Post Top Ad
Your Ad Spot
Thursday, May 24, 2018
#இறுதிநாளின் #அடையாளங்கள் :
1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின்
வருகை (18:94)(21:96)
2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10)
3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை (27:82)
4. ஈஸாநபியின் வருகை (4:159) (19:33)(43:61)
#இறுதிநாளின்_நிகழ்வுகள் :
1. சூரியன் சுருட்டப்படும்
2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும்
3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும்
4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரின்றி திரியும்
5. விலங்குகள் அனைத்தும் ஒன்றாக திரட்டப்படும்
7. உயிர்கள் அனைத்தும் அதனதன் உடல்களுடன் ஒன்று சேர்க்கப்படும்
8&9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையை
எழுப்பி என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும்
10. வினைபதிவேடுகள் ( நன்மை, தீமை பதியப்பட்ட ஏடு)
விரிக்கப்படும்
11. வானம் பிளக்கப்பட்டு அகற்றப்படும்
12. நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படும் (81:1to 12 )
13. குழந்தைகள் நரைத்த கிழவர்களைபோல் காட்சி அளிப்பார்கள் (73:17)
14. பாலூட்டும்தாய் தனது குழந்தையை மறந்துவிடுவாள் (22:2)
15. கர்பமுடையபெண் தன்வயிற்றில் இருக்கும் குழந்தையை பயத்தால் ஈன்றுவிடுவாள்
(22:2 )
16. மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுவான்! (24:24)
17.மனிதனின் உற்றார் உறவினர்கள் அவனைவிட்டு ஓடுவார்கள்
(6:94)(16:111)(31:33)(35:18)(60:3)(75:10)(80:35)
18. தீயோர் நீலநிறக்கண்களுடன் எழுப்பப்படுவார்கள்
(20:102)
19. காலோடுகால் பின்னிக்கொள்ளும் (75:29, 30)
20. மனிதன் செருப்புஅணியாத நிலையில் எழுப்பப்படுவான்! புகாரி :4740
21. மனிதன் ஆடைஅணியாத நிலையில் எழுப்பப்படுவான்! புகாரி : 4740
22. மனிதன் விருத்தசேனம் (சுன்னத்) செய்யப்படாத நிலையில் எழுப்பப்படுவான்! புகாரி
:4740
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
#இறுதிநாளின் #அடையாளங்கள் #ஹதீஸிலிருந்து தொகுக்கப்பட்டவை :
1. ஒரு அடிமைப்பெண் தன் எஜமானை பெற்றெடுப்பாள். புகாரி :4777
2. காலில் செருப்பணியாத, நிர்வாணமாணவர்கள் மக்களின்
தலைவராவார்கள். புகாரி : 4777
3. தர்மம் செய்யப்படும் பொருட்களை மனிதர்கள் வாங்கமறுப்பார்கள் (அந்த அளவு செல்வம்
கொழிக்கும்) புகாரி : 1411, 1412, 1413, 1414, 1424
4. ஈஸாநபியின் வருகை. புகாரி : 2222
5. ஈஸாநபி " சிலைகளை " உடைப்பார்கள். புகாரி :2222
6. ஈஸாநபி பன்றியை கொல்வார்கள். புகாரி : 2222
7. ஈஸாநபி ஜிஸ்யாவரியை நீக்குவார்கள். புகாரி : 2222
8. செல்வம் கொழிக்கும். புகாரி :2222, 1036
9. கல்வி குறைந்துபோகும், புகாரி : 80, 81, 1036
10. அறியாமை வெளிப்படும். புகாரி : 80, 81
11. விபச்சாரம் பகிரங்கமாக நடக்கும். புகாரி : 80, 81
12. 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற பிறப்புவிகிதம் ஏற்ப்படும் .புகாரி :80, 81, 5231, 5577, 6808
13. இறுதிநாளின் முதல் அடையாளம் ஒரு நெருப்பு கிழக்கிலிருந்து மக்களை துரத்திக்கொண்டு
வந்து மேற்குத்திசையில் ஒன்று சேர்க்கும் புகாரி
: 4480 , முஸ்லிம் : 5162
14. "தஜ்ஜாலின் " வருகை முஸ்லிம் :5228, 5237 திர்மீதி :
2163
15. மதுபானம் பெருகும். புகாரி : 80, 81
16. கருத்த ஒட்டகங்களை மேய்தவர்கள் உயரமான கட்டிடங்களைகட்டி தமக்குள் பெருமையடித்துக்
கொள்வார்கள். புகாரி : 50
17. பெண்கள்! ஒட்டகத்திமில் போல் கொண்டை அணிந்துயிருப்பார்கள் . முஸ்லிம் 3971, 4316
18. பூகம்பங்கள் அதிகரிக்கும். புகாரி : 1036, 7121
19. காலம் சுருங்கும். புகாரி : 1036, திர்மிதீ : 2254
20. குழப்பங்கள் அதிகரிக்கும். புகாரி : 1036, 3176
21. கொலைகள் அதிகரிக்கும். புகாரி : 85 ,1036, 6037, 7061.
