நீங்கள் யார் என்பதை மற்றவர் கூறி நீங்கள் அறிவீர்களாயின் உங்களை போன்ற
அறிவீனர்கள் இவ்வுலகில் இல்லை என்று நான் கூறுவேன். காரணம் உங்களை பற்றி நீங்கள்
முதலில் புரிந்துகொள்ளவேண்டுமாயின் ஒருகணம் நீங்கள் இதுவரை காலமும் பெற்றவை பற்றி
மீட்டிப் பாருங்கள். இறந்த காலம் நீங்கள் யார் என்பதை சிறப்பாக சித்தரிக்கும்.
ஒரு குழந்தை இவ்வாறுதான் ஆகவேண்டும் என்பதை அவனது பெற்றோர் கரு உண்டாகும்
வேளையில் தீர்மானிக்கின்றார்கள். இதைவிடுத்து இறைவன் மறுபுறம் உங்களின் மொத்த
சுயசரிதையையும் வரைந்து வைத்துவிட்டான். அவ்வாறு இருக்க உங்களை இவ்வுலகம்
தீர்மானிக்குமாயின் நீங்கள் வாழ்வதிலும் பார்க்க மடிவது ஏற்கத்தகுந்தது. காரணம்
கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் இவ்வுலகு இடம் அளிப்பதில்லை.
சுருக்கமாக கூறுவதாயின்
இயற்கைத் தேர்வு - தக்கன பிழைத்தல். தகாதென மடிதல்.
அதாவது சூழலுக்கு நீங்கள் தகுதியானவர் எனின் சூழல் உங்களை தேர்வு செய்யும். இதற்கு
நல்லதொரு உதாரணம் கூறுவர். பாலைவன ஒட்டகத்தின் கதையை..... ஆக முடிவாகிறது...."முயற்சி"
எனும் காரணி....
உங்கள் சிந்தனை இலக்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல.... மாறாக அவைகள்
எவராலும் அளவிட முடியாத முடிவிலி எனலாம். “நீங்கள் யார் என்பதை உங்கள் சிந்தனையும்
செயற்பாடுமே தீர்மானிக்கும்”
அற்ப காரணங்களுக்காய் உங்கள் வாழ்வின் பாதையை மாற்றிவிடாதீர்கள். நீ என்பது
உனது உள்ளத்தின் உந்து சக்தி. ஆகவே இலக்கை அடைய பாதைகளை மாற்றி பயணத்தை
தொடருங்கள். உங்கள் பாதையில் பயணிக்க நிச்சயம் காத்திருக்கின்றது ஒரு தலைமுறை. முன்னோடியாக
நீங்கள் ஏன் இதுவரை மாறவில்லை. காரணம் எனது சமூகம் என்று மட்டும் கூறாதீர்கள்....
நீங்கள் கூறும் சமூகம் ஒரு மாயை என்பார்கள் சாதனையாளர்கள். இதனை நீங்கள்
எப்போது உணர்கின்றீர்களோ அப்போது விடுபடுவீர்கள் கூண்டில் இருந்து. அதுவரை நீங்கள்
கிணத்துத்தவளையே.... நீங்களும் சாதனையாளனாக மாறவேண்டுமா அற்ப காரணங்களுக்கு குட்டைகளாய் தேங்கி
கிடக்காது சலசலத்து ஓடும் நதியாக மாறுங்கள். தானாகவே அழுக்குகள் உங்களை விட்டு
நீங்கி அடியில் தேங்கியும் கரையில் ஒதுங்கியும் தூய்மை பெறுவீர்கள்.
குறுகிய சிந்தனையும் உங்களை நீங்கள் உணராத உணர்வும் என்றும் உங்களை முனே
நடைபோட கற்றுத்தராது. உணர்வுகள் எனும் அடிமை சங்கிலியினை உடைத்து உருவாக்குங்கள்
உங்களின் உன்னதமிகு வாழ்வை. முயற்சியாளனுக்கே காத்திருக்கின்றது உங்களுக்கான
வாயில்களும் வாய்ப்புகளும்.
உங்களின் வாழ்வை சிறந்த ஆலோசனை, வழிகாட்டல்கள் வரலாற்று முன்மாதிரிகளை கொண்டு
திட்டமிட்டு திட்டத்தை திறன்பட திறிப்பதில் திருப்தி காணுங்கள். நீங்கள் யாராக
இருந்தாலும் உங்களின் முயற்சி நிச்சயமாக ஒருவனுக்கேனும் பயனுடையதாக அமையும். மற்றவருக்காக வாழாதீர்கள். அவர்கள் ஒருபோதும் உங்களின் தோல்விகளில் உடன் நின்றவர்கள் அன்று. மாறாக நீங்கள் தோற்ற வேளையில் ஆழ்மனதில் அகமகிழ்வு கொண்டவர்களே. நீங்கள் உங்களுக்கு உண்மையாளராக இருந்தால் இயல்பாகவே நீங்கள் அடுத்தவருக்கு பயனுள்ளவர்களாக ஆகின்றீர்கள்.
சமூக வலைத்தள (முகநூல்) பதிவாளர்களுக்கு எனது வேண்டுகோள் " நீங்கள் உங்கள் படைப்பை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருங்கள். உங்களின் படைப்பின் தரம் அற்பமான Like, Comment, Share தீர்மானித்து விடாது. ஆகவே உங்களின் படைப்பின் முதல் வெற்றி எத்தனை நபர்கள் புரிந்துகொண்ட கற்றுக்கொண்டார்கள் என்பதை சார்ந்தது. இறைவனுக்காக உங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்யுங்கள்.
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார். (அல்குர்ஆன் 2:46)
நீங்கள் யார் என்பது உங்களின் சிந்தனையும் செயற்பாடுமே
நிர்ணயிக்கும்.....என்பதில் உறுதிகொண்டு உயர்வுற முயற்சியெனும் உரமிடுங்கள்....சூழலில்
தானாய் வளர்க்கப்படுவீர்கள்.
No comments:
Post a Comment