கிரேக்க
நாட்டைச் சேர்ந்த வானியலாளரான “தெலஸ்” கி.மு ஏழாம் நூற்றாண்டில் புவியானது தட்டையானது
என்றும், புவியைச்சூழவே சூரியன் மற்றும் சந்திரன் சுற்றிவருவதாகவும் விளக்கினார்.
பூமியின் ஓரங்களில் காணப்படும் மலைகளில் வானம் தாங்கப்பட்டுள்ளது என்ற மடமைக்கருத்தும் ஆரம்பகால மக்களின் எண்ணமாக
இருந்தது.
இருந்தபோதும் கி.மு 6ஆம் நூற்றாண்டில் கிரேக்க
தத்துவஞானியும், கணிதவியலாளருமான பைதகரஸ் புவி கோளவடிவானது என்னும் எண்ணக்கருத்தை
வெளியிட்டார். இதனை கி.மு 2ஆம் நூற்றாண்டில் சந்திர கிரகண அடிப்படையில் அரிஸ்டோட்டில் நிரூபித்துக்
காட்டினார். இருந்தபோதும் கி.பி 1597ஆம் ஆண்டில் விஞ்ஞானியான “பிரான்ஸிஸ் டிரேக்” என்பவரினால்
மேற்கொள்ளப்பட்ட கடல் பயணத்தின் மூலமாக பூமி
கோளவடிவானதென்று நிரூபணமானது.
“மேலும் அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச்
சுற்றுகிறான்; இன்னும் இரவின்
மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது;
(என்று)
(நபியே!) அறிந்து கொள்வீராக!” (அல்-குர்ஆன் 39:5, 31:29)
39:5, 31:29 ஆகிய அல்-குர்ஆன் வசனங்களில்
இரவு, பகல்கள் மாறிமாறித் தோன்றுவதாக இருக்க வேண்டுமாயின் பூமியின் அமைப்பு
தட்டையாக இருப்பின் நிச்சயம் வாய்பில்லாமலாகிவிடும். மேலும் பூமியானது நிலையானதாக
இருந்தாலும் இந்நிகழ்வு நடைபெற சாத்தியமற்றதாக போய்விடும். அத்துடன் புவிமையக் கொள்கையின் அடிப்படையில் சூரியனானது பூமியை சுற்றி
வருவதோடு நிலையாக உள்ளதாகவும் கருதப்பட்டது. மேற்கூறிய விண்ணியல் பற்றிய பிழை யான கோட்பாடுகளினால் ஆரம்பகால அறிஞர்களினால் இரவு, பகல் தோற்றம் குறித்து சரியான விளக்கத்தை அளிக்க முடியாதுபோனது.
முடிவு “நிச்சயமாக பூமியானது கோளவடிவாக இருப்பதுடன் அது தன்னைத் தானே தன்னச்சில்
சுழல்வதாகவும் இருத்தல்” அவசியமாகும். இவ்வாறு இருப்பின் மாத்திரமே இரவுபகல் தொடர்ந்து
மாறி மாறி உண்டாகவும் பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர வித்தியாசங்கள் உண்டாகிடவும்
சாத்தியமானதாக அமையும்.
பூமியானது
தட்டையானதாக இருப்பின் சூரியனானது காலை உதயமாகும் வேளையில் இருள் சடுதியாக
மறைந்துவிடும். அதுபோல சூரியனானது மறையும் வேளையில் இருள் திடீரென பூமியை ஆட்கொண்டுவிடவும் வாய்ப்புண்டு.
ஆனால் எமக்கு இவ்வாறாக நடப்பதில்லை. காரணம் பூமியானது கோளவடிவானதாக இருப்பதனால் வெளிச்சம் பிறப்பதோ அல்லது இருள் பரவுவதோ மெதுமெதுவாக
நடைபெறு கின்றமையை அவதானிக்கப்படுகின்றது.
அஸ்ட்ரோனோமியா நோவா (Astronomiya Nova) என்ற வானியற்துறை நூலின் நூலாசிரியரும்
மற்றும் வானியற்துறையின் பிரபலமான விஞ்ஞானியுமான ஜொஹானஸ் கெப்லர் என்பவரினால் கி.பி
1609இல் மேற்கூறிய நூலானது வெளியிடப்பட்டது. இந்நூலில் கெப்லர் கோள்கள் யாவும் முட்டைவடிவப் பாதையில்
சூரியனைச் சுற்றி வருவதுடன் தன்னச்சில் கோள்கள் யாவும் தானாக சுழல்வதாகவும் கூறினார்.
கெப்லரின் இக்கொள்கையின் வெளிப்பாட்டின் பின்னரே
அனேக விஞ்ஞானிகளினால்
இரவு, பகல்கள் மாறிமாறித் தோன்றுவதற்கு மிகத்தெளிவானதொரு விளக்கத்தை
வழங்க ஏதுவானது. இக்கருத்தினை புனித அல்-குர்ஆன் ஆனது (39:5, 31:29) வசனங்களில் எடுத்துக்கூறுகின்றது. புவி நீள்கோள வடிவானதுதான் என்னும் உண்மையினை மற்றுமொரு இடத்திலும் குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது.
