
அவ்வாறான ஒரு படைப்பே உயிரிகள் இனப்பெருக்கத்திற்காக உண்டாக்கும் புணரிகள். இனப்பெருக்க கலம் என்று அழைக்கப்படும் புணரிகள் பொதுவாக ஆண், பெண் என்ற இருவகை உண்டு. பொதுவாக புணரிக்கலங்கள் ஒரு மடியமானவையாக (Haploid) காணப்படும். ஆனால் சாதார ஏனைய கலங்கள் இருமடியம் (Diploid) கொண்டதாக காணப்படும். அவற்றில் ஆண் புணரி விந்து (Sperm) என்றும் பெண் புணரி சூல் அல்லது முட்டை (Egg) என்றும் அழைக்கப்படும். இவற்றின் கருக்கட்டல் (Fertility) மூலமாக உண்டாகும் ஒரு தனிக்கலம் நுகம் (Zygotic) என்று அழைப்போம்.
ஒரு கலம் அதன் அனைத்து செய்திகளையும் அதன் கரு கொண்டுள்ள DNA இல் சேமித்து வைத்திருக்கும். பொதுவாக DNA வை நாம் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு சேமிப்பகம் என்று கூறமுடியும். இனப்பெருக்க புணரிகள் அடிப்படையாக காவுவது DNA வை மாத்திரமே. காரணம் DNA ஒரு உயிரின படைப்பை உண்டாக்கும் அடிப்படை தகவல்கள் அனைத்தையும் உட்பொதிந்து சிறு அமைப்பாக காணப்படும். இதனை எளிய வடிவில் கூறுவதாயின் நாம் கணனிகளில் பயன்படுத்தும் Zip File என்று கூறலாம்.
Zip File உண்டாக்குவதன் நோக்கம் பெரிய அளவுகள் கொண்ட தகவலை சிறிய அளவுகள் கொண்ட ஒரு File வடிவிற்கு மாற்றுதல். இதனால் நாம் பலபெரிய தகவலை சிறிய இடத்தில் சேமித்து வைக்க முடியும்.

புணரிகள் கொண்டுள்ள DNA ஆனது குறித்த அங்கியின் கட்டமைப்பு, தொழிற்பாடு, உடலியல் தோற்றம், குணாதிசியம் போன்ற இயல்புகளை கொண்டதாக அமைந்து காணப்படும். இது குறித்த இனத்திற்கு தனித்துவமானதாக அமைந்து காணப்படும். அதுமட்டுமன்றி பெற்றோரின் இயல்பை பெருமளவு ஒத்ததாக காணப்படும். இதனாலேயே உலகில் பல்வகைமை நிலைபேறடைய வாய்ப்பாகின்றது.
DNA வில் மாற்றங்கள் ஏற்படும்.இது சந்ததி சந்தியாக சிறு சிறு மாற்றங்களை உண்டாக்கும். அதுமட்டுமன்றி சூழலியல் மாற்றங்களினாலும் DNA மாற்றம் ஏற்பட வாய்ப்பாகும். இதனை நாங்கள் விகாரங்கள் என்று அழைப்போம். பொதுவாக தலைமுறையில் விகாரங்கள் காரணமாக பல பிரதிகூலமான இயல்புகள் தோற்றம்பெற்றாலும் சில அனுகூலமான இயல்புகளும் உண்டாகலாம். இதனை அடிப்படையாக்கொண்டு தற்போதைய உயிரியல் மூலக்கூற்றியல் தொழிநுட்பம் (DNA molecular biology technology ) வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தொழிநுட்பத்தில் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பிலும் மாற்றங்கள் உண்டாக்க வாய்ப்புக்கள் தற்போது உண்டாகியுள்ளது. ஆனாலும் எந்த அளவிற்கு சாத்தியம் என்று கூறமுடியாது.
"(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்" (அல்-குர்ஆன் 76:2)
"உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக" (அல்-குர்ஆன் 10:34)
"மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே" (அல்-குர்ஆன் 22:73)
No comments:
Post a Comment