நீண்டகாலமா நான் பார்க்கவேண்டும் என்று காத்திருந்து சில நாட்கள் முன்னர் பார்க்க கிடைத்த திரைப்படமே இது. பொதுவாகவே இந்த உலகத்தின் இயக்கத்தை தீர்மானிக்கும் ஒரே காரணி நேரம். ஆனாலும் எம்மில் பலர் இந்த நேரத்தை உணர்வது சற்று குறைவே. துரதிஸ்டவசமாக நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வரையறை செய்யப்பட நேரத்தை ஏதோவொரு வழியில் செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் அந்த நேரத்தின் பெறுமதி இன்றோ நாளையோ நாம் மரணிக்க இருக்கின்றோம் என்பதை அறிந்துவிட்டால் மட்டும் அதன் பெறுமதியை வெகுவாகவே உணர்ந்துகொள்வோம் அல்லவா??? அவ்வாறான ஒரு கருப்பொருளை அடிப்படையாக்கொண்டு அமைக்கப்பட்ட உலகளாவிய வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமே இன் டைம் (In Time) என்ற October 20, 2011 இல் Andrew Niccol என்ற தயாரிப்பாளரின் தயாரிப்பில் வெளியான திரைப்படம்.

திரைப்படத்தின் நகர்வு சற்று சுவாரசியம் குறைவாக இருந்தபோதும் படத்தில் கையாளப்பட்ட கருப்பொருள் என்னை மிகவும் மிகவும் கவர்ந்தது. அந்தவகையில் அங்கே கூறப்பட்ட கருப்பொருளை சுருக்கமாக இங்கே பதிவேற்கின்றேன்.
உலகத்தில் ஒரு குழந்தை பிறந்ததும் 25 வருடங்கள் அவருக்கு வழங்கப்படும். அந்த வருடங்கள் அவரின் கையில் உள்ள Digital Watch மூலமாக மூலமாக காண்பிக்கப்பட்டு கொண்டிருக்கும். அந்த கடிகாரத்தில் 25 வருடம் பிறந்தது முதல் குறைவடைந்து கடைசியாக பூச்சியம் ஆகும் நிலையில் அவர் மரணிக்க கூடியவராக இருப்பார். அவ்வாறு தான் மரணிக்காமல் வாழ வேண்டுமாக இருந்தால் அவர் நேரத்தை (வாழும் காலத்தை) தனக்காக பெற்றுக்கொள்ளவேண்டும்.

அந்த உலகத்தில் உழைப்பிற்கு சன்மானமாக காலம் வழங்கப்படும். இதனை கொண்டு அவர் உயிர் காக்கப்படும். வழமைபோல சாப்பாடு குடிநீர் மற்றும் ஏனைய வாழ்க்கை செலவுகளை அவர் நேரத்தை கொடுத்து வாங்க வேண்டும்.
"நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது,அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்" (அல்குர்ஆன் 56:82~84)
ஒருவருக்கு ஒரு நாள் மற்றும் சிலருக்கு ஒரு வரம், ஒரு மதம், ஒரு வருடம் என்று வாழ்க்கை காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் அவர்கள் புன்னகையோடு தனது அன்றாட செயற்பாடுகளை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மரண பயம் என்பது நிமிடங்களில் உதயமாகும் ஒன்றாகவே வெளிப்படும்.

ஆனால் நாம் மாறுபட்டவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதுவே உண்மை. காரணம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலம் பற்றிய கருப்பொருள் இன்று வாழும் எமக்கு கச்சிதமாக பொருந்தும். இருந்தும் நாம் கைசெதக் காரர்கள் என்பதை எமது வாழ்க்கை நடைமுறை நிரூபித்தவண்ணமே உள்ளது.
"காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)" (அல்குர்ஆன் 103:1~3)
No comments:
Post a Comment