“பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனு மில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்” (அல்-குர்ஆன்
13:41, 21:44)
மேற்கூறப்பட்ட புனித அல்-குர்ஆன் வசனத்தில் “பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் குறைத்து வருகிறோம்” என்று எடுத்துக்கூறப்படுகிறது. இதன் விளக்கம்தான் என்ன
என்று ஆராய்கையில் மிகவும் அற்புதமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன. மேற்கூறப்பட்டுள்ள
வசனத்திற்கு தற்போதைய
நவீன அறிவியல்
விஞ்ஞானம் இரு வெவ்வேறு வகை யான சாத்தியமான ஆதாரங்களை எங்களுக்கு நிரூப ணத்துடன் தருகின்றது.
பூமிச்சுழற்சி
காரணமாக புவி மேற்பரப்பில் இருந்து சிறுதளவு பகுதி துணிக்கைகூறு வடிவில் தொடர்ந்து புறவெளிக்கு விடுவிக்கப்படுகின்றது என்ற உண்மையினை தற்போதைய அறிவியல் கண்டறிந் துள்ளது. இதன்
காரணமாக பூமியின் கூறுகளின் ஒருபகுதி குறைவடைந்து வருகின்றது. ஒரு சுழலும்
பொருளின் தன்மைக்கு ஒத்ததாக இதனை உற்று நோக்கும்போது நிச்சயமாக இது சாத்தியமாகும்.
விஞ்ஞானம் கூறும் அடுத்த விளக்கமானது: தற்போதைய புவியின் சூழல்
மாற்றம் காரணமாக நிகழும் கடல் நீர் மட்ட அதிகரிப்பாகும். இக்கடல் நீர் மட்ட அதிகரிப்பிற்கு புவியின் முக்கிய சூழல் மாற்ற மான பச்சை
வீட்டு விளைவுகள் (Green House Effect) மற்றும் பூகோள
வெப்பமாதலையே (Global Waming) இன்றைய நவீன
அறிவியல் முக்கிய காரணியாக சுட்டிக் காட்டுகின்றது.
பூமியின் துருவங்களில் மிக
நீண்டகாலமாக காணப்படும் பனிப்பாறைப் படிவுகள் தற்போதைய சூழல் மாற்றம் காரணமாக உருகத்
தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி பூகோள வெப்பமாதல் காரணமாக சடுதியாக பூமியில்
நிகழும் திரவ விரிகையை (liquid
expansion) குறிப்பிடலாம். எதிர்காலத்தில்
தொடர்ந்தும் அதிகரிக்குமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புவி வெப்பமுறுதல்
காரணமாக திரவ விரிவு ஏற்படுவதுடன் மேலும் பனிப்பாறைகள் உருகுவதன் விளைவாகவும் கடல்
மட்ட உயர்வு (Sea level rise) நிகழ்கின்றது. இவ்விரண்டு நிகழ்வின் அடுத்தகட்ட நேரடித்தாக்கம் பூமியின்
நிலப்பரப்பு அருகுதலாகும்.மேலும் மன்ஹாட்டனின் கோடார்ட் ஸ்பேஸ் சயின்ஸ் இன்ஸ்டியூட் (Goddard
Space Science Institute of Manhattan) விஞ்ஞானிகள் மேற்குறித்த தரவுகளை
வெளியிட்டனர்.
எனவே திருமறை அல்-குர்ஆனின் வார்த்தை வர்ணனை மிகச்சிறப்பாக பொருந்தியுள்ளது. “பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் குறைத்து வருகிறோம்”. மேற்கூறப்பட்ட இரு விளக்கமும்
குர்ஆனுடன் ஒத்துநிற்கின்றது. “மனிதர்கள்
சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களைக் கொண்டு நாம் அவர்க ளுக்கு விளக்குகிறோம்” (அல்-குர்ஆன் 59:21)
No comments:
Post a Comment