
"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்" (அல்-குர்ஆன் 2:183).
இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மற்றும் யூத சமயங்கள் நோன்பை தங்களின் கடமையாக மேற்கொண்டு வருகின்றார்கள். இதே போல மருத்துவம், மனோ தத்துவம் போன்ற துறைகளும் இவற்றுக்கு சிறந்த வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றது.

விலங்குகளை பாருங்கள் அவற்றுக்கு எப்போதாவது உடல் வீக்கம், தொப்பை, அதீத தசை வளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றதா??? இல்லை காரணம் அவை பசிக்கு மாத்திரம் உணவை உட்கொண்டு வருகிறது. சிங்கம், புலி போன்ற மாமிச உண்ணி வேட்டை மிருகங்கள் சுமார் ஒரு மாதம் எதுவித உணவும் இல்லாமல் பட்டினி கிடக்கின்றன என்று விலங்கியல் ஆய்வுகள் கூறுகின்றது.
சரி நோன்பு நோற்பதனால் என்னதான் நன்மை கிடைக்கிறது என்று பார்த்தால் உடலுக்கு மிக ஆரோக்கியமான பல நன்மைகள் கிடைகின்றது.
1. உடலில் காணப்படும் ஸ்டெம் செல் என்றழைக்கப்படும் உடலை ஆக்கும் அடிப்படைக் கலங்கலான இவைகள் நோன்பு காரணமாக புத்துயிர்ப்பு அடைகின்றது. (மேற்படி ஆய்வு எலிகளில் மேற்கொள்ளப்பட்டு முடிவும் நிறுவப்பட்டது) இதனால் புற்றுநோய்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது.
2. உடலில் மேலதிகமாக சேமிக்கப்பட்டு ஈரல், தோல் போன்ற இடங்களில் காணப்படும் கொழுப்பு விரதம் காரணமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டுகின்றது. இதனால் உடலில் ஏற்படுகின்ற உயர் குருதியமுக்கம், கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்தான நோய்கள் இழிவலவாகின்றது.
3. நோன்பு இருப்பதன் காரணமாக எமது உடலில் காணப்படும் சமிபாட்டுதொகுதி, குருதிச்சுற்றோட்டத் தொகுதி மற்றும் நரம்புத்தொகுதி என்பன மீள் ஒழுங்குபடுத்தப்படுவது மாத்திரமன்றி ஓய்வையும் அனுபவிக்கிறது.
4. குருதியில் காணப்படும் குருதிக் குளுகோஸ் மட்டம் சீராக பேணப்படவும் சமிபாட்டு ஓமோன்கள் தொடர்ச்சியாக சீராக செயற்படவும் சாத்தியமாகின்றது.
5. உளவியல் ரீதியான ஆரோக்கியத்தையும் புது தைரியத்தையும் உணர்வதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
6. உடலில் தேங்கும் நச்சு, மற்றும் பார் உலோகங்களின் செரிமானம் போன்றன நோன்பினால் குறைக்கப்படுகின்றது.
"நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)" (அல்-குர்ஆன் 2:184).
Reference
- https://www.globalhealingcenter.com/natural-health/health-benefits-of-fasting/
- https://www.medicalnewstoday.com/articles/295914.php
No comments:
Post a Comment