
பாம்புகள் எனப்படுபவை உலகில் தோன்றிய விசஜந்து வகைகளில் முதன்மையானவை. முள்ளந்தண்டு கணத்தில் ஊர்வன வகுப்பில் உள்ளடங்கும் இவை கால்கள் அற்ற ஊர்வன இனமாகும். சுமார் 3600 சாதிகளை உள்ளடக்கிய இவைகள் உலகின் வட தென்துருவம் தவிர்ந்த ஏனைய எல்லாப்பகுதிகளிலும் பரவலாக் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முட்டை இட்டு அடைகாத்து குஞ்சி பொரிக்கும் பெரும்பாலான சாதிகளில் குட்டி இட்டு இனப்பெருக்கும் சாதிகளும் உள்ளடங்கும். அறியப்பட்ட இனங்களில் 10% பாம்பு இனங்களே விஷம் கொண்டதாக காணப்படுகின்றது. குறிப்பாக மத்தியகோட்டு பகுதியில் காணப்படும் பாம்புகளே அதிக விஷம் கொண்டதாக காணப்படும்.
பொதுவாக பாம்புகள் இறை பிடிக்கவும் எதிரிகளில் இருந்து பாதுகாக்கவுமே விசத்தை பயன்படுத்தும். பெரும்பாலும் பூமியின் அதிர்வு, வெப்ப விளைவு மூலமாக பாம்புகள் வேட்டையாடலை மேற்கொள்ளும். பாம்புகள் புறத்தோலில் செதில்போர்வை காணப்படும். இது குறித்த காலத்தின் பின்னர் தோல் கழற்றுதல் எனும் செயற்பாடு மூலமாக வெளியேற்றும். பாம்பின் விஷத்தை கொண்டு சமகலங்களின் மருத்துகள் பல உற்பத்தி செய்யப்படுகின்றது.
காரணம் பாம்புகள் விஷத்தை தொகுப்பதற்கு சூரியனில் இருந்து வெளிப்படும் ஒருவகை நச்சுக்கதிரை பயன்படுத்துகின்றது. பாம்பின் விஷம் ஒருவகை புரதம் ஆகும். இப்புரதம் மனித உடலுக்கு ஆபத்தானது. விஷம் மனித இரத்தத்தில் கலக்கும் ஆயின் குருதி உறைதல், இதயத்துடிப்பு மந்தமதல், நரம்பு மண்ட பாதிப்பு, தசை அசைவு பாதிப்பு இன்னும் கலங்களின் இறப்பு போன்றனவற்றுக்கு மேலாக உயிர் இழப்பும் உண்டாக்கும் சக்தி உண்டு.
உலகம் பூராகவும் பாம்பினால் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை 50,000 ஆகும். ஆனால் மனிதர்களினால் கொல்லப்படும் பாம்புகளின் எண்ணிக்கை 90,000 ஆகும். நாகப்பாம்பு வகைகள் மூலமாகவே அதிகமாக மனித உயிரிழப்பு உண்டாகின்றது. சில பாம்பு வகைகள் உலகில் அழிவடைந்து வரும் இனங்களை சார்ந்துள்ளது. உலகில் மிகப்பெரும் பாம்பு இனம் அனக்கொண்டா எனப்படும் மலைப்பாம்பு வகையாகும். இது சுமார் 12~22 அடி வரை வளரக்கூடியது.
சரி எமது தலைப்பிற்கு வருவோம்....
"ஒருவர் பாம்பு ஒன்றை கொன்று விட்டால் அந்த பாம்பின் குடும்பம் பழிவாங்க வரும்" என்ற ஒரு நம்பிக்கை கிராமப்புறங்களில் நிலவுகின்றது.
இக்கருத்து உண்மையா என்று அறிவியல் ரீதியாக சற்று நோக்குவோம்.....
அறிவியல் உண்மை 1
பாம்புகளில் சில இனங்கள் (குறிப்பாக நாகம், விஷம் கூடிய இனம்) மரணிக்கும் போது அவை தான் இறக்கும் செய்தியையும், இடத்தையும் தனது குடும்பத்திற்கு தெரிவிக்க ஒருவகை வாயு ஒன்றை வெளிப்படுத்துகின்றது.
இவ்வாய்வு குறித்த இனத்தை சார்ந்த பாம்புகளிற்கு கிடைக்கபெறும். இதனால் அவ்வினத்தை சேர்ந்த பாம்புகள் குறித்த இடத்திற்கு வருகின்றது. அங்கே மனிதன் இருப்பின் அவை தன்னை பாதுகாக்க கடிக்கின்றது.
அறிவியல் உண்மை 2
ஒரு பாம்பு கொல்லப்படும் போது அவற்றின் உடலில் இருந்து செதில்கள் வெளிப்படும். இது மனித உடலில் படுகின்றன. ஒவ்வொரு பாம்புக்கும் அந்த செதில்களுக்கு என்று தனித்துவ வாசம் வெளிப்படும்.
இவ்வாசத்தை நோக்கு குறித்த பகுதியில் காணப்படும் அந்த இனத்தின் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றது. இன்னும் வேறு சில பாம்புகள் தனது எல்லைக்குள் ஏனைய பாம்புகள் வந்துள்ளது என்று உணர்ந்து அவற்றை விரட்டவும் தாக்கவும் குறித்த மனத்தை நோக்கி வருகின்றது. அவ்விடத்தில் மனிதன் இருக்கும் போது அவன் தாக்கப்படுகின்றான்.
இதுவே பாம்புகள் பலிவாங்குதல் என்பதன் விளக்கம். ஆனால் சில மூட நம்பிக்கையை கொண்டு திரைப்படங்கள் வெளிப்பட்டுள்ளது. "நீயா" என்ற கமலகாசனின் தமிழ் திரைப்படம், கிஸ் கிஸ் என்ற தெலுங்கு திரைப்படம். இன்னும் கொலிவூட் இல் அனக்கொண்டா தொடர் திரைப்படம் பாம்பின் அளவை அடிப்படையாக்கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்" (அல்குர்ஆன் 24:45, 6:38)
No comments:
Post a Comment