
பெரும்பாலும் நன்னீர், உவர்நீர் பகுதிகளில் வாழும் இவைகள் கடல் உயிரினங்களில் நீர் நிலத்தை அண்டி வசிக்கும் முதன்மை உயிரனம். பக்க வாட்டில் (sideways) மிகவேகமாக நகரும் இவைகள் சிறிய உயிரினங்களை உணவாக உண்ணும். பல்வேறு நிறங்களையும் பல்வேறு பருமனையும் கொண்டதாக காணப்படும் இவைகளில் ஒருசில வகைகள் உணவிற்காக அதிகம் பயன்படுத்தப்படும். கடல் உணவுகளில் முதன்மை இடத்தை இவைகள் வகிக்கின்றது. காரணம் இவற்றின் உணவின் தனித்துவ சுவையே..... கடலுணவுகளில் 20 சதவீதம் நண்டுகளே. ஆண்டிற்கு 1.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நண்டுகள் உலகம் முழுவதும் உணவாகின்றன.

நண்டுகள் வகுப்பில் இறால்கள், சிலவகை ஒட்டுண்ணி நண்டுகள் உள்ளடங்கும். உலகில் வாழும் அதிகூடிய உயிரினங்கள் உள்ளடங்கும் பிரிவு ஆத்திரோபோடா என்பதாகும். குறிப்பாக இவற்றின் செயற்பாடுகள் அதீதமாக இருக்கும். கூட்டுக் கண்கள், தெளிவான இலிங்க வேறுபாடு, மற்றும் சமூக வாழ்வை காட்டும் இவைகள் புறவன்கூடாக ஓடைக் கொண்டு காணப்படும். இவற்றின் ஓடுகள் பெரும்பாலும் கைற்றின் எனப்படும் காபோவைதறேற்று பல்பகுதீ வகையாகும். இவற்றின் உடல் மூட்டுக்களைக் கொண்ட தூக்கங்கள் காணப்படும். இதனாலேயே இவற்றை மூட்டுக்களிகள் (ஆத்திரோபோடா) என்று அழைக்கின்றோம். இவற்றின் உடலில் மனித உடலில் காணப்படும் தசைகளான வன்கூட்டுத்தசைகள் காணப்படும்.

ஆண் பெண் என்ற தெளிவான வேறுபாடு இவற்றுக்கு உண்டு. அத்துடன் இவற்றின் பெரும்பான்மை இனம் முட்டைகள் இட கரையை நாடுகின்றது. முட்டைகள் பொறுத்து பின் கடலை தானாகவே இவைகள் சென்றடையும்.

கிறிஸ்மஸ் தீவு என்ற தீவில் சிவப்பு நண்டுகள் பெரும்பான்மையாக வாழ்கின்றது. இத்தீவை சிவப்பு நண்டுகள் தீவு என்றும் அழைக்கின்றார்கள். குறிப்பிட்ட காலத்தில் கோடிக்கணக்கில் கடலை நோக்கி படையெடுக்கும் இவைகளுக்கென பாதுகாப்பு கருதி பாதைகள் கூட அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றால் பாருங்கள்.....
No comments:
Post a Comment