Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 14, 2018

தன்னிச்சையற்ற செயற்பாடுகள் - கொட்டாவி, தும்மல், விக்கல், புரை ஏறுதல்....

Related imageசாதாரணமாக மனித உடல் என்பது ஒரு தொழிற்சாலைக்கு ஒப்பாகவே கூறுவார்கள். இதற்கான காரணம் தொழிற்சாலையில் எவ்வாறு உற்பத்தி செயன்முறை, கழிவகற்றும் செயன்முறை, சீர்திருத்தமும் ஒழுங்குபடுத்தல் செயன்முறை மற்றும் சக்தி வழங்கல் செயன்முறை நடைபெறுமோ அதுபோல மனித உடலும் மேற்கொண்டு வருகின்றது. தொழிற்சாலையை நிர்வாகிக்க எவ்வாறு தொழிற்சாலை நிர்வாகம் உள்ளதோ அதுபோல மனித உடலில் மூளை, இதயம், ஈரல், மற்றும் பிற உடல் உறுப்பு மற்றும் அங்கங்கள் செயற்பட்டு பூரண செயற்பாட்டை ஒழுங்குபடுத்தும்.

மனித உடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் முக்கிய பொறுப்பை நரம்புத்தொகுதி மேற்கொண்டு வருகின்றது. இதில் தன்னிச்சை (சிந்தித்து முடிவு பெறல்) செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த மூளையும் தன்னிச்சையற்ற (சிந்திக்காது முடிவு பெறல்) செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த முன்னான் நரம்பு தொகுதியும் பங்கேற்கும்.

உதாரணமாக தன்னிச்சை செயற்பாடுகள் - யோசித்தால், வாசித்தல், பதில் கூறுதல், கேள்வி தொடுத்தல், நினைவுபடுத்தல்
தன்னிச்சையற்ற செயற்பாடுகள் - சுவாசித்தல், இதயம் துடித்தல், இரைப்பை குடல் செயற்பாடு, வலி உணர்வின் போது பாதுகாத்தல் (நெருப்பு சுட்டால் கையை எடுத்தல்)

தன்னிச்சையற்ற செயற்பாடுகளில் மேலும் ஒருசிலதே இன்று நாம் பேச இருக்கும் தலைப்பு. அதாவது கொட்டாவி, தும்மல், விக்கல், புரை ஏறுதல் போன்றவற்றை குறிப்பிட முடியும்.

கொட்டாவி (Yawn)
பொதுவாக எமது உடல் ஒட்சிசன் வாயு பற்றாக்குறையை நிவர்த்திக்கவே கொட்டாவி உண்டாவதாக பலர் எண்ணுகின்றார்கள். உண்மையில் இது தவறானது.
Image result for yawnகாரணம் - எமது உடலில் அதிக செயல்திறன் கொண்ட அங்கம் மூளையாகும். இது உடலில் குருதி விநியோகம் அதிகமான பாகமும் கூட. எமது உடல் உஸ்னமாகும் வேளையில் மூளையும் சூடாகின்றது அத்துடன் உடல் குருதியும் சூடாகின்றது. இதனாலேயே மூளை தனது சூட்டை குறைக்க கொட்டாவி செயற்பாட்டை மேற்கொள்கின்றது. 
இதனால் குளிரான வாயு மற்றும் மூளையை சூழவுள்ள தசைகள் மற்றும் குருதியோட்டம் தளர்வுற்று குளிர்விக்கப்படும். எனவே மூளை இயல்பு நிலையை அடையும்.
தடுக்கும் முறை - குளிரான சூழலில் இருத்தல், குளிரான பானங்களை அருதுதல்

