
இறைவனை பற்றி இறைவன் கூறும் நான்கு வரி விளக்கம். மேற்படி வசனங்கள் மிகவும் சிறியவையாக இருந்தபோதும் இவை கொண்டுள்ள உட்பொருள் மிகவும் விரிவானவை. காரணம் ஒரு இறைவன் தான் இறைவன் என்று கூறுவதற்கு வரையறை செய்யும் வசனங்களே இவைகள்.
உலகில் பலகோடி மானிடர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் கடவுள் நம்பிக்கையில் இருவகையாக வகைப்படுத்த முடியும். ஒன்று நாத்திகர்கள் மற்றையது அநாதிகர்கள். இறைவனை ஏற்காமல் நாத்திகர்களுக்கு பெரும் ஒரு போராட்டமாக அமைவது இறைவனுக்கான வரைவிலக்கணமே. இதில் காணப்படும் தெளிவற்ற தோற்றப்பாட்டின் நேரடி தாக்கமே இறைவன் இல்லை என்று மறுப்பது.

உண்டாகும் தெளிவு இறைவனை முழுமையாக நம்பவும் உண்டாகும் குழப்பம் இறைவனை பற்றி தேடவும் வழிசமைக்கின்றது. இறைவனை பற்றி தேடும் பலர் உண்மை இறைவன் பற்றிய அறிவை பெறாமால் போலி இறைவன் பற்றிய சிந்தாந்த சிந்தையை காண்கின்றார்கள். உலகில் இவர்கள் இறைவனை தேடி அலையும் போது பெரும்பால சந்தர்பங்களில் போலிகளை காண்கின்றார்கள். முடிவில் அவர்களின் கண்களில் காணும் உண்மையையும் சிந்தனை ஏற்கும் கோட்பாடுகளையும் வரையறையாக கொண்டு தனது பாதையை தீர்மானிக்கின்றார்கள்.
பெரும்பாலான சமயங்களில் அவர்களின் சமயக் காப்பாளர்கள் என்ற மேட்டுக்குடியினரின் ஆதிக்கம் காரணமாக மதத்தை மனிதர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படாமல் மறுக்கப்படும் சூழ்நிலைமை காணப்படுகின்றது. இதற்கான காரணம் மேட்டுக்குடிகளின் சுயநலமிக்க போக்கே. பொதுவாக மேட்டுக்குடிகளின் ஜீவனோபாயம், மரியாதை கௌரவம் என்பன அவர்கள் அடிமைகளாக நோக்கும் கடவுள் பக்தர்களை சார்ந்து இருக்கின்றது. உண்மை வெளிப்படின் அவர்களினால் இவ்வுலகில் தொடர்ந்து வியாபாரம் நடத்தமுடியாமல் போய்விடும் என்பதே.
அவ்வாறு இருந்தும் ஏன் மனித இனத்தில் இத்தனை கோடி கடவுள்கள் என்ற வினா உங்களுக்கு உண்டாகலாம். இதற்கு பதில் அவர்கள் வேதத்தை தவறாக புரிந்து கொண்டமையும் வேதம் கூறும் சில சட்டங்கள் ஆரம்பக கால சில வேதக் காப்பாளர்களினால் திறக்கப்பட்டதுமே....
மேலே கூறப்பட்ட நான்கு வரி விளக்கத்தை நீங்கள் காணும் கடவுள்களுக்கு ஒப்பீடு செய்யுங்கள். அப்போது உங்களுக்கு விடை கிடைக்க வாய்ப்பாகும்.
கடவுளே இல்லை என்று கூறுபவர்களுக்கு.... உங்களுக்கு இறைவன் பற்றி உண்மையில் உணரவேண்டுமாயின் நீங்கள் எதுவித உதவிகளும் இல்லாத சமயம் கைகளை விரித்து தனியாக நிற்பதாய் ஒரு நேரம் உணர்வீர்கள். அப்போது இறைவன் பற்றி நீங்கள் உணர வாய்ப்பளிக்கப்படும்.
No comments:
Post a Comment