ரமளான் மாதங்கள் வந்துவிட்டாலே
பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு பெரும் ஒரு குழப்பம்...
யாரை பயானுக்கு கொண்டு வருவது????
உள்ளூரில் இருந்தா வெளியூரில்
இருந்தா????
இந்நிலைப்பாடு வருடத்தில் ஏனைய 11 மாதங்களில் சிந்திக்க தோன்றாமல்
இருப்பதற்கான காரணம்தான் என்ன???
பள்ளிவாசல் ஒரு சமூகத்தின் நீதிமன்றம், கல்வி கூடம், ஒன்றுகூடல் மண்டபம், மார்க்க வழிகாட்டல் தளம், சிறுவர்களுக்கான பயிற்சி பட்டறை, சிந்தனைவாதிகளுக்கான வாய்ப்பு களம் இன்னும் எத்தனையோ
எத்தனை..
ஆனால் நாம் இந்நாட்டில் பள்ளிவாசலை எதற்கு
பயன்படுத்துகின்றோம் என்றால் பதில் சற்று யோசித்து கூறவேண்டிய நிலைப்பாடு
உண்டாகியுள்ளது...
வசூல் சேகரிப்பது, ஜும்மா நிகழ்வது, பள்ளி நிர்வாகத்தின் மசூறா இடம், கஞ்சி/ இறைச்சி/ ஈத்தம் பழம் வழங்கும் இடம், லைலதுல் கதிர் இரவில் தங்குவது, பெருநாளில் தொழுவது....
நோன்புகாலங்களில் சிறார்கள் பள்ளிவாயல் பக்கம் அதிகம்
நாடுகின்றார்கள். இந்நிலைமை தொடர்ந்தும் பிணைப்பில் உண்டாக்கவேண்டும். இதற்கு
குறைந்தது மாதத்தில் ஒரு இஜ்திமா நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இங்கே வளவாளர்கள் கொண்டு சமகால இஸ்லாமிய நிலைமை, ஆய்வு சார் சிந்தனை, கேள்வி பதில், அல்குர்ஆன் அறிவியல் சிந்தனை போன்ற பலவற்றை அறிமுகம்
செய்யவேண்டும்.
தொடர்ந்தும் விவாதிக்கும் தலைப்பை (தராவிஹ், பிறை, துவா, மைதானம்) விட்டு வெளிவாருங்கள். மாற்று மதங்களை
பள்ளிவாசலுக்கு உள்வாங்கி அவர்களுக்கு எமது மார்க்கம் பற்றி விபரிக்கவும்.
அவர்களுக்கான சந்தேக கேள்வி பதில் வாய்ப்பை வழங்குங்கள்.
எமது பள்ளிவாசல் தொடர்பை எளிமையாக கூறுவதாயின் ...
நூலகம் (நூல்கள், CD, Projecter) உள்ளடங்கிய பள்ளிவாசல்கள் இந்த நாட்டில்
எத்தனை உள்ளதென்று பாருங்கள்....
சீ சீ அது வேண்டாம்....
பள்ளிவாசலில் குர்ஆன், ஹதீஸ் நூல்களை தவிர்ந்த ஆய்வு சார் நூல் எத்தனை உள்ளதெண்டு
எண்ணிப்பாருங்கள்.....
ஆக சமகாலங்களில் புத்துயிர்ப்புடன் கூட பள்ளிவாயல் சமூகத்தை தோற்றுவிக்கவேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். குறைந்தது நாம் பள்ளிவாயல்களை அலங்கரிப்பதை தவிர்த்து அவற்றை மீள் ஒழுங்குபடுத்த முயற்சிப்போம். இதற்காக எமது உழைப்புக்கள், பொருளாதாரங்களை வழங்கிட முன்வருவோம்.

பள்ளிவாயல்களில் ஆய்வு நூல்கள், இஸ்லாமிய சட்ட நூல்கள், நாட்டில் சட்ட ஒழுங்கு, குற்றவியல் சார்ந்த நூல்கள், சமகால முஸ்லிம்களின் நடைமுறை, பிரச்சினை, சமூகவியல் கட்டமைப்பு குறிப்பாக அல்குர்ஆனை புரிந்துகொள்ளும் நூல்களும் வழிகளையும் வழங்கவேண்டும். இதற்காக சிறிய புத்தக தொகுதியை நாங்கள் அமைக்கவேண்டும்.
மேலும் பள்ளிவாயல்களில் கணினி வசதிகள், போட்டோகொப்பி வசதிகள், மற்றும் தொலைத்தொடர்பாடல் வசதிகளை ஒழுங்குபடுத்தி நவீனமயப்படுத்த வேண்டும். சமகாலங்களில் வெறும் பள்ளிவாயல்களில் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே எமது இஸ்லாமிய கற்கை மாணவர்களின் நடுத்த தலைமுறை வளர்ந்து வருகின்றது. இஸ்லாமிய கல்வி சாலைகள் நவீன மயப்படுத்தப்பட வேண்டும்.
தற்காலங்களில் நாங்கள் கல்வி ரீதியாகவே போராடவேண்டிய மிகப்பெரும் போராட்ட களத்து போராளிகளை தோற்றுவிப்பதற்கு தயாராகவேண்டும்.
No comments:
Post a Comment