“உதிக்கும் பல திசைகளுக்கு அதிபதியும் பரிபாலகனும் அவனே” (அல்-குர்ஆன் 55:17, 70:40)
இங்கு “உதிக்கும் பல திசைகள்” எனும் கருத்து பயன்படுத்தப்பட்டதன் காரணம்தான்
என்னவென்று சற்று ஆராய்ச்சி செய்ய முற்படுகையில் இதில் பல கருத்துக்கள்
புதைந்துள்ளது என்பதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
“தட்டையாக பூமி இருக்கும்பட்சத்தில் ஒரு
குறித்த புள்ளியில் மாத்திரமே சூரியன் உதயமாகவும் மறையவும் சந்தர்ப்பமுண்டு. ஆனால்
பூமியானது கோளவடிவாக இருப்பின் உதிக்கும் திசைகள் மாறுபட சாத்தியமாகும்” இதனையும்
பல்வேறு திசைகள் என அல்-குர்ஆன் கூறியிருக்க முடியும்.
“பூமியில் காணப்படும் பல்வேறு
இடங்களில் பல்வேறுவகை நேரங்களில் சூரியன் உதயமாகவும் மறையவும் சாத்தியமுள்ளது”
இதனால் இடங்களுக்கு இடங்கள் கிழக்கு, மேற்கு வேறுபட்டு காணப்பட வாய்ப்புண்டு.
இப்படியும் கருத்திற்கொள்ள முடியும்.
பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி
வருவதன் காரணமாகதான் “வருடத்தில் பருவகால
மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் குறித்த ஒரு பிரதேசத்திற்கு சூரியன் உதயமாகும்,
மறையும் நேர எல்லைகளில், திசைகளில்
வித்தியாசம் காணப்படும் சந்தர்ப்பமுண்டு” இதனையும் அல்-குர்ஆன் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கலாம். மற்றுமொரு கருத்து “அனலேமா
நிலைப்பாடு”. இதுபற்றி கீழே சந்திர வளர்ச்சியில் விளக்கியுள்ளேன். இவ்வாறன எல்லாக்கருத்துக்களும் குர்ஆனிய வசனத்துடன் ஒத்துப் போகின்றது.
“இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்” (அல்-குர்ஆன் 79:30, 51:47,48, 15:19,
55:10) மேற்கூறப்பட்ட
அல்-குர்ஆனிய வசனம் புவியின் கோளவடிவ அமைப்புக்கு “தஹாஹாஹ்” என்ற சொல்லை
கையாள்கின்றது. இச்சொல் “தீக்கோழி முட்டைக்கு” அரபு மொழியில் பயன்படுத்தும்
ஒரு வார்த்தையாகும். பொதுவாக தீக்கோழி முட்டையின் அமைப்பினை அறிந்து இருப்போம். அம்முட்டை
சாதாரண முட்டையினை விடப்பெரியதாக இருப்பதுடன் நீள்கோள வடிவாகவும் அமையும். அந்தவகையில் குர்ஆன் கூறும் பூமியின்
புறஅமைப்பு கச்சிதமாக இங்கே ஒழுகுகின்றது.
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம்
பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். (அல்-குர்ஆன் 36:39) இந்த குர்ஆனிய
வசனத்தின் அடிப்படையில் சந்திரன் ஆனது பல நிலைகளில் தோன்றுவதாக இருக்கவேண்டுமாயின்
பூமியானது கோளவடிவானதாக மாத்திரமே இருக்க வேண்டும்.
மேல் இடப்பட்டுள்ள
உருவானது சந்திரனின் நிலைகளை விபரிக்கும் அமைப்பாகும். இவ்வமைப்பு அனலேமா (Analema)
என்றழைக்கப்படும். அனலேமா என்பது சூரியன், சந்திரன் ஒரு குறித்த புள்ளியில் உதயமாகும்
பல்வேறு நிலைகளை குறிக்க அறிவியல் பயன்படுத்தும் நவீன வார்த்தை. குறித்த அப்புள்ளி
களை அவதானிப்பின் உலர்ந்த பேரீச்சை மட்டைக்கு ஒப்பாக அமையும். அல்-குர்ஆன்
பயன்படுத்தும் வர்ணனை அற்புதமானது. இருந்தும் இவ்வுண்மை 20 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
பூமியினைச் சுற்றி சந்திரன் வலம் வருகின்றது. இந்நிலையில் நாம் ஒரு குறித்த
இடத்தில் நிலையாக இருக்கும் நிலைமையினை கருதுவோம். பூமியானது சந்திரனின் குறித்த
பாகத்தை மறைக்கும். இதனால் சந்திரனின் குறித்த ஓர் பாகத்தை அவதானிக்கலாம்.
பின்னர் ஒவ்வொரு நாளும் சந்திரன் முன்னேறி பூமியினை சுற்றிவரும் போது ஓர்நிலையில் எமக்கு நேர் எதிரே
தென்படும். அந்நிலையினை பௌர்ணமி என்போம். இதற்கு மாறாக எதிர்திசைக்கு சந்திரன்
இடம்பெயரும் போது அதனை நாம் அமாவாசை என்போம். இந்நிலைப்பாட்டினை கீழ் தரப்பட்டுள்ள
உருவில் வழக்கியுள்ளேன்.
மேல் உள்ள
நிலைப்பாடுகளிற்கு சந்திரன் உள்ளாக வேண்டுமாயின் புவியானது கண்டிப்பாக கோள வடிவானதாக
இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும். “வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி,
அவற்றிடையே ஒரு விளக்கை
(சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும்
(அவனே) உண்டாக்கினான்” (அல்குர்ஆன் 25:61)
No comments:
Post a Comment