Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 9, 2018

இயற்கைவளச் சுரண்டல்

Image may contain: 7 people, people smiling, people standing and outdoorஒரு நாட்டின் அல்லது ஒரு ஊரின் தனித்துவ சொத்து மற்றும் உரிமையே இயற்கை அன்னை வழங்கிய இயற்கை வளங்கள். ஆனாலும் இவைகள் மானிடர்களின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் நுகர்வு குறித்த வளத்தின் மீதான எதிர்கால நிலைத்திருப்பு, தேவை இன்னும் கேள்வி என்பவற்றிக்கு ஒரு #கேள்விக்குறியினை உண்டாக்குகின்றது.
மிதமிஞ்சிய வளப்பயன்பாடு எதிர்காலத்தில் இயற்கை சீர்கேடுகள், சமூக பொருளாதார ஊனத்தையும் ஏற்படுத்த வழிவகுக்கலாம். இவ்வாறானதொரு பிரச்சினையே தற்போது மூதூர் பகுதியில் உருவெடுத்துள்ளது. “#மணல்_கொள்ளை”................
மணல் கொள்ளை என்ற ஒரு பிரச்சினையினை நான் இருவெவ்வேறு பொருள் (அனுகூலம் மற்றும் பிரதிகூலம்) கொண்டு நோக்குகின்றேன்.
1. #மூதூரின்_இயற்கை_வளம்_அத்துமீறி_சுரண்டப்படுதல் – இதனால் மண்ணிற்கான கேள்வி, பற்றாக்குறை, அதீத விலை உயர்வு
2. #பிரதேச_வாதம் – பல்வேறு கழிமுகங்கள் இலங்கை கரையோரத்தில் இருந்தும் கிழக்கு கரையோரத்தில் திருமலை குறிவைத்து கருவறுக்கப்படுகின்றமை. இதனால் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் பொருளாதா முடக்கம்.
3. #குறித்த_ஒரு_சாராரின்_சட்டைப்பை_வீக்கம் – அரசியல், பண முதலைகள், சண்டியர்கள் போன்ற கூட்டத்தின் பின்னே பொது சமூகச் சொத்துக்கள் சொந்தம் கொண்டாடப்பட்டு சொந்த சட்டைப்பை நிரப்பப்படுகின்றது.
4. #இயற்கை_அழிவு – கண்டல் சாகியம், கழிமுக வளம் (மீன், கடல் தாவரங்கள், நன்நீர் வாழ் உயிரினங்கள், உள்நாட்டு சுதேச இனங்கள்)
5. #அப்பாவி_மனிதர்கள்_பகடைக்காய்களாக – முதலாளி வர்கத்தின் செயற்பாட்டால் எமது ஊர் மற்றும் அண்டையூர்களின் அப்பாவி மனிதர்கள் அரசினால் கைதாகின்றமை. இதனால் அவன் குடுபத்தின் கல்வி, பொருளாதாரம், குடும்பவியல் வாழ்வு ????????????????
மகாவெலி கழிமுகத்தை பொறுத்தவரை மண் அகழ்வு சாத்தியமான பிரதேசமாகும். இவைகள் முறையாக நுகரப்படின் அவைகள் பயனுடையதாக அமைகின்றது.
Image may contain: 9 people, crowd and outdoor1. #மண்_வளத்தின்_நுகர்வு – மண் ஒதுங்கும் பகுதியில் கட்டாயம் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டே ஆகவேண்டும். காரணம் மண் அகழ்வு தடுக்கப்படின் ஆற்று நீர் கடலுடன் சங்கமிக்கும் வேகம் குறைவதால் மகாவலி ஆற்றை சூழவுள்ள பிரதேசம் வெள்ளத்தில் மூழ்குதல். இதனால் வயல் நிலம், கால்நடை மேச்சல் நிலம் பாதிப்புற்று பெரும் பொருளாதாள வீழ்ச்சிக்கு வழிகோலும்.
2. #ஜீவனோபாயம் – மண் அகழ்வு சார்ந்து மூதூர் பகுதியில் குறித்த கிராமமே தங்கியிள்ளது. மிகப்பெறும் ஜீவனோபாயத்தையும் குறித்த சமூகத்தின் வாழ்வியல் பொருளாதார காரணியாக இது திகழ்கின்றது. இவைகள் கையடிக்கப்படுவதன் மூலமாக அச்சமூகத்தின் எதிர்கால நிலைத்திருப்பு மற்றும் #பொருளாதாரம்#சமூக_கட்டமைப்பு#தொழில்முறைமை#குடும்பவியல்#கல்வி#கலாச்சாரம்என்று பெரும் அடிப்படைத்தளம் ஆட்டம்காண வாய்ப்பாகும். (இவைகள் பெரும் கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டியவை)
3. #பொருளாதார_காரணி – மண் அகழ்வு காரணமாக எமது பிரதேச சபை கஜானா உயர்வதுடன் அவைகள் மூலமாக தொழில்வாப்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் வேலையில்ல திண்டாட்டம் சற்று சீர்தூக்கியுள்ளது.
4. #அணைகள்#குளக்கட்டு#பாலங்கள் – மண் அகழ்வு காரணமாக மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன் அணைகள் குளக்கட்டு பாலங்கள் நிலைத்திருப்பும் நீடிக்கப்படுகின்றது.

ஆகவே ஒரு பிரச்சினைக்கான தீர்வை நாம் ஒருமுகம் கொண்டு நோக்கும் பார்வையினை மாற்றவேண்டும். சமூகத்தில் உள்ள பலரின் நோக்கம் குறுகிய கால வெலைத்திட்டங்கலாகவே அமைவதனால் பல்வேறு சமூக சீர்கேடு மற்றும் பொருளாதார கட்டமைப்பு அழிவடைய காரணமாகின்றது.
பிரச்சினைகளை எவ்வாறு நாம் நோக்குகின்றோம் என்பதனை பொறுத்தே அவைகள் தீர்க்கப்பட தீர்கமான முடிவு எட்டப்படும் இல்லை அவைகள் பிரச்சினைகளாக மாத்திரமே பதிவாகும்.
Image may contain: outdoor நீண்டகால சிந்தனைமிக்க வேண்டுகோள்களை முன்வைக்கவேண்டும்.
1. எமது வளத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
2. அத்துமீறிய மண் அகழ்வு திருத்தப்படவேண்டும்.
3. காவல்துறை இயற்கை சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்தும் இவ்விடயத்தை அவதானிக்க வேண்டும்.
4. மண் நுகர்விற்கான பேமிட் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வருடாந்தம் விநியோகிக்கப்படவேண்டும்.
5. உள்ளூர் கூலி வேலையாட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கவேண்டும்.
6. குறிப்பிட்ட இடம், நேரம் காலத்தில் மண் அகழ்வு நிர்ணயம் செய்யப்படவேண்டும்.
7. சுழற்சி முறை, வெளிப்படை ஏலம் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages