
அதற்காக மூதாதையர்கள் நம்பியதை தவறென்று முற்றாக கூறிவிட முடியாது. காரணம் அன்றைய காலங்களில் எம்மவர் மூதாதையர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகள் மிக அண்மித்த காலங்களில் அறிவியல் விஞ்ஞான நிரூபங்களுடன் விஞ்ஞான உண்மைகளாக நிறுவப்பட்டது. அவர்களுக்கு விஞ்ஞானம் சார்ந்து குறித்த அறிவியலை விளக்க முடியாது போனதனால் அவர்களை அதற்கு பயன்படுத்திய வார்த்தை மாயை கொண்ட கருப்பொருள். அதாவது பேய்களும் பிசாசுகளும்...
அவ்வாறாயின் உண்மையில் பேய்கள் இல்லையா என்ற வினா உங்களுக்கு தோன்றலாம். அவ்வாறு தோன்றினால் அதற்கு எனது பதில் இல்லை என்பதே.... சில மத கோட்பாடுகளில் பேய்கள் அதிகளவு நம்பப்பட்டு வருகின்றது. இதற்கான காரணம் இறைவனின் சக்திக்கு நேர் மறை சக்தியை அவர்கள் உணரவேண்டிய தேவைப்பாடு நிலவியது.

குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் போன்றவற்றில் சாத்தான் என்ற ஒன்றையும் இந்துமதம், பௌத்த மதம் போன்றவைகள் அரக்கர்கள் போன்றோரையும் காட்சிப்படுத்தியது. (இது விரிவாக பேச வேண்டிய தலைப்பு. மற்றொரு பதிவில் பாப்போம்)
பண்டைய மக்கள் சில பழக்க வழக்கங்களை மதம் மற்றும் மாயை சார்ந்து மொழிவதுண்டு. அவ்வறானவற்றில் மிகை அறிவியல் உண்மைகள் நிறுவப்பட்டுள்ளது. அவைகள் சிலவற்றை கீழ் காணலாம்.
1. எச்சிப் பேய் - எச்சிப் பேய் என்பது இரவு நேரங்களில் உணவுகள் பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது அவ்வுணவை பாதுகாக்க மரக்கரி (Charcoal - Activated carbon) துண்டுகளை இணைத்து வைப்பார்கள்.
விஞ்ஞானம் உண்மை - மரக்கரி துண்டுகள் நச்சு வாயுக்களை அகத்துருஞ்சும் செயற்பாட்டை மேற்கொள்கின்றது. இதனால் உணவு இலகுவில் பழுதடையாது பாதுகாக்கப்படும்.
2. கொள்ளியாய் பேய் - இப்பேய் குறிப்பாக அடர்ந்த காடுகள், சதுப்பு நிலங்களில் வெளிப்படும். இது தீ உடன் நகரும் ஆற்றல். அன்றைய காலங்களில் காடுகளுக்கு மரம் வெட்டி செல்பவர்கள் இந்த பேயினை காண்பார்கள்.
விஞ்ஞானம் உண்மை - கொள்ளியா பேய் என்பது சதுப்பு நிலங்களில் , ஈரலிப்பான இலைகுழை மூடிய தரைகளில் வெளிப்படுகின்றது. உண்மையில் இது நாம் பயன்படுத்தும் எரிவாயு வகையை சார்ந்த உயிர்வாயு (Bio-gas ) ஆகும். இது வளியில் இலகுவாக தீப்பற்றகூடியது. காடுகளில் இலைகுழைகள் உக்குவதன் காரணமாக இவை தரையின் மேல்மட்டத்தில் அடைக்கப்பட்டு காணப்படும். மனித நடமாட்டம் காரணமாக இவைகள் வெளிவருவதனால் தீப்பற்றும்.
தீயை மனிதன் பார்த்ததும் பயத்தில் ஓட ஆரம்பிக்கையில் மனிதன் இருந்த இடத்தை காற்று நிரப்ப ஆரம்பமாகும். இதனால் நெருப்பும் சேர்ந்து நகரும். இதனால் நெருப்பு தொடர்வதாக எண்ணத்தோன்றும். ஆனால் ஒருசில வினாடிகளிலேயே நெருப்பு இல்லாமலாகிவிடும்.

3. அமுக்குப் பேய் - அமுக்குப் பேய் இரவு நேரங்களில் பெரும் மரங்களின் கீழ் உறங்கும் போது தாக்கும் இயல்புடையது.
விஞ்ஞானம் உண்மை - இரவு வேளைகளில் தாவரங்கள் ஒளித்தொகுப்பு செய்வது இல்லை. இதனால் ஒட்சிசன் செறிவு சற்று இழிவலவாகவே அந்த சூலில் காணப்படும். அதுமட்டுமன்றி தாவரங்களும் உயிரி என்பதனால் சுவாசிக்கும். இரவு வேளையில் சுவாசம் மாத்திரம் நடைபெறுவதனால் காபன் டை ஒக்சைட் (CO2) வளியில் பரவும். இவை சற்று ஏனைய வாயு மூலக்கூறுகளை விட திணிவு அதிகம். இதனால் தாவரத்தின் கீழ் பகுதியில் தரையை அண்டியே இவ்வாயு செறிவடையும்.
மரத்தின் கீழ் தூங்கும் ஒருவர் CO2 வாய்வின் செறிவு காரணமாக சுவாசிக்க சிரமப்படும் நிலைமை உருவாகும். இதனால் மூச்சுத்திணறல், அங்கங்களின் விறைப்பு காரணமாக சதைப்பிடிப்பு, மயக்கம் போன்ற நிலைமைகள் உண்டாகலாம். இதனாலேயே உடலை ஒருவர் அமுக்குவது போன்ற தோற்றப்பாடு உண்டாகும்.

விஞ்ஞானம் உண்மை - அரைஞான் கொடி பொதுவாக இருப்பு, செப்பு,
மற்றும் கலப்புலோகங்களை கொண்டு ஆக்கப்பட்டதாக காணப்படும். இதன் காரணமாக எமது உடலில் உண்டாகும் சிறிய காந்தப்புலம் இழிவலவாகும். அத்துடன் அரைஞான் கொடி குப்பி உள்ளே குறித்த நபரின் தொப்புள்கொடி உலர்த்தப்பட்டு அரைக்கப்பட்டு அதில் பாதுகாப்பாக சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் தொப்புள்கொடி பதார்த்தம் குறித்த நபருக்கு உண்டாகும் தீராத நோய்கள், பெரும் காயங்கள், என்பு முறிவு போன்ற சந்தர்பங்களில் மருந்தாக உபயோகிக்கப்படும். (இதுபற்றி விரிவாக இன்னொரு பதிவில் குறிப்பிடுவேன்)
குறிப்பு - பேய்களுக்கான மேற்படி பெயர்கள் என் ஊர் வழக்கில் பயன்படுத்தப்பட்டதை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன்.
No comments:
Post a Comment