
அநேக இனங்கள் தாவர உண்ணியாக இருந்தபோதும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில இனங்கள் சிறு பூச்சிகளை உண்டு உயிர்வாழும் இயல்பை காண்பிக்கும். மேலும் ஆண் பெண் என்ற தெளிவான பாலியல் வேறுபாட்டையும் இவை காண்பிக்கும். ஆத்திரோபோடா கணத்தின் இவை உள்ளடங்கும்.
வெட்டுக்கிளிகளை நாம் அவதானித்தால் பெரும்பால சமயங்களில் அவை தங்களின் பின்னங்கால்களை உரோஞ்சிய வண்ணமாகவே இருக்கும். இதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா????
தங்கள் கால்களை உரோஞ்சுவதன் மூலமாக அவை ஒருவகையான சந்தத்துடன் கூடியதான ஒலியை (சத்தத்தை) பிறப்பிக்கின்றன. இந்த சத்தம் சுமார் 1.5 Km தூரம் வரைக்கும் பரவக்கூடியதாக அமையும்.

ஏன் இவை இந்த சத்தத்தை எழுப்பவேண்டும் என்றால் அங்கேதான் தான் உள்ளது இந்த ஜீவராசிகளின் காதல் நயவுணர்வு...
என்ன காதலா.....
ஆமாம் காதலேதான்
ஆண் வெட்டுக்கிளிகளே இவ்வாறான ஒலியை எழுப்பும். இதனூடாக தங்கள் சூழலில் உள்ள பெண் வெட்டுக்கிளிகளை இனப்பெருக்க தேவைக்காக அவை அன்பாக அழைக்கின்றது. மேலும் ஒலி எழுப்பும் தன்மை ஒவ்வொரு வெட்டுக்கிளிக்கும் தனித்துவமானதாக அமையும்.
மேற்படி ஒலி எழுப்பும் செயற்பாட்டை வெட்டுக்கிளிகள் மாத்திரமன்றி ஈ வகை, சில்வண்டுகள், கும்புடு பூச்சி போன்றவையும் மேற்கொள்கின்றன. பெரும்பாலும் இவை இனப்பெருக்க தேவைகளுக்கவே இவ்வாறு ஒலியை எழுப்புகின்றது.


"(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள் (அல்குர்ஆன் 54:7)
No comments:
Post a Comment