
பெரும்பாலான உயிரினங்களின் நடத்தைகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் கொண்டு நாம் எமது வாழ்கையில் பல படிப்பினைகளை பெற்றுக்கொள்ளும் விதமாகவே இந்த உலகம் அமைந்துள்ளது. அதாவது மனிதான நாம் இந்த உலகத்தில் காணப்படும் படைப்புக்களைப் பற்றி சிந்திக்கும் போது எமது அறிவு மேலும் வளமாகின்றது மட்டுமன்றி உண்மை இறைவனின் ஆற்றல் பற்றியும் அறிந்த வாய்ப்பளிக்கப்படுகின்றது எனலாம்.
அந்தவகையில் ஈசல்கள் பற்றி சற்று பாப்போம்.
பெரும்பாலும் ஈசல்கள் பற்றி தவறான கண்ணோட்டத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். ஒரு நாள் உயிர்வாழும் ஒரு உயிரினம் என்றால் ஈசல் என்றே பெரும்பாலான நபர்கள் கூறுவார்கள். ஏன் நான் கூட பல முறை கூறியுள்ளேன்.
உண்மையில் ஈசல்கள் ஒரு வினோதமான உயிரின வகையை சார்ந்தது... காரணம் அவைகள் ஒரு நாள் மட்டுமே ஈசல்கள் என்ற பெயரில் வாழ்கின்றன என்பதுவே உண்மை. மற்றைய நாட்களில் அவை உண்மை பெயரான எறும்புகள் என்று வாழ்கின்றது....
எறும்புகளா???? என்று வாயை திறக்க வேண்டாம்... அது எவ்வாறு என்று பாப்போம்.
மானிடனை 80% மேல் சமூக வாழ்கை நடைமுறையை காண்பிக்கும் ஒரு சிறு உயிரினம் என்றால் அவைகள் எறும்புகள் மாத்திரமே. எறும்புகள் மனிதனை போல பேசுகின்றது, கலந்துரையாடுகின்றது, சந்தைகள் போகின்றன, போர் புரிகின்றது, களஞ்சியம் செய்கின்றது ஏன் உயிரிழந்த எறும்புகளுக்கு இருதிக்கடமைகள் கூட செய்கின்றது என்று நவீன உயிரியல் ஆய்வுகள் கூறுகின்றது.
எறும்புகள் முள்ளந்தண்டிளிகள் (Invertebrate) கணத்தில் ஆத்திரோபோடா (Arthropod) வகுப்பைச் சார்ந்த உயிரை வகைகளாகும். உலகில் வாழும் உயிரங்கிகளில் பெரும்பாலான உயிரினங்கள் ஆத்திரோபோடா வகுப்பை சார்ந்தவகை. உதாரணமாக எறும்பு, ஈ, நுளம்பு, வண்டு, நண்டு, மட்டைதேள்.....

எறும்புகள் ராணி, ஆண் எறும்புகள், போர்வீர்கள், வேலைக்காரர்கள் என்று வகைகள் உண்டு. இதில் ஆண் எறும்புகள் இனப்பெருக்கத்திற்கு மாத்திரமும் ராணி எறும்பு முட்டை இடல், கட்டளை பிறப்பித்தல் போன்ற செயற்பாட்டையும், ஏனைய எறும்புகள் பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு சேமிப்பு என்பவற்றை குறிப்பாக செய்கின்றன.
ஒரு குறித்த காலோனியில் (குடியிருப்பு) முதிர்ச்சியுற்ற ஆண் பெண் எறும்புகள் புதிய காலோனியை உருவாக்க வேறு இடங்களிற்கு பரவவேண்டிய சூழ்நிலைமை உண்டாகும். இதற்காகவே இவைகளுக்கு இறகுகள் முளைக்கின்றது. இதனால் இவைகள் வேறு இடங்களிற்கு பரவி அவைகள் புதிய குடியிருப்பை தோற்றுவிக்கும்.

ஆனாலும் ஈசல்கள் சூழலுக்கு வெளிவரும்போது பல்லாயிரக்கணக்கிள் வெளிவருகின்றது. இவற்றில் ஒருசிலதே உயிர்வாழ்கின்றன. இயற்கை தாக்கம், தகாத சூழ்நிலைமை மற்றும் மானிட செயற்பாடுகள் மூலமாக இவைகள் அநேகமானவை உயிரிழக்கின்றது. காரணம் இங்கே தக்கன பிழைத்தல் தகாதன மடிதல் என்ற இயற்கை தேர்வு முறை நடைபெறுகின்றது. அவ்வாறு நடைபெறாமல் இருப்பின் உலகில் எறும்புகள் மாத்திரமே உயிர்வாழும்.....
ராணி கறையான்/ எறும்பு பிரத்தியேகமாக இடும் முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈசல்கள் வெளியேறினாலும் அவை அனைத்து புற்றை உருவாக்க முடிவதில்லை. இராணிக் கறையான்/ எறும்பு ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள்வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டைவைக்கும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். நிலத்திற்கு மேலே புற்று எந்த அளவில் உள்ளதோ அதே அளவிற்கு பூமிக்கு கிழேயும் இருக்கும்.
ஒரு எறும்பு கூட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும். முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும். வேலைக்கரா எறும்பு/கரையான்ககள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும்.
புதிய காலோனியை தோற்றுவித்த அந்த ஈசல்கள் அந்த காலோனிக்கு இராணியாக இருக்கும். பின்னர் அவைகள் புதிய தொடக்கத்தை தொடரும்.

குறிப்பு :- ஈசல்கள் கரையான்களில் இருந்தும் தோற்றம்பெறலாம்....
அத்தோடு ஈசல்கள் புரத சத்து உள்ளடக்கம் அதிகம் என்பதனால் தற்போது உணவாக உட்கொள்ளப்படுவதோடு சில மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதாக இன்றைய ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றது.
“எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" (அல்குர்ஆன் 27:18)
"பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை" (அல்குர்ஆன் 6:38)
No comments:
Post a Comment