சமூக மட்டத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு சமூக வலைத்தளமே முகநூல் (Facebook). அந்தவகையில் சமகாலங்களில் இளஞ்சர்கள் தொடக்கம் முதியோர்கள் வரை எதுவித பாகுபாடு இன்றி வரவேற்ப்பை பெற்ற இது உண்மையில் அதிகளவான அனுகூலங்களை கொண்டு அமையப்பெற்றாலும் இதற்கு நிகர்மாராக பாரதூரமான சில பிரதிகூலங்களை சமூக மட்டத்தில் மாத்திரமன்றி தனிமனித வாழ்விலும் ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் முகநூல் இளம் எழுத்தாளர்களுக்கு, அரசியல் வாதிகளுக்கு, வியாபார நோக்கம் கொண்ட வியாபாரிகளுக்கு மற்றும் செய்தி ஊடகங்களுக்கு பெரும் ஒரு வகிபாகத்தை வழங்கி சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை உண்டாக்கியுள்ளதை அண்மைக்காலத்தில் காணமுடிகின்றது.
இவ்வாறு ஒருபுறம் இருக்க மறுபுறம் உளவியல் ரீதியான மிகப்பெரும் பலஹீனத்தை உண்டாகியுள்ளது இந்த முகநூல். அதாவது முகநூலில் பதிவேற்றம் செய்யப்படும் படைப்புக்கள் சில பொழுதுகளில் உண்மை உழைப்பிற்கான வரவேற்ப்பை அடையமுடியாமல் இருந்து இருக்கும். இன்னும் அற்பமான படைப்புக்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கபெற்று இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு படைப்பாளன் மிகப்பெரும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றான் என்று அண்மைய உளவியல் சார் ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
அத்துடன் ஒருவகை மாயை தோற்றப்பாடு இங்கே காட்சிப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதாவது தங்கள் வாழ்கையில் நடைபெறும் வெற்றிகள், சந்தோசமான நிகழ்வுகள், நல்ல காரியங்களை பதிவேற்றம் செய்வதனால் இதனை பார்க்கும் ஏனைய முகநூல் நபர்கள் குறித்த நபரின் வாழ்வை எண்ணி பொறாமை கொள்வது மாத்திரமன்றி தனது வாழ்வை என்னை மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் விரக்தியும் அடைகின்றார்.
அத்துடன் முகநூலில் பெரும்பாலும் ஒருவர் தனது வாழ்வில் நடைபெற்ற நேர் தோற்றங்களை மட்டுமே அதிகம் பதிவேற்கின்றார்கள். இதனால் இவர்களின் வாழ்வில் நடைபெறும் பல கசப்பான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படாமலே குழிதோண்டி புதைக்கப்படுகின்றது.
உண்மையில் வாழ்வின் எதார்த்தம் வெற்றி, தோல்வி, கஷ்டம், நஷ்டம், கவலை, சந்தோசம் போன்ற காரணிகளில் அடங்கியுள்ளது. ஆனால் முகநூலில் இவைகள் எல்லாம் பிரதிபலிப்பதில்லை. இதன் தாக்கம் காரணமாக பல உளவியல் சார்ந்த நோய்களுக்கு இன்றைய இளம் தலைமுறையினர் உள்ளாகின்றார்கள்.

அவ்வாறாயின் இதனை எவ்வாறு இழிவலவாக்குவது என்றால் தனிநபர் வாழ்வில் சிந்தனையில் தெளிவு பெறவேண்டும். அதாவது முகநூலில் பதிவேற்கப்படும் பதிவுகளுக்கு கிடைக்கபெறும் வரவேற்ப்பை பெரிதாக எண்ணி அதில் மூழ்கிவிடாது முகநூல் பதிவுகளை செய்தியாகவும் எமது சிந்தனைக்கு உட்பட்டதாகவும் எண்ணவேண்டும். அத்துடன் செய்திகள் பதிவேற்றம் செய்தபின் அதற்கு கிடைக்கப்பெறும் Like, Comment, Share என்பவற்றை ஒப்பீடு செய்யாமல் தனக்கென தனித்துவ பாதையில் பயணிக்க தயார்படுத்தி அதேகேற்றால் போல தனது முன்னெடுப்பை தொடரவேண்டும்.
அவ்வாறு இல்லை எனின் உங்களில் சிந்தனை அற்ப இலாபங்களுக்குள் சுருக்கிவிடுவது மாத்திரமன்றி அவற்றின் அடைவுமட்டம் பெருமளவாக இருக்கமாட்டாது.
நீங்கள் யார் என்பதை உங்களின் செயற்பாடும் சிந்தனையும் மாத்திரமே பிரதிபலிக்கும்.......
No comments:
Post a Comment