எப்போது இந்த இயக்கவெறி சண்டைகள் ஓய்ந்து இஸ்லாம் என்ற
கொள்கை ஓங்குமோ தெரியவில்லை. இயக்கங்கள் (ஜமாத்) என்ற போர்வையில் ஒருவரை ஒருவர்
விமர்சித்தும் வஞ்சனை வசை பாடலும் புனிதமிகு ரமளானில் கூட ஓயாது ஒலிப்பது ஏனோ
தெரியவில்லை.
“நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று
சொல்லும்
(அல்குர்ஆன் : 2:120, 3:19,85, 5:3)
"இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு
புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்)
விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப்
பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்" (அல்-குர்ஆன் : 9:107)
சத்தியம் அசத்தியம் தெளிவாகி மார்க்கம் பூரணமான பின்னர்
இவர்கள் எவ்வாறு மார்கத்தை பூரணப்படுத்த முயல்கின்றார்கள் என்றுதான் எனக்கு
இன்றுவரை விடை தெரியா வினாவாகியுள்ளது....
"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி
விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்"
(அல்-குர்ஆன் 5:3)
பலர் தங்கள் அளவில் புனிதர் என்று நிலைப்பாட்டு கலாச்சாரம் எப்போது
தோற்றம் பெற்றதோ அப்போதே அநேக பிரச்சினை அடித்தளமாக அமைந்துள்ளது.... ஆனால்
அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது....
"அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார் (அல்-குர்ஆன்
17:97, 6:39)
பல சில்லறை பிரச்சினைக்கு அறிவு பூர்வமான சிந்தனை முடிவுகள், ஆலோசனைகள், ஆய்வுகள் முன்னெடுக்கப்படாமையே காரணமாகியுள்ளது. அடிப்படையில் சலனமுறும் பாமரன் நிலைப்பாடு பற்றி இவர்கள் சற்றும் சிந்திப்பது கிடையாது,.....
"இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில்
மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத்
தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்" (அல்-குர்ஆன் : 16:125)
பிரச்சினை உண்டாக்கும் இவர்களா சத்தியத்தை போதிக்கும்
சத்தியவான்களாக இருக்க போகின்றார்கள். அடிப்படையிலே ஆட்டம் கண்டுவிட்டதே .....
“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்
கொள்ளுங்கள்;
நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்” (அல்-குர்ஆன் : 3:103, 2:256,
31:22)
“அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று
அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில்
(நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்-குர்ஆன் 2:170, 5:104, 43:22, 7:28, 10:78, 11:62,87 14:10 31:21)
No comments:
Post a Comment