
முத்துக்களை தோற்றுவிக்கும் வல்லமை சிப்பிகளுக்கு மாத்திரமே இருக்கின்றது. காரணம் முத்துக்கள் ஒருவகை சிப்பியின் சுரப்புப் பதார்த்தத்தின் பதிவினால் தோற்றம் பெறுகின்றனவே. அது எவ்வாறு என்று பார்ப்போம்.
சிப்பிகள் தங்களின் இரையை கைபற்றும் விதமாக தங்களின் ஓடுகளை திறந்த நிலையில் காணப்படும். இந்நிலையில் சில பொழுதுகள் நீரோட்டம், கடலின் உள்ளக அலைகள் காரணமாக சிறு கற்கள், படிகங்கள் சிப்பியின் ஓட்டுனுள் நுழைந்துவிடும். இவைகள் சிப்பியின் மென்மையான உடலிற்கு இறையூரை உண்டாக்கும்.


இவைகளை தடுக்க குறித்த பகுதியில் அந்த சிறு கூறுகளை ஒத்துக்கி வைத்து அவற்றின் மீது தன் உடலின் மூலமாக சுரக்கும் வேதிப்பொருள் காலப்போக்கில் பொலிஸ் ஆனா உண்டை வடிவ கோளங்களை தோற்றுவிக்கும். இவைகளே முத்துக்கள் என்று அழைக்கப்படும். அது மட்டுமன்றி தான் உள்ளெடுக்கும் உணவுகளின் படிவுகள் சேர்வதன் மூலமாகவும் இந்த செயன்முறை நடைபெறும்.

நவீன காலங்களின் சில நாடுகள் (இந்தியா, சீனா, இந்தோனேசியா) செயற்கை முறையில் முத்துக்களை தோற்றுவிக்கும் செய்கையை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இயற்கை முத்திற்கும் செயற்கை உற்பத்தி முத்திற்கும் மிகப்பெரும் வேறுபாடு காணப்படும். அதுமட்டுமன்றி வர்த்தக பெறுமதியும் மாறுபட்டது.
இலங்கையின் கரையோரங்களில் முத்துக்குளிக்கும் செயன்முறை பண்டைய காலங்களில் நடைபெற்றதாக நம்பகமான ஆதாரங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளது. கொட்டியாரக்குடா (திருகோணமலை மூதூர்) பகுதி, மன்னார், மட்டக்களப்பு போன்ற இடங்களை குறிப்பிட்டு கூறமுடியும்.
No comments:
Post a Comment