
அறியாமை சமூகத்தில் அறிவியலைக்கொண்டு அறிவூட்டிய மார்க்கம் இஸ்லாம். அல்குர்ஆனின் வெளிப்பாட்டின் பின்னர் ஆழ் துதியிலிருந்து அகக்கண் மடல் விரித்த சமூகம் அது.
அந்த சமூகத்தின் வழித்தோன்றல்கள் இன்றோ அறிவியலை அநியாயம் என்றும் அல்குர்ஆனை ஆறுதல் ஓதல் என்றும் கூறும் நிலை தோற்றம்பெற்றுள்ளது.
ஆறு நாள் வைத்தியன் தொடக்கம் அட்டமி நிலவு வரை நிலவும் நிகழ்கால கற்கால நடைமுறை ஒருகணம் மடமை சமூகமோ என்று எமக்கு நாமே வினா வினவும் விம்பநிலை பரவியுள்ளது.
அவ்வகையில் அல்குர்ஆன் காலத்தையும் களத்தையும் கச்சிதமாக கணித்து கற்பிக்கும் மிகப்பெரும் வேதநூல். அந்த நூலை சுமந்த ஒட்டுமொத்த சமூகத்தின் காவலர்களின் நிலைப்பாடு கேள்விக்குறி ஆகியுள்ளது சமகால சூழலில் உண்டான மக்கள் மன்றத்தின் பொதுமை சிந்தனையில்.

சந்திர கணக்கை கூட கணிப்பீடு செய்ய முடியாத ஒரு அறிவிலி சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்கையில் வெட்கத்தால் தலை கவில்கின்றேன் அந்நிய சமூகத்தின் அற்பமான கேள்விகளுக்கு....
வானியல், கருவில், புவியியல், எண்ணியல், நீரியல், உயிரியல், மருத்துவவியல், சமூகவியல், பொருளியல், பொறியியல் என்று பரந்துபட்ட பார்வையில் பேசும் அல்குர்ஆன் சந்திரனை குறித்து சுமார் 25 இடங்களுக்கு மேலே பேசுகின்றது. (2:17,257) (3:184) (4:174) (5:15,16,44,46) (6:1,91,122) (7:157) (9:32) (10:5) (13:16) (14:1,5) (22:8) (24:35,40) (25:61) (31:20) (33:43,46) (35:20, 25) (39:22,69) (42:52) (57:12,13,19,28) (61:8) (64:8) (65:11) (66:8) (71:16)
ஆய்வு சமூகத்திற்கு வித்திட்ட அல்குர்ஆன் உண்டாக்கிய சமூகம் அற்பமான சில பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வை எட்டாத நிலைக்கு நிலைகுலைய வைத்துவிட்டது எம்மவர்கள் கொண்ட இயக்கச் சண்டையும் சச்சரவும்.
"வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்" (அல்-குர்ஆன் : 25:61)
"அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்" (அல்-குர்ஆன் 10:5, 6:96)

மாற்று சமூகத்தை திருப்திப்படுத்த கலண்டர் ட்டே பெருநாளாக அறிவிக்கும் அறிவு ஜீவிகள். அங்கே செல்லுபடியாவதில்லை அவர்களின் பிரைக்கான வரையறைகளும் வர்க்க விதிமுறைகளும்.
அந்நியன் ஒருவன் எதிர்கால 5/10 வருடத்திற்கான நாட்காட்டியில் பௌர்ணமி குறித்தி சரியாக பதிவிடும் போது இவர்களுக்கு மட்டும் இந்த அறிவியல் கலாச்சராம் கராமானது ஏனோ....
எனது சிறிய சந்தேகம்....
ரமலான் மாதத்தை உறுதிப்படுத்த தலைப்பிறை காண்பார்கள். ஒருவேளை நாட்டில் அசாதாரண காலநிலை காரணமாக 10 நாட்களுக்கு மேலதிகமாக சந்திரன் தென்படவில்லை என்று வைத்துகொள்வோம். அவ்வாறாயின் பிறைக்குழுவின் பத்வா (முடிவு) என்னவாக அமையும்.....?????
No comments:
Post a Comment