
மேற்படி கருப்பொருளில் அடியெடுத்து நகர்ந்துகொண்டு இருக்கும் இவ்வுலகில் இதுவரை ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்ன என்று பார்க்கையில் சடுதியான உலகளாவிய மாற்றம் குறிப்பாக நவீன அறிவியல் தொழிநுட்பத்தில் அதுவும் இலத்திரனியல் தொழிநுட்பத்தில் பெருமளவு அடைவுமட்டம் கண்டுள்ளது. இது எவ்வாறு ஓரிரு தசாப்பதங்களில் வாய்ப்பாக முடியும் என்று நோக்குகையில் அதற்கு பதிலாக "காலத்தின் தேவை" என்ற பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. இயற்கையில் தாமரை இலையில் காணப்படும் நுண்ணிய நார்கள் நனோ தொழிநுட்பத்தை சார்ந்த ஒன்றாகும்.

டிசம்பர் 29, 1959 அன்று Richard Feynman என்ற அமெரிக்க பௌதீகவியல் விஞ்ஞானி மூலமாக அறிமுகம் செய்யப்படது. குறித்த இந்த தொழிநுட்பம் காபன் அணுவை அடிப்படையாக்கொண்டு" இடைவெளிகள் இல்லாதவாறு உள்ளிருந்து வெளியே மூலக்கூறுகளை அடுக்கும் செயற்பாட்டை" ஒத்த அமைப்பைக்கொண்ட மிகச்சிறு கட்டமைப்பை தோற்றுவித்தலாகும். இங்கே நனோ அதாவது 0.000,000,001 m அளவுகொண்ட அடிப்படை நார்களை கொண்டு ஆக்கப்படும் ஒரு கட்டமைப்பை குறிக்கும். மேற்படி நார்கள் மூலக்கூறுகளை அடிப்படையாக்கொண்டு உறுதிமிக்க பயன்பாடுகொண்ட கருவிகள், பொருட்கள் உற்பத்தி செய்தல் நனோ தொழிநுட்பம் என்று சமகாலத்தில் அழைக்கப்படுகின்றது. இன்னும் நனோ தொழிநுட்பத்தில் காபனின் பிரதிருப்ப வடிவமான பக்கி பந்து (Buckyball) என்ற பிரதிருப்பவடிவம் பயன்படும்.
மேற்படி தொழிநுட்ப வளர்ச்சியினால் மிகப்பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியுள்ளது.
1. நனோ ரோபோக்கள் (Nano Robot) உற்பத்தியாகியுள்ளது. இதனால் வைத்தியத்துறையில் நுண்ணிய அறுவைசிகிச்சை, புலனாய்வு துறையில் உளவு பார்க்கும் நுண்ணிய ரோபோ என்பன உருவாக்கி பயன்படுத்த வாய்ப்பாகியுள்ளது.

3. இலத்திரனியல் துறையில் மிக செயல்திறன் மிக்க மிகச்சிறிய இலத்திரனியல் கூறுகளான இருவாயி, திரான்சிஸ்டர், இலத்திரனியல் வடங்கள், இண்டிகேட்டர் போன்றன தயாரித்தல்.
4. தற்காலத்தில் பயன்படும் சில விளையாட்டு உபகரங்கள், சிலவகை நீண்டகால பயன்மிக்கதான பொருட்கள் உற்பத்தி செய்யப்பயன்படுகின்றது.
நனோ தொழிநுட்பம் பாரிய முன்னேற்றம் கான சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றது.
1. அழுக்கு, கரை, துருப்பிடித்தல் என்பன நிகழ்வதில்லை.
2. அரிதில் வெப்பக்கடத்தி.
3. நீரில் மற்றும் ஏனைய திரவப்பதார்த்தங்களில் ஓட்டதா தன்மை.
4. நிறை மிகவும் மிகக்குறைவு
5. மிக உருதிமிக்கது
6. நீண்டகால பயன்பாடு

1. நனோ ரோபோக்களை கொண்டு ஒருவரை இலகுவாக கொலைசெய்ய முடியும். ஒருவரின் உடலில் செலுத்துவதன் மூலமாக இதயம், மூளை நரம்பு என்பவற்றை செயலிழக்க செய்யமுடியும்.
2. அனுவாயித செயல்திட்டங்களில் மேற்படி தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.
3. சிலவகை உயிரினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நனோ தொழிநுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டை அதிகளவில் உணரவாய்ப்புண்டு. தொழிநுட்ப வளர்ச்சி என்பது அனுகூல பிரதிகூலங்களை உள்ளடக்கியதாகவே அமையும் என்பதை நினைவில்கொள்க.....
No comments:
Post a Comment