ஒரு இயந்திரம் எப்போதுமே
அதற்கு மேலதிகமான ஒரு பாகத்தை கொண்டிருக்கமாட்டாது. ஒரு இயந்திரத்தில் காணப்படும்
ஒரு சிறு சுரையாணி (Bolt) கூட ஏதோவொரு காரணத்திற்காகவே அவ்வியந்திரத்தில்
பொருத்தப்பட்டுக் காணப்படும். ஒரு சிறு இயந்திரத்தை ஒத்த பெரும் ஓர் கட்டமைப்பே
இந்த பிரபஞ்சத்தில் சிறு பகுதியாகக் காணப்படும் பூமியும் அது உள்ளடக்கி இருக்கும்
ஒவ்வொரு பொருளும் உயிர்களும்.
ஆகவே பூமியின் கட்டமைப்பை
பூர்த்திசெய்யும் ஒரு அங்கத்தில் நானும் நீங்களும் உள்வாங்கப்படுகின்றோம் என்பதே
உண்மை. ஆகவே இறைவன் வீணாக என்னையும் உங்களையும் படைக்கவில்லை என்பது புலனாகின்றது.
ஒரு இயந்திரத்தில் ஒரு சிறு
சுரையாணி எவ்வாறு அவ்வியந்திரம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவு செய்வதில்
தனது பங்களிப்பை செய்கிறதோ அதேபோல் தான் ஒவ்வொரு மானிடனும் இவ்வுலகின்
தொழிற்பாட்டை, நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்காற்றுகின்றான்.
ஒவ்வொரு இயந்திரமும் ஒரு
குறித்தவொரு காரியத்திற்காக படைக்கப்பட்டு காணப்படும். அதற்கான வாய்ப்பு, சந்தர்பம் சூழ்நிலை என்பவற்றை அவை எதிர்பார்த்து
காத்திருக்கும். இன்னும் சில தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை சரிவரை செய்து குறித்த
காலத்தின் பின்னர் அது ஓய்வை எத்தனிக்கும். இவ்வாறான ஒரு வாழ்க்கைக் கோலத்தை
மனிதனும் வாழ்கின்றான் என்றால் உண்மையில் அதனை ஒத்த வாழ்க்கைக் கோலத்தை தற்கால மனிதன்
வாழ்கின்றான் என்று கூறமுடியும்.
உலகில் இன்று 7.5 பில்லியன் மனித தனியன்கள் உயிர்வாழ்கின்றன. ஒவ்வொரு
தனியன்களும் ஏதோவொரு வகையில் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு
இருக்கின்றது. இதற்காக ஏனைய மானிட உறவுகளை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக ஒருங்கிணைத்த
கூட்டு செயற்பாட்டை நிறைவேற்றுவதில் பங்காற்றி வருகின்றனர். இவ்வகை தனியன்களிலே
நானும் நீங்களும் உள்வாங்கப்பட்டுள்ளோம்.
உலகில் காணப்படும் உயிருள்ள
உயிரற்ற அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரும் ஒரு இயந்திர இயக்கத்தை
நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றது. அவ்வாறான இயக்கத்தில் நானும் நீங்களும் ஏதோவொரு
வகையில் அறிந்தும் அறியாமலும் விரும்பியோ விரும்பாமலோ காலச்சக்கர சுழற்சியில்
சுழன்று கொண்டுதான் இருக்கின்றோம் என்று கூறினால் வியப்பாக சிலர் நோக்கலாம்.
இருந்தும் அதுவே உண்மை என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாததாகும்.
நீங்கள் யார் என்பதை
உணருங்கள். உங்களுக்கு தரப்ப்பட்ட கடமை அல்லது வேலை அல்லது நோக்கம் என்பதை சற்று
உங்களை சூழவுள்ள உலகை நோக்குவதன் மூலமாக அறிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நிச்சயமாக உங்களின் தேடலுக்கான விடை கிடைக்கப்பெறும்.
எங்கோ இருக்கும் ஒரு காரணி
இயந்திரத்தின் தொழிற்பாட்டை நிர்ணயம் செய்வதாக இருக்கின்றபோது பிரபஞ்ச இயக்கத்தின்
பாகமான உங்களையும் ஏதோவொரு காரணி கண்டிப்பாக கட்டுப்படுத்தும் காரணியாக அமையலாம்.
இதோற்கு எதுவும் எவரும் விதிவிலக்கு அன்று. இவ்வுண்மை உணரும் கணம் வாழ்வின் உண்மை
எதார்த்தம் எதுவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
அதுவரைக்கும் சிலர் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட பொறுப்பை பிணைப்பின் மூலமாக பங்காற்றி பனி புரிந்து கொண்டு
இருக்கலாம். இன்னும் சிலர் தான் உருவானதன் நோக்கத்தை உணராமல் உறங்குநிலையில்
உங்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கலாம்.
எது எவ்வாறோ நீங்கள்
படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிச்சயமாக குறித்த ஒரு தருணத்தில் உணர இவ்வியந்திர
இயக்கம் உங்களுக்கு வாய்பளிக்கும். அதுவரை சற்று காத்திருங்கள்.
எவ்வாறு ஒரு இயந்திரத்தின்
ஒரு பாகத்தை உண்டாக்குவதில் அப்பக்கம் உருவான மூலக்கூறு அல்லது அக்குறித்த அணு
அடிப்படை கட்டமைப்பு அலகாக பின்னணியில் இருந்து மொத்த தொகுதியையும் குறையற்ற
நேர்த்தியான தொகுப்பாக மாற்றுகின்றதோ அதுபோலவே இப்பிரபஞ்ச இயக்கத்தில் நீங்களும்
ஒருவராவீர்.......
உங்களுக்கான வாய்ப்பு
நிச்சயம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே துவண்டுவிடாமல் தேடலை தொடர்க...
தொடக்கம் தொடர்ச்சிக்கு தொடராகும்.......
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம்
நீ வீணாகப் படைக்கவில்லை; (அல்குர்ஆன் 3:191)
No comments:
Post a Comment