Post Top Ad
Your Ad Spot
Saturday, June 9, 2018
நல் வித்தாகும் செயல்....
பொதுவாகவே எம் அனைவரின் உள்ளங்களிலும் பல கருப்பொருள் விதைக்கப்பட்டு விருட்சம் ஆக வளர்ந்து இருக்கும். இந்த சிந்தனையை பல அனுபவங்கள், அறிவுரைகள் வந்தபோதும் அவைகளை அழிக்க முடியாத துர்பாக்கிய நிலைமை எம்மை ஆட்கொண்டு இருக்கின்றது. இதனை நாம் எமது அன்றாட வாழ்வில் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றோம்.
இஸ்லாமிய பார்வையில் பயனுள்ள செயல்கள் காலம், சூழ்நிலை, நபர்கள் என்பனவே தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திகழ்கின்றது. அந்தவைகையில் சமகால சூழலில் சில நடைமுறைக் கலாச்சாரம் மாற்றப்படவேண்டும் என்று உணர்கின்றோம். ஆனால் அவை எங்கே எப்போது எப்படி என்ற வினா தொக்கிய நிலையில் தேங்கி நிற்கின்றது பலரது உள்ளங்களில்....
"அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப் பாக்குகின்றான்" (அல்-குர்ஆன் 2:261)
மேற்படி புனித குர்ஆன் வனத்தில் வல்ல இறைவன் ஒரு உவமானத்தை கொண்டு செயல்களின் விளைச்சலை விபரிக்க முற்படுகின்றான். இங்கே இறைவன் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் செல்வத்தை ஒரு பயனுள்ள வித்துக்கு ஒப்பாக கூறுவதன் ஊடாக குறித்த செல்வத்தை பன்மடங்காக மாற்றுகின்றான்.
ஆனால் இங்கே கேள்வி: இறைவன் கூறும் செல்வம் என்றால் எது என்பதே....
மேற்படி வினாவிற்கு பலர் பலவாறாக பதில் அளித்தாலும் எனது சிந்தையில் இவ்வாறு உணர்கின்றேன். (அல்குர்ஆன் ஆய்வுகளை கொண்டு)
செல்வங்கள் -
"பொருள்" (பணம், சொத்து, பொன், உணவு, உடை, உறைவிடம், நூல்......)
"அறிவு" (கற்பித்தல், வழிகாட்டல், ஆலோசனை, ஊக்குவிப்பு)
"நல்ல குழந்தை" (பண்பாடு, சமூக சிந்தனை, சேவை, வேதம் கற்ற, மார்க்க போதனை கொண்ட நல்ல குழந்தை)
மானிடர்களுக்கு பயன்படும் எந்தவொரு காரணியும் செல்வமாக கொள்ளப்படும். அந்தவகையில் மேற்படி அல்குர்ஆன் வசனத்தில் கூறப்படுவது போல எம் செல்வங்கள் பன்மடங்காக்கப்படும் நிலைப்பாடுகள் குறித்து நாம் பலபோழுதுகள் சிந்திப்பதில்லை... காரணம் நாம் கொண்ட குறுகிய மனப்பாங்கு மற்றும் செல்வங்கள் பற்றிய தவறான சித்தாந்த சிந்தனை.
"தர்மம் தலை காக்கும் தக்க சமயம் அது உயிர்காக்கும்" என்ற முதுமொழிக்கு அமைவாக எமது செல்வங்களின் கொடைகள் அமையுமாயின் வாழ்வில் செழுமை உண்டாகும்....
Tags
Common#
என்னைக்கவர்ந்த வரிகள்#
Share This
About Mutur-jmi
என்னைக்கவர்ந்த வரிகள்
Tags
Common,
என்னைக்கவர்ந்த வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment