
மேற்படி வசனம் முஸ்லிம்களின் ஒரு சிறு கூட்டம் முஸ்லிம்களை அழிக்க எத்தனித்த பெரும் கூட்டத்தை யுத்த களத்தில் சந்தித்த வேளையில் நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைகின்றது.
அதாவது முஸ்லிம்கள் யுத்தகளத்தில் போருக்கு தயாராக இருக்கும் வேளையில் அவர்களின் உடல், உள வலிமை சற்று பலவீனமாக இருந்தது. அவ்வேளையில் அவர்களை அறியாமலேயே அவர்களை சிறு உறக்கம் (தூக்கம்) ஆட்கொண்டது. அத்துடன் சிறிய மழை பொழிவும் நடந்தது.

அதாவது சிறு உறக்கம் ஒருவகை எமது கவலையை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு காரணி. அத்துடன் எமது உடல், உள்ளம் சிறு உறக்கம் காரணமாக புத்துணர்ச்சி பெற்று சிறந்த தைரியம் அடைவதாக அண்மைய உளவியல் சார் உடலியல் மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது.
மேற்படி யுத்தகளத்தில் முஸ்லிம்களை அவர்களின் ஆரோக்கியத்தையும், தெம்பையும் அதிகரிக்க இவ்வாறு இறைவன் உண்டாக்கியதாக அல்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதில் உளவியல் உண்மை பொதிந்துள்ளதாக இன்று நாம் காண்கின்றோம். மேற்படி யுத்தகளத்தில் இருந்த முஸ்லிம் வீரர்கள் இந்நிகழ்வை பற்றி கூறுகையில்....
"தங்களை அறியாமலே நாங்கள் உறங்கிறோம். இதனால் எங்கள் கையில் இருந்த வால் பிடி பிடியிழந்து வால் கீழே விழுந்தன"

அத்துடன் மிக அண்மையில் கண்டறியப்பட்ட மற்றுமொரு உளவியல் உண்மை என்னவெனில்....
சிறு தூறல் மழையில் எமது உள்ளம் மிகப்பெரும் மகிழ்வை அனுபவிக்கின்றது...
இந்நிலைப்பாடு தோற்றவியல் மேற்படி வசனத்தில் பொதிந்துள்ளதனை காணலாம்....
ஆகவே இவ்வாறான அண்மைய உளவியல் உண்மைகளை யார் பதினான்கு நூற்றாண்டுகள் முன்னர் கூறி இருக்க முடியும்....?????
No comments:
Post a Comment