செல்வங்களில்
எல்லாம் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம். அவ்வாறன வரத்தை இறைவன் ஒருசிலருக்கு
கொடுப்பதை தடுத்து மாற்றுவழியை உண்டாக்கியுள்ளான். ஆனாலும் பலர் அவற்றை உணர்வதற்கு
நீண்டகாலம் எடுக்கின்றது. சிலர் உணர்ந்தும் உணராததுபோல் பாசாங்கு செய்து தங்களை
தாங்களே ஏமாற்றிக் கொள்வதை பார்க்கும்போது சற்று மனதில் கவலைகொண்டு கடந்தும்
செல்கின்றனர் பலர்....அதில் நான் முதன்மையானவன்
இதற்கு
மாற்றமாக இறைவன் சிலருக்கு பல குழந்தைகளை வழங்குகின்றான். எது எவ்வாறு இருந்தாலும்
குழந்தை செல்வம் என்பது ஒருவகை சோதனை தான். “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன” (அல்குர்ஆன் 8:28)
உலகில்
பல காரணங்கள் இன்றைய காலங்கள் குழந்தை இல்லாமல் இருக்க வாய்ப்பகின்றது.
1.
தம்பதிகளின் மலட்டுத்தன்மை /
உடலியல் குறைப்பாடு
2.
உடலுறவு பற்றிய தெளிவின்மை
3.
குடும்பக் கட்டுப்பாடு
4.
சமகால மனோநிலை (குழந்தை
பராமரிப்பு/ சமூக அந்தஸ்து/ குடும்ப பொறுப்பு)
5.
வறுமை
மேற்படி
காரணங்களில் முதலாவது காரணம் சமகாலங்களில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கான
காரணங்களை ஆராயும் போது அவற்றில் உணவு நடைமுறை, உபாதைகள், உடலியல் குறைபாடு,
போதைப்பழக்கம், பரம்பரை செல்வாக்கு செலுத்துகின்றது.
இவ்வாரனவர்களுக்கு
தீர்வுதான் என்ன என்றால் ???? நிச்சயமாக
மாற்றீட்டை இறைவன் வழங்கியுள்ளான். அதுதான் அனாதை சிறார்கள்
என்னைப்பொருத்தமட்டில்
மிகப்பெரும் பயனுள்ள முதலீட்டில் இதுவும் ஒன்று. காரணம் குறிப்பாக முஸ்லிம்கள் நாங்கள்
படைக்கப்பட்டதன் நோக்கம் எதுவென்று உணர்த்தல் குறித்த முதலீட்டுக்கான காரணத்தை
அறிந்துகொள்வீர்கள். உண்மையில் எமது நோக்கம் நாளைய வாழ்விற்கு இங்கே தயார்
ஆக்குவதே. அத்துடன் எமது மார்க்கம் பற்றி எத்திவைப்பதுமே ஆகும்.
அனாதை
ஆசிரமங்களிக்கு நீங்கள் சென்று பார்த்தால் தெரியும் எத்தனை அப்பாவி குழந்தைகள் பெற்றோர்
இன்றி வளர்கின்றார்கள் என்று. இவற்றுக்கு எல்லாம் பொறுப்பு யார்.... யாரோ செய்த
குற்றத்திற்காக ஒன்றும் அறியாத இவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்??? பல வினாக்கள் விடைகிடைக்காமல் தொக்கி நிற்கின்றது....
குழந்தை
வேணாம் பிறந்த பிற்பாடு தூக்கி எறியப்படும் இவர்கள் கரு உருவாகும் போதே அழித்து
இருந்திருந்தால் இவ்வளவு பாதிப்பை இவர்கள் அனுபவித்து இருக்க மாட்டார்கள். நான்
இவ்வுலகில் பிறந்ததுதான் குற்றம் என்று இவர்கள் பலமுறை தங்களுக்கு தாங்களே
கேள்வியை கேட்டுக்கொ(ல்)கின்றார்கள்..... பதில் அவர்களுக்கு இறுதிவரை கிடைப்பது
இல்லை....
பொதுவாக
தகாத உறவுகள், வறுமை, சமூக நடத்தை என்பன ஒரு பெற்றோருக்கு பெரும் இடையூறு விளைவிக்கின்றது
தாங்கள் ஈன்ற குழந்தைகள். உண்மையில் குழந்தை ஆசிரமத்தில் சேர்க்கும் பெற்றோரை
ஓரளவிற்கேனும் பாராட்டவேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கடமைக்கு
வளர்க்கின்றார்கள். அதுமட்டுமன்றி சித்திரவதை செய்யும் பெற்றோர்கள், குழந்தையை கொல்ல முற்படும் பெற்றோர்கள் கூட எமது சமூகத்தில் நான்
கண்டுள்ளேன். (இப்பதிவு இதன் காரணமாகவே).
ஒரு
குழந்தை பொதுவாக தங்களின் பெற்றோர் என்ன மார்க்கத்தை / மதத்தை/ கொள்கையை
பின்பற்றுகின்றார்களோ அதேயேதான் பின்பற்றுகின்றது. ஆனால் அனாதை ஆசிரமங்களில்
வளரும் குழந்தைகள் அவ்வாறு வளர்வதில்லை. அவர்களுக்கு யாதும் கடவுளே....
ஆனால்
நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தீர்கலாயின் அவனின் மார்க்கம் உங்களின்
மார்க்கமாக அமைக்கின்றது. ஒரு குழந்தைக்கு நீங்கள் உண்மையில் பெற்றோரை விட புனித
மார்க்கத்தை வழங்குவதே மிகச்சிறந்த சொத்தாக நான் காண்கின்றேன். காரணம் அவன்
ஈருலகிலும் ஜெயிப்பவனாக மாற்றியமைத்தவர் நீங்கள்தானே....
மேற்படி
பதிவு எனது வாழ்வில் கண்ட சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு வரைந்துள்ளேன். அதாவது
1.
சித்திரவதை அனுபவித்த ஒரு குழந்தை
2.
மூன்று மாதம் அளவில் கொலை
செய்யப்பட எத்தனிக்கப்பட்ட குழந்தை
3.
மாற்று மதத்தில் வளர
வாய்ப்பளிக்கப்பட்ட ஒரு குழந்தை.....
குழந்தை
செல்வம் அற்ற தம்பதிகளே உங்களுக்கு நீங்கள் பெறாதா குழந்தை உலகில் பல உள்ளது...
தேர்வு செய்ய இன்னும் இறைவன் உங்களுக்கு வாய்பளித்துள்ளான். சற்று சிந்தித்து
உங்களின் செல்வங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.....
நீங்கள்
ஒரு குழந்தையை மாத்திரம் தத்தெடுக்கவில்லை மாறாக ஒரு தலைமுறையை தத்தெடுத்துக்
கொள்கின்றீர்கள்....என்பதே உண்மை.
இவ்வாய்ப்பு
பல செல்வம் மிகுந்த முதியவர்கள், பணம் படைத்த
தனவந்தர்கள், குழந்தை அற்ற தம்பதிகள்,
அதிக குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட பெற்றோர்களுக்கு உரித்தானது.
“வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக்
கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்” (அல்குர்ஆன் 6:151, 17:31)
No comments:
Post a Comment