இஸ்லாமிய சமூகம் பல இடங்களில் முரண்பட்ட சிந்தனையை தோற்றுவிக்க காரணமாக அமைவது அவர்களின் ஆய்வுகள் அற்ற முடிவுகளும் முனைவுகளுமே. அந்தவ
கையில் அண்மையில் வெளியான பிறை பிரச்சினை தொடர்பாக உலகாளாவிய கருத்திற்கு எமது இலங்கை முஸ்லிம்கள் முரண்பட்ட சிந்தனையினை தோற்றுவித்த நிகழ்வு இடம்பெற்றது. இருந்தபோதும் இதற்கான தீர்வை அல்குர்ஆன் கூறிவிடாமல் இருந்துவிடவில்லை.
அல்குர்ஆன் அறிவியலை அதிகம் போதிக்கும் மார்க்கம். அந்தவகையில் வானியல் தொடர்பாக பல வெளிப்பாடுகளை புனித அல்குர்ஆன் வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான அறிவியல் கருத்தை முன்வைக்க நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் போதும் அறிவியல் ரீதியாக சமகால பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலைப்பாடு பரவலாக்கம் பெற்றுவிடும்.
அவ்வாறான ஒரு கணிதவியல் தொடர்பை இங்கே முவைக்கின்றேன்.
புனித அல்-குர்ஆன் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையின்
பின்னும் பல்வேறுவகை அர்த்தங்கள் பொதிந்து காணப்படும். அவ்வாறு ஒரு வார்த்தையே “யவ்ம்”
என்ற வார்த்தையாகும். இக்குறித்த சொல் அரபியில் “நாள்” என்பதை குறிக்கும். அதே
போல் நாட்கள் என்பதற்கு “ஐயம்” என்றும்; மாதங்களுக்கு “ஷஹ்ர்” என்றும் அழைக்கப்படும்.
புனித அல்-குர்ஆன்
ஆனது நாள் என்பதனை 365 முறைகளும், நாட்கள் என்பதை 30 தடவைகளும், மாதங்களை 12 தடவைகளும்
மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது. இவை எவ்வாறு சாத்தியமாக அமையமுடியும்.
புனித அல்-குர்ஆனில்
உள்ள சொற்களின் எண்ணிக்கை 76,430 ஆகும். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இக்குறித்த எண்ணிகையில்
மிக சரியாக கணக்கிட்டு குறிப்பிட வாய்ப்புண்டு. உண்மையில் இவை இறைவனால் மாத்திரமே
சாத்தியமாகும்.
உலக வழக்கில் இருவகை
நாட்காட்டிகளை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். சூரிய ஆண்டு (Solar
year) மற்றும் சந்திர ஆண்டு (Lunar
year) என்பன அவைகளாகும்.
சாதரணமாக கணக்கெடுப்பில் சூரிய ஆண்டு 365 நாட்களையும்
இன்னும் சந்திர ஆண்டில் 354 நாட்களையும் கொண்டதாக அமையப்பெறும்.
சூரிய சந்திர
நாட்களை குறித்து அல்-குர்ஆன் பேசுகையில் ஒரு வரலாற்றுக் கதையை உதாரணமாக பேசுகின்றது. அக்கதையில் “மனிதர்கள்
குகை ஒன்றில் தங்கியிருந்த காலப்பகுதியினை” குறித்து பேசுகிறது.
“அவர்கள் தங்கள்
குகையில்
முன்னூறு வருடங்
களுடன் இன்னும் சிலர்கள் ஒன்பதை அதிகமாக்கி முன்னூற்றி ஒன்பது வருடங்கள் தங்கினார்கள்
என்று கூறுகின்றார்கள்” (அல்-குர்ஆன் 18:25)
இங்கு அவர்கள்
தங்கியிருந்த ஆண்டை 300 ஆண்டு என்றே கூறியிருக்கலாம். மாறாக அவை 300 மேலும்
ஒன்பதை அதிகமாக்கி 309 என்று கூறுவதன் நோக்கம் சூரிய, சந்திர ஆண்டுகளில் உள்ள நாட்களின்
வித்தியாசத்தை விளக்கவேயாகும்.
சூரிய ஆண்டில் 300 ஆண்டுகள் சந்திர ஆண்டில் 309 ஆண்டுகளுக்கு சமமானதாக அமையும். இதனைக் குறித்தே அல்-குர்ஆன் மறைமுகமாக பேசுகின்றது.
இக்குறித்த கணிதவியல் கணக்கீட்டை யார் அன்று கூறியிருப்பர்?
சூரிய ஆண்டில் 33 வருடம் 4 மாத அளவானது சந்திர ஆண்டில் 34 வருடம் 4 மாதத்திற்கு சமனானது. எனவே 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு வருட வித்தியாசம் ஏற்படும். ஆகவே
குர்ஆன் இனங்காட்டும்
கணிதவியல்
தொடர்பு பொருத்தமாக அமைகின்றது.
இதனால் 300 ஆண்டுகளுக்கு சுமார் 9 ஆண்டுகள் வித்தியாசங்கள் சூரிய, சந்திர ஆண்டுகளில்
உண்டாகும். வருடம்
ஒன்றில் இவ்விரண்டு நாட்காட்டிகளிலும்
சுமார் 11 (10.638131) நாட்கள் வேறுபடும்.
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (அல்குர்ஆன் 36:39)
No comments:
Post a Comment