தும்மல் (Sneeze)
எமது உடலில் மிக முக்கிய அங்கங்களுள் ஒன்றானதே சுவாசப்பை. மிக மெல்லிய ஈரலிப்பான தசை பகுதியால் ஆனது. இது உட்சுவாச மற்றும் வெளிச்சுவாச செயற்பாடு மூலமாக உடலுக்கு தேவையான வாயுப்பரிமற்றத்தை மேற்கொள்கின்றது.
Image result for Sneezeகாரணம் - சுவாசப்பைக்கு தீங்கு விளைவிக்கும் அந்நிய பொருட்கள் (தூசி, சிறு பொருற்கள், நுண்ணங்கி) மூக்கு வழியாக செல்லும்போது அதனை வெளியேற்றும் செயன்முறையே தும்மல் செயன்முறை. 
அந்நிய பொருட்களை தடுக்கக்கூடிய வழிமுறை சுவாசப்பதையில் அமையப்பெற்றுள்ளது. மயிர்கள், சலியம், நெய் சுரப்பிகள் மற்றும் பல...
தடுக்கும் முறை - அந்நிய பெருட்களை சுவாசப்பதையில் இருந்து வெளியேற்றல்
குறிப்பு - தும்மல் மூலமாக உடலில் இருந்து அழுக்கான சலியம், பல்லாயிரம் நுண்ணங்கிகள் வெளியேற்றப்படுகின்றது. இதனால் தான் மனித வழக்கில் தும்மினால் ஒருவர் இறைவனை புகழும் பழக்கவழக்கம் எம்மிடம் உண்டு....

விக்கல் (Hiccup)
Image result for விக்கல்உண்ணுதல், குடித்தல் செயற்பாடுகளின் போதே விக்கல் உண்டாகும். இதனை தடுக்க பலர் பல்வேறு வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. சில வேடிக்கையாக இருந்தாலும் சில விஞ்ஞான பூர்வமனதாகவும் இருக்கும்.
காரணம் - நுரையீரலுக்கு காற்றானது தொடர்ச்சியாக பயணிக்கின்றது. நீர் அருந்துதல், உணவு உண்ணுதல் போன்ற செயற்பாடுகள் மூலமாக குரல் நாண் மற்றும் சுவாசப்பதையில் உள்ள வளியின் தொடர்ச்சி சீரற்று காணப்படுவதனாலும் சுருக்கம் தொடர்ச்சியற்று காணப்படுவதனாலும் வளி தடை உண்டாகும். இதனால் குரல் வளையில் ஒலி உண்டாகின்றது.
தடுக்கும் முறை - மூச்சை அடக்குதல், குளிர் நீர் குடித்தல் மற்றும் சடுதியான மாற்று சிந்தனை (பயம், உடல் களைப்பு)

புரை ஏறுதல்
உணவுப்பாதை, சுவாசப்பதையின் தொடக்கம் தொண்டையில் ஆரம்பமாகின்றது. சுவசப்பதையின் தொடக்கத்தை ஒரு மூடி (எபிகிளாட்டிஸ் - Epiglottis) காணப்படும். இது உணவு விழுங்கும் வேளையில் மூடி சுவாசப்பதையை மூடியவாரும், சுவாசிக்கும் வேளையில் இது திறந்தவாரும் காணப்படும்.
Image result for Sneezeகாரணம் - அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது போன்றவற்றால் அந்த மூடி சரியாக செயற்படாமல் இருக்கும் வேளையில் உணவு கூறு, நீர் போன்றன சுவாசப்பதையில் நுழையும். இதனை வெளியேற்ற உயர் வேகத்துடன் கற்று சுவாசப்பையில் இருந்து வெளிவரும். இதனால் அந்நிய கூறுகள் வெளியேற்றப்படும். இதனையே புரை ஏறுதல் என்று கூறுவோம்.
தடுக்கும் முறை - பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள்.
குறிப்பு - பலர் அறியாமையில் புரை ஏறும்போது தலையில் தட்டுவார்கள். இது வெளிவரும் அந்நிய பொருளை மீண்டும் உள்ளே அனுப்பும் ஆபத்தான செயற்பாடாகும். 

உசாத்துணை - 
கொட்டாவி - https://www.huffingtonpost.com/2013/06/10/facts-yawning-why-we-yawn-contagious_n_3398301.html
தும்மல் - http://www.readislamicbooks.com/why-do-we-say-alhamdulillah-after-sneezing.html
http://lifeinsaudiarabia.net/blog/2016/05/15/6-medical-reasons-you-should-say/
https://www.huffingtonpost.com/2013/06/10/facts-yawning-why-we-yawn-contagious_n_3398301.html
விக்கல் - https://www.emedicinehealth.com/hiccups/article_em.htm







No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages