
கருந்துளை என்றால் என்ன?
அது எவ்வாறு தோற்றம் பெறுகின்றது?
அதன் இயல்புகள் என்ன?
என்ற பல்வேறு வினாக்கள் உங்களுக்கு தோன்றலாம்.
கருந்துளைகள் எனப்படுபவை விண்வெளியில் தோன்றும் ஒருவகையான அதியுயர் ஈர்ப்பு சக்திகொண்ட வானியல் அமைப்பாகும். இவ்வமைப்பு சூரியனைப் போன்ற 3 மடங்கு நட்சத்திரங்களின் இறப்பின் மூலமாக தோற்றம்பெறுகின்றது.
நட்சத்திர இறப்பா??? அப்படி என்றால் என்ன ?
ஒளியை காழல் செய்யும் அமைப்பு நட்சத்திரம்/உடுக்கள் என்று கூறப்படும். உதாரணமாக சூரியன். ஒளியை வெளிவிடாத பொருட்கள் கோள்கள் என்று அழைக்கப்படும். உதாரணமாக பூமி.
ஒவ்வொரு நட்சத்திரமும் தன்னகத்தே நடைபெறும் இரசாயன தாக்கம் காரணமாக உண்டாகும் நெருப்பு புலங்கள் மூலமாக ஒளி பிறப்பாகும். இங்கு நடைபெறும் இரசாயன தாக்கம் கருத்தாக்கம் (அணுக்களின் பிரிகை, சேர்கை) எனப்படும். இதன்மூலமாக அதியுயர் மீடிறன் கொண்ட x கதிர், காமா கதிர்கள் போன்றன விடிவிக்கப்படும்.
அவ்வாறாயின் சூரியனும் இறக்குமா என்றால் ஆம் என்று கூறவேண்டும். தற்போதைய விஞ்ஞானம் இதனை உறுதி செய்கின்றது.
அதாவது சூரியன் தனது ஆயுற்காலத்தில் அரைவாசியை கடந்துவிட்டதாக கூறுகின்றார்கள். இன்னும் சில காலங்களின் பின்னர் சூரியன் ஒளி இழந்து விடும் என்று கூறுகின்றார்கள்....
இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது....
“கியாம நாள் எப்போழுது வரும் என்று (உம் மிடம் ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி, சந்திர ஒளியும் மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்” (அல்-குர்ஆன் 75:6~9)

“நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம்” (அல்-குர்ஆன் 56:75)
No comments:
Post a Comment