ஒரு
குற்றத்திற்கான தண்டனை வழங்குதல் என்பது அக்குற்றம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதாக
அமைவது அல்லது அக்குற்றம் நடைபெறும் வீதத்தை குறைப்பது அல்லது அக்குற்றத்திற்கான
தண்டனை மீதான விழிப்புணர்வை மானிட உள்ளங்களில் உதயமாகச் செய்வதுமே ஆகும்.
ஆனாலும் அநேகமான நாடுகளில்
குற்றவியல் சட்டம் என்பது வெறும் கண்துடைப்பிற்கு அமில்படுத்தப்படுவதாகவே
அமைந்துள்ளது. அந்தவகையில் குற்றம் என்பது தீர ஆராயப்பட்ட பின்னரே அதற்கான தண்டனை வழங்கப்படுதல்
வேண்டும். இன்னும் இவ்விடயத்தில் அகப்புறக் காரணிகளை காரண காரியங்களுடன் ஒப்பீடு
செய்யப்பட்டு தீர்ப்பு வழங்குவதில் உள்ளது ஒரு சட்டத்தின் தரம் மற்றும் குற்றவியல்
நடைமுறை....
சமகாலங்களில் நடைமுறையில்
உள்ள குற்றவியல் சட்டங்களையும் அது நடைமுறைப்படுத்தப்படும் விதங்களையும் ஒப்பாய்வு
செய்யும் போது அது எமக்கு உணர்த்தும் விடயம் “சட்டத்தின் பிடியில் இருந்து
தப்பிப்பது இலகு” என்ற மறைத் தோற்றப்பாடு. இதனை சமகாலங்களில் எமது அன்றாட
வாழ்விலும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
சமூகத்தில் திருடன், கொலைகாரணம்,
கொள்ளைக்காரன், ஏமாற்றுக்காரன் என்பன தலைநிமிர்ந்தே வாழ்கின்றான். இன்னும்
பெண்ணின் புனிதத்தை பிடிங்கி பறித்தவன் கூட மக்கள் போராட்டம் மூலமாக போற்றப்படும்
நிலைக்கு உருவாகியுள்ளது எமது சமூகத்தில் குற்றவியல் தண்டனையின் பிரதிபலிப்பு.
அதுமட்டுமன்றி நாட்டின்
குற்றவியல் சட்டம் ஒரு குற்றவாளிக்கு மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் என்ணத்தை
தூண்டுவதாகவே அமைந்துள்ளது. மேலும் குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனையின் உணர்வு
பெரும்பாலான குற்றவாளிகள் வாழ்வில் பிரதிபலிப்பதில்லை.
மூன்றுவேளை மூச்சுமுட்ட உண்டு
உண்டில் நிறைக்கின்றான் கைதி... ஆனால் வியர்வை சிந்தி வயிற்றை நிரப்பிட
போராடுகிறான் சாமனிய மானுடன்.... என்னவொரு அந்தஸ்து பரவலாக்கம் இன்றைய நவீன
உலகில்....
ஒரு நாட்டில் பொருளாதரத்தின்
ஒரு குறித்த பங்கு சிறைச்சாலை பராமரிப்பிற்கு ஒதுக்கப்படுகின்றது. இந்நிதி
அன்றாடம் கல்வி, பசி என்பவற்றிற்கு எங்கும் சமூகத்திற்கு சொந்தமானது என்று
இன்றுவரை எவராலும் உணரப்படவில்லை. அரசியல் ரீதியாக போராட்டம் மேற்கொள்ளும் நாம்
ஒரு குறித்த சில நாட்களில் அப்போராட்டத்தை மறந்துவிடுகின்றோம். காரணம் நாம் தான்
புரட்சிக்கார்களே.......
எத்தனை கற்பழிப்பு
காலத்துக்காலம் ஆஷிபா... நிர்பயா ....வித்தியா .... சேயா....
எத்தனை கொலை...
எத்தனை கொள்ளை ....
காலத்திற்கு காலம் இவைகள்
நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அவைகள் வெறும் செய்திகளாக பதிவாகி தொடர்
குறியாக மாறுமே தவிர அவைகளுக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்பது மட்டும் உண்மை.
இஸ்லாமிய தண்டனை
1. கொலை (தலை துண்டிக்கப்படல், பாதிக்கப்பட்டவர் விரும்பினால் நஷ்டயீடு/ மன்னிப்பு)
2. களவு / கொள்ளை (கரம் துண்டிக்கப்படல்)
3. விபச்சாரம் (திருமணம் ஆனவர் எனின் கல்லெறிந்து கொலை, திருமணம் ஆகாதவர் எனின் 100 கசையடி)
4. புறம் பேசுதல், பொய் சாட்சி,
இட்டுக்கட்டுதல், வதந்தி (80 கசையடி)
5. மது அருந்துதல் (40 கசையடி)
6. சமூகவிரோத குற்றம் (தலை துண்டிக்கப்படல் / நாடுகடத்தல்)
7. மதமாற்றம் (தலை துண்டிக்கப்படல்)
இஸ்லாமிய சட்டத்தை
வெளிப்படையாக நோக்கும்போது கடும்போக்கு குற்றவியல் தண்டனையாக இருக்கும். இதனால்
பலர் மனித உரிமை மீறல் என்று குரல்கொடுக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அவர் பதிக்காத
வரை இவ்வாறே பேசமுடியும்.
இஸ்லாமிய சட்டங்களை குறைந்தது
ஒருவருடம் ஒவ்வொரு நாடும் நிறைவேற்றுமாயின் இவ்வுலகில் சிறைகூடங்களை சிறுவர்
கூடங்களாக மாற்றிட முடியும் என்பது எனது நிலைப்பாடு.
No comments:
Post a Comment