
முதலில் கண்ணீர் பற்றி சற்று ஆராய்வோம்.
பொதுவாக கூர்ப்பு ரீதியாக முன்னேற்றம் பெற்ற அங்கிகளில் கண்ணீர் என்பது மிக அடிப்படையான ஒன்றாக அமைகின்றது. காரணம் கண்கள் உலர்ந்துவிடாமல் இருப்பதற்கும், கண்களில் நோய்தொற்று, பார்வை கோளாறுகள் உண்டாகிவிடாமல் அமைவதற்கும் கண்ணீர் தேவையாகின்றது.
மனித கண்

கண்ணில் இரண்டு கண்ணீர் சுரப்பிகள் உண்டு. இவை கண்ணின் இரு கூம்பிய பகுதிகள் அமையப்பெற்றுள்ளது. அவற்றில் மூக்கு பகுதியில் இருக்கும் சுரப்பி அளவில் பெரியதாகவும் சுரப்பை அதிகம் வெளியேற்றுவதாகவும் அமையும். இதன் ஒரு பகுதி மூக்கு குழியினுள் திறக்கின்றதாக அமையும்.
மனித கண்ணீர்
உலகில் விலைமதிப்பற்ற காரணிகளில் மனிதனின் கண்ணீர் உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. பொதுவாக மனிதனின் உளவியல் ரீதியான மனோநிலையை வெளிப்படுத்தும் ஒரு செய்தியாக திகழ்வது அவனது கண்ணீரை குறிப்பிட முடியும். சோகங்கள், சந்தோசங்கள், வலிகள், கோவம், காதல் மற்றும் இன்னும் பல உணர்வுகளை உணர்வுபூர்வமாக உயிரூட்டும் உரமாக கண்ணீர் செயற்படுகின்றது.
மனித கண்ணீர் பேசும் மொழிகளின் தாற்பரியம் வாய்களினால் மொழிவது கடினம். இருந்தும் உள்ளத்தினால் உணரமுடியும்.
மனித கண்ணீர் 98% நீர் (water), mucin, lipids, lysozyme, lactoferrin, lipocalin, lacritin, immunoglobulins, glucose, urea, sodium, and potassium போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் காணப்படும் கூறுகள் நுண்ணங்கி எதிர்ப்பு தன்மையை காட்டுவதுடன் அவற்றை அழிக்கும் சக்தியும் பெற்றுள்ளது.
அழுகை
அந்தவகையில் கண்ணீர் மிகப்பெரும் மருத்துவக் குணம் கொண்ட உடலில் சுரக்கப்படும் ஒரு வேதியல் பொருற்களில் ஒன்று. அழுகை மூலமாக எமது உடல் மட்டுமன்றி உள்ளமும் ஆரோக்கியம் பெறுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றது.
- கண்களில், மூக்குக் குழியில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அழிக்கப்படுவதுடன் அகற்றப்படும். (சில நோய்கள் குணமாகும் - கண் வருத்தம், தலைவலி, தடுமல்)
- அழுவதன் மூலமாக உள்ளம் சாந்தம் அடைவதுடன் மன அழுத்தம் குறைகின்றது. இன்னும் புத்துணர்ச்சி பெற்ற பலமான தெம்பு உண்டாகும்.
- நல்ல தூக்கத்திற்கு இது வழிகோலும்.
- கண்பார்வை தெரிவு பெரும்.
- மூலையில் ஏற்படும் வெப்ப விளைவு குறைக்கப்படும்.
- செய்தியை பரிமாற்றம் செய்யும் வழிமுறை
- முகத்தசை, கண்ணீர் சுரப்பியின் தொடர்ச்சியான தொழிற்பாடு வலுப்பெறும்.
- சுவாசம் சீராக்கம் பெரும். (குளிரான காற்று சுவாசப்பையை நிரப்பும்)

- சில வாயுக்கள், ஓமோன்கள் (கிளிசரின்), பிணைப்புக்கள் (வெங்காய சாறு, தேசிக்காய் சாறு), புகை
- பிரதிபலிப்பு (Reflex) - ஒருவர் அழுவதை நாம் பார்த்தால் எமக்கும் அழுகை தூண்டப்படும்.
- உடலியல் வலி, சோகங்கள், கவலை உணர்வுகள், அதீத கோவம் மற்றும் பல
- அழுவதை அல்குர்ஆன் தூண்டுகின்றது
- கண்ணீர் வடிப்பார்கள் (அல்குர்ஆன் 9:92, 5:83) - இவ்வசனம் ஓர் அறிவியல் உண்மை. பார்வையிட (https://www.youtube.com/watch?v=FPDFUH0gcNU)
No comments:
Post a Comment