெளிப்பாடு என்று அண்மைய ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது எதிர்பாலரை கவரவும், செய்தியை பரிமாற்றம் செய்யவும் அநேக பொழுதுகள் நிறத்தை மாற்றுகின்றது.
அசாதாரண சூழல், சில உணவு, மற்றும் ஓமோனின் செயற்பாடுகள் பச்சோந்தியின் நரம்புத் தொகுதியில் குழப்பத்தை உண்டாக்கும். இதனால் சில நேரங்களில் தொடர்ச்சியாக நிறமாற்றத்தை காண்பிக்கவும் வாய்ப்புக்களுண்டு.
வேறு இயல்புகள்
பச்சோந்திகளின் நாக்கு மிக நீளமாக நீண்டு உணவை பிடிக்கும் திறன்கொண்டது. அத்துடன் நாக்கில் ஓட்டும் பசை அமைப்பு காணப்படும். அதுமட்டுமன்றி அளவுகளில் பெரிய பச்சோந்திகள் மேற்கு நாடுகளில் செல்லப்பிராணியாக அதிக அளவில் வளர்க்கப்படுகின்றது. காரணம் இவை மனிதனுடன் நெருங்கிய உளவியல் உறவை பேணுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். இவை நிறமற்றத்தை வெளிக்காட்ட சில காலங்கள் எடுக்கின்றது. அத்துடன் போசனை கூடிய உணவுகளான தாவரத்தின் அரும்புகள் மற்றும் சில பூச்சி இனங்களை உட்கொள்கின்றன.
தேடல் வலைத்தளங்கள்
No comments:
Post a Comment