
"புறவிசைகள் தாக்காதவிடத்து ஓய்வில் உள்ள உடல் ஓய்விலும்; இயக்கத்தில் இருக்கும் உடல் சீரான இயக்கத்திலும் ஒழுகும்"
உங்கள் கடந்த காலத்து வாழ்கையை ஒருகணம் மீட்டிப்பாருங்கள். உங்களின் வாழ்க்கையினை மாற்றும் ஒரு குறித்த ஒரு திருப்பப்புள்ளியினை சந்திக்க நேரிட்டு இருந்து இருக்கலாம். இல்லை நீங்கள் அந்த தருவாய்க்காக காத்திருக்கலாம். எது எவ்வாறோ...... உங்களில் இயல்பான உலக வாழ்வின் இயக்கத்தை தீர்மானிக்க உங்களை சூழவுள்ள புறக்காரணிகள் ஏதோ ஒரு வகையில் செல்வாக்குச்செலுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்கையில் சில தருணங்கள் நீங்கள் கடந்துபோகும் போது அவற்றை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ உணர்ந்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறான தருணங்களில் நீங்கள் எடுக்கம் முடிவு, மற்றும் செயற்பாடு உங்களின் தற்கால அல்லது எதிர்கால வாழ்கையில் பிரதிபலிப்பை உண்டாக்கி இருக்கலாம்.

"எந்தவொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கம் உணரப்படும்"
உங்களின் வாழ்கையில் புறச்சூழலில் இருந்து புறவிசைகள் உங்களின் மீது தொழிற்பட்டு இருக்கலாம். அவ்வாறான விசைகளுக்கு மறுவிசையை நீங்கள் கண்டிப்பாக கொடுத்து அல்லது கொடுக்க காத்திருக்கலாம். காரணம் மூன்றாம் விதியின் கருப்பொருள் இதனை குறித்து நிற்கின்றனது.

இருந்தும் பலர் எமது வாழ்கையில் நல்லது, கெட்டது, துரோகம், ஊக்குவிப்பு செய்யத்துணியலாம். மாறாக இதன் பிரதிபலன் அவர்கள் வாழ்விலே செல்வாக்குச்செலுத்தும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
நீங்கள் என்றோ ஒருநாள் இயல்பான இயக்கத்தில் இருந்து சடுதியாக ஓய்வுறும் ஒரு துணிக்கை என்பதை நினைவில் கொண்டு உங்கள் வாழ்வை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment