
சாதாரணமாக மனிதனின் மூளை இதுவரைக்கும் 10~15 வீதத்திற்கு ("10% of the brain" myth) உட்பட்டதாகவே செயல்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு மனிதனின் மூளை 100% செயல்திறன் வாய்ந்ததாக இயங்குமாயின் அம்மனிதனினால் எவ்வாறான செயல்களை செய்யமுடியும் என்று கட்டங்கட்டமாக விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தும் திரைப்பட ஒழுங்கமைப்பு வியப்புக்குரியது.

நேரம் என்ற ஒரு காரணியே இவ்வுலகத்தின் தொடர்ச்சியான இயக்கத்தை தீர்மானிக்கின்றது என்றும் கற்றுக்கொண்டத்தை கற்றுக் கொடுப்பதிலுமே உண்மையில் இவ்வுலக வாழ்வின் எதார்த்தம் உண்டெனும் உன்னதமிகு தத்துவத்தை பறைசாட்டி நிற்கின்றது.

மனித நாகரீகத்தின் வளர்ச்சி பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இவ்வுகலத்தில் நடைபெற்ற உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல் மாற்றங்களை நொடிப்பொழுதில் சிறப்புற சித்தரித்து தான் கூறமுனையும் கருவை சிறப்பாக விதைக்கின்றது இத்திரைப்பட கதை நகர்வு.
காலம், கணிதம், கருவி, கண்டுபிடிப்பு என்பனவற்றுடன் மனித நாகரீக வளர்ச்சியின் தாக்கத்தையும் தனித்துவ அடையாளத்தையும் இவ்வுலகில் மனித இனம் தக்கவைத்துள்ளது. இருந்தும் நாம் பின்னோக்கிய வரலாற்றை நோக்கியே நகர்கின்றோம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றது.
No comments:
Post a Comment