22. குடிசைகள் கோபுரமாகும். புகாரி : 7121
23. தகுதியற்றவர்களிடம் பொருப்புகள் ஒப்படைக்கப்படும். புகாரி :59, 6496
24. பாலைவனம் சோலைவனமாகும். முஸ்லிம் : 1681
25. பள்ளிவாசல்களை கட்டி ( அதைக்காட்டி) தமக்குள் பெருமையடித்துக்கொள்வார்கள்.
நஸயி : 682, அபூதாவூத் : 379, இப்னுமாஜா : 731
26. நெருக்கமான கடைவீதிகள் ஏற்படும். அஹ்மத் : 10306
27. ஆடைஅணிந்தும் நிர்வாணமாக காட்சியளிக்கும் பெண்கள் தோன்றுவார்கள். முஸ்லிம்
: 3971, 5098
28. உயிரற்ற பொருட்கள் பேசும். அஹ்மத் : 11365
29. பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டப்படும். அஹ்மத் : 1511
30. தெரிந்தவர்களுக்கு மட்டும் " ஸலாம் " சொல்லும் காலம் வரும். ஹாக்கிம்
: 4/493
31. பள்ளிவாசல்களை போக்குவரத்துக்கு பொதுப்பாதையாக பயன்படுத்தும் காலம் வரும்.
ஹாக்கிம் : 4/493
32. மனிதன் மரணிப்பதற்கு ( தற்கொலை செய்துகொள்ள) ஆசைப்படுவான். புகாரி : 7115, 7121
33. முப்பது பொய்யர்கள் தன்னை " இறைதூதர் " என சொல்லும் காலம்வரும்.
புகாரி : 3609, 7121
34. முந்தைய சமுதாயமக்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் காலம்வரும். அவர்கள் உடும்புப்பொந்தில் நுழைந்தால்
இவர்களும் நுழைவார்கள். புகாரி : 3456, 7319
35. யூதர்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் போர் தொடுப்பார்கள். புகாரி : 2926
36. " காபா " ஆலயம்! கால்கள் சிறுத்த அபிசீனியர்களால் சேதப்படுத்தப்படும்.
( அல்லாஹ் காப்பாற்றுவானாக) புகாரி : 1596
37. யூப்ரடீஸ் ( ஃபுராத்)நதியில் தங்கப்புதையல் கிடைக்கும் அதைஎடுக்க வேண்டாம்.
புகாரி : 7119
38. யமன் நாட்டு கஹ்தான் இன மன்னரின் ஆட்சி ஏற்படும். புகாரி : 3517, 7117
39. அல் ஜஹ்ஜாஹ் மன்னரின் ஆட்சி ஏற்படும். முஸ்லிம் : 5580
40. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்
நீங்கள் போர் புரியாதவரை யுக முடிவு நாள் வராது. முஸ்லீம் 5581
41. ஒரேவாதத்தை எடுத்துவைத்து வாதாடும் இரு மகத்தான சக்திகளுக்கிடையே மாபெரும்யுத்தம்
ஏற்ப்படும். புகாரி : 3609, 7121, 6936
42. பைத் அல் முக்தஸ் ( மஸ்ஜித் அல் அக்ஸா)
வெற்றிகொள்ளப்படும். புகாரி : 3176
43. கொத்து கொத்தாக மரணம் ஏற்படும். புகாரி : 3176
44. மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை வெளியேற்றும் . முஸ்லிம் : 2451
45. கியாமத்வரை ஒருமுஸ்லிம் கூட்டம் இஸ்லாத்திற்காக போராடிக்கொண்டே இருக்கும்.
முஸ்லிம் : 3546
46. சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும். முஸ்லிம் : 5162
47. கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், தீபகற்பத்தில் ஒரு பூகம்பம். முஸ்லிம் : 5162 .
48. இதற்கு முன்பாகவே நான் இறந்துருக்கக்கூடாதா
? என்று மனிதன் ஏங்குவான் புகாரி : 7115
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment