Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 30, 2018

முத்தங்கள் (Kiss)

Related imageமுத்தங்கள் என்றாலே பலர் தவறாகவே புரிந்துகொள்கின்றார்கள். பொதுவாக நாகரிக வளர்ச்சியில் மற்றும் அறிவீனத்தின் குறைபாடே இவ்வாறான எண்ணம் தோன்றக் காரணம் எனலாம்.

முத்தங்கள் பொதுவாக மனித வாழ்வின் உன்னதமான காதலை வெளிப்படுத்தும் காரணியே. இருந்தும் அவை சமூக மத்தியில் இடம், நேரம், சூழ்நிலை பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றது.
Related imageமுத்தங்களை பொறுத்தவரை உலகில் இருபது வகையானவை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் காதல், உணர்ச்சி, ஈர்ப்பு, பாலியல் ஈர்ப்பு, பாலியல் செயல்பாடு, பாலியல்  உணர்ச்சி, பாசம், மரியாதை, வாழ்த்து, நட்பு, அமைதி, மற்றும் நல்ல அதிர்ஷ்டம் போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இருந்தபோதும் முத்தங்களை பரிமாற்றும் போது உளவியல் மற்றும் உடலியல் ரீதியான பல அனுகூலங்கள் கிடைக்கப்பெறுவதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

Related image
  • குருதி அழுத்தம் குறைவடைதல். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
  • முகத்தசை அசைவு மற்றும் செயலூகத்தை வலுப்படுத்தும் (34 facial muscles and 112 postural muscles). 
  • எதிர் நபரின் நம்பிக்கையை வலுப்படுத்தும். உளவியல் ரீதியான தொடர்பு வலுவூடம் பெரும். 
  • ஓமோனின் சீராக்கம் நடைபெறும். குறிப்பாக கோட்டிசொல்  (Cortisol Hormone), ஒக்சிடோசின் (Oxytocin), சேரோடோனின் (Serotonin) ஓமோனின் சீராக்கம்
  • மன அமைதி மற்றும் மனக்கவலை இழிவதால் 
  • உடலியல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்
  • ஒரு நிமிட முத்தத்தில் 26~30 கலோரி சக்தி பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
  •  உதடுகள் உலர்ந்து போதலை இவை தடுக்கும். 
  • மூளை நரம்புகள் புத்துயிர்ப்பு அடைகின்றது. 

Image result for disadvantages of lip kissமுறையற்ற முத்தங்களின் பரிமாற்றம் காரணமாக பல அனுகூலங்களும் உண்டாகின்றது. 
  • 80 million பக்டீரியா பரவல் அடைகிறது. 
  • HIV நோய் உண்டாகும் சாத்தியம் அதிகரிக்கின்றது. 
  • மோனோநாக்சோசிஸ் (mononucleosis) ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் (herpes simplex) போன்ற நோய்கள் பரவுவதற்கும் வழிகோலும்.
  • சில பொழுதுகள் உதடுகளில் பற்கள் மூலமாக காயம் உண்டாதல்.  
பண்டைய இந்தியாவிலிருந்து 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த வேத நூல்களில் ஒன்றான காமசூத்திராவில் முத்தம் பற்றியும்,   முத்தமிட முறைகள் பற்றியும் ஒரு முழு அத்தியாயத்தை காணப்படுகின்றது. அலெக்ஸாந்தர் கிரேட் கி.மு 326 இந்தியாவில் படையெடுத்த போது இந்தியர்கள் இருந்து சிற்றின்ப முத்தம் பற்றி கிரேக்கர்கள் கற்றுகொண்டனர் என்று சில மானுடவியலாளர்கள் கருத்துகின்றார்கள்.

கூர்ப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்த சில விலங்குகள்கூட அன்பை வெளிப்படுத்த முத்தங்கள் பரிமாற்றிகொள்வதாக உயிரியல் ஆய்வு கூறுகின்றது. (மனிதக் குரங்கு, டொல்பின், பறவை இனங்கள், அணில் வகை)

"ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்"  (புகாரி 5998, 5997, 2122)

மேலதிக தகவலுக்கு




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages