
July 8 2010 இல் Christopher Nolan இன் இயக்கத்தில் வெளியா பிரசித்து பெற்ற திரைப்படமே INCEPTION (இன்செப்சன்) என்ற திரைப்படம். மேற்படி திரைப்படம் கனவுகளை திருடுதல் மற்றும் ஒருவரின் சிந்தனையில் கனவுகள் மூலமாக ஒரு கருவை அல்லது நோக்கத்தை உண்டாக்கி அவனது வாழ்வை திசைதிருப்பல் சம்மந்தமாக கொண்டு நகர்கின்றது.
மனிதனுக்கு மட்டும்தான் கனவுகள் உண்டாகுமா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. கனவு என்பது மூளையின் அதீதமிகு செயல்திறன் காரணமாக உண்டாகும் ஒருவகை விம்பத்தோற்றப்பாடு என்று சுருக்கமாக கூறிவிடலாம். ஆனாலும் இங்கே பல தெளிவற்ற விடை மாத்திரமே பலருக்கு உண்டாகும்.
கனவுகள் பற்றி பொதுவாக இறை நம்பிக்கை கொண்ட மானிடர்கள் மற்றும் இறை நம்பிக்கை அற்ற நாத்திகர்கள் இடத்தில் பெரும் ஒரு கருத்துமோதல் இருந்து வரத்தான் செய்கின்றது. ஆனால் நாம் இங்கே உள்ள பொதுவான நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகளை மாத்திரம் சற்று விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.
கனவு என்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தின் போதே பெரும்பாலும் ஏற்படும். காரணம் அப்போதே மூளையின் சிந்தனைதிறன் உயிர்ப்பான நிலையில் செயற்படக்கூடியதாக அமையும். அதுமட்டுமன்றி மூலையில் நடைபெறும் இரசாயன மாற்றம் காரணமாக உண்டாகும் திரைப்படத்தை ஒத்த காட்சிப்புலம் கனவாக கருத்தப்படுகின்றது.
கனவுகள் மூன்றுவகைப்படும்.
1. நல்ல கனவு (சந்தோசம் மிக்கதானதும் வாழ்வில் நாம் ஆசைப்படும் நிகழ்வைக் குறித்துமானதாகவும் அமையும்)
2. கெட்ட கனவு (பயங்கரம், ஆபாசம், திகில் நிறைந்ததாக அமையும்)
:max_bytes(150000):strip_icc()/173063471-crop-56a792163df78cf772973acc.jpg)
ஒரு கனவு ஒரு வினாடி தொடக்கம் இருபது நிமிடங்களை எல்லையாக கொண்டதாக அமையும். ஆனால் கனவில் நாம் பல மணித்தியாலம் கண்ட உணர்வை உணர்கின்றோம். இதற்கான காரணம் மூலையில் அதீத செயற்பாடே அவ்வாறு எமக்கு உணர வைக்க வாய்பாகின்றது.
கனவுகளில் தொடக்கம், முடிவு என்பன பெரும்பாலும் எமக்கு நினைவில் இருப்பதில்லை. கனவின் நடுப்பகுதியே பெரும்பாலம் நினைவில் இருக்கும். குழப்பமற்ற கனவுகளில் தொடர்ச்சி தன்மை பெரும்பாலம் அமைவதில்லை. இருந்தும் சற்று தொடர்புடமை அமையப்பெற்ற வாய்ப்புண்டு.
தூக்கம் களைந்து எழுந்து ஐந்து நிமிடங்களில் கனவின் சுமார் 50 சதவீதமானவையும் இன்னும் 20 நிமிடங்களில் 90% கனவு நினைவுகள் மறந்துவிடும். ஆனாலும் சிலபகுதி நினைவில் இருக்கும். சிலருக்கு ஒரு நிகழ்வு ஏற்படும் போது இது எமது வாழ்வில் முன்பே நடந்தது போல சிந்தை உண்டாகலாம். இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கம் அளிப்பது சற்று கடினம்.
கனவுகள் ஏற்படும் நிலைமை.
1. பொதுவாக கனவுகள் நாம் அதிகம் ஆசைப்படும் காரணி கனவாக வரலாம்.

3. தூங்கும் இறுதி நிமிடங்களில் நீங்கள் யோசித்த விடயம் கனவாக மாறலாம்.
4. சில பொழுதுகள் உங்கள் வாழ்வில் எண்ணிய அல்லது கற்பனை செய்த நிகழ்வுகள் கனவாக வரலாம்.
5. பெரும்பாலான கனவுகள் நீங்கள் எதைபற்றி அதிகம் சிந்திக்கின்ற பேசுகின்ற காரணியாக அமையும்.
கனவுகளில் மூன்று நிலை காட்சி காணப்படும்.
1. நீங்கள் குறித்த கனவில் உங்களை நீங்களே காணகின்ற நிலைமை.
2. நீங்கள் உங்களை காணமல் மற்றவர்களை காணும் தோற்றப்பாடு.
3. விம்பத்தோற்றப்பாடு நிலைமை.

இன்னும் மூளை அதிகமாக வேலைசெய்வதன் காரணமாக உங்களில் கண்கள் மிகவேகமாக அசையக்கூடியதாக இருக்கும். இதன் காரணமாக திடீரென விழிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
புனித குர்ஆன் கனவுகள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை விபரிக்கின்றது.
No comments:
Post a Comment