
2008~2010 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒர் புலனாய்வு ஆய்வு இதற்கு நல்லதொரு ஆதாரத்தை அளிக்கின்றது. அதாவது அமெரிக்க உளவுப்படையான CIA (Central Intelligence Agency) மற்றும் இஸ்ரேலிய உளவுப்பிரிவு Mossad Intelligence agency அமைப்பும் இணைத்து மேற்கொண்ட ஆய்வில் கீழ்வரும் அறிக்கையினை சமர்ப்பிக்கின்றார்கள்.
அதாவது "பூமியில் நெற்றி நிலைகொள்வதனால் குறித்த நபருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் உளவியல் சார்ந்த குழப்பமான சில எண்ணங்கள் நீங்கி தெளிவடைய வாய்ப்பளிக்கப்படுகின்றது" என்பதாகும்.
மேற்படி ஆய்வு பல நூறு சிறைச்சாலை கைதிகள் மற்றும் இராணுவ முகாம்களில் கடமையாற்றும் படையினர்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு முடிவும் வழங்கப்பட்டது.
இது எவ்வாறு சாத்தியமாகும் என்று உங்களுக்கு தோன்றலாம்.... அதற்கு பதில்

மன அழுத்தம் உண்டாகவும் உடலியல் சோர்வு, தலைவலி, தலைசுற்று, மயக்கம், தூக்க உணர்வு என்பன உண்டாக எமது உடலில் உண்டாகும் இவ்வாறான ஒருவகை புலம் காரணமாக அமைகின்றது.
மேற்படி ஆய்வின் பின்னராக யுத்தத்தில் உளவியல் ரீதியாக வெகுவாக பாதிப்புற்றவர்கள், தற்கொலைக்கு முயற்சித்து பிடிப்பட்ட கைதிகள், உயர் மனவழுத்தம் கொண்ட நோயாளிகள், குறிப்பாக சிறைக்கைதிகள் போன்றோர்களில் அவர்களின் நாளாந்த வேளைகளில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி இப்பயிற்சியை கண்டிப்பாக மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக சடுதியாக உளவியல் சோர்வில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கை கொண்ட உற்சாகம் அவர்களுக்கு உதயமானதாக அவர்களே குறிப்பிடுகின்றார்கள்.
மேற்படி பயிற்சி நான் அருகில் காட்டிய நிலைக்கு ஒப்பாக 5~20 நிமிடங்கள் வரை நீடிக்குமாறு ஒழுங்கு செய்துள்ளார்கள். இதனை முஸ்லிம்கள் "ஸஜ்தா" என்று அழைப்பார்கள்.
இன்னும் முஸ்லிம்கள் நாள் ஒன்றில் கட்டாயமாக குறித்த நேர இடைவெளிகளில் இவ்வாறு மேற்கொண்டு வருகின்றார்கள் என்று சொன்னால் சற்று ஆச்சரியமாகவே இருக்கும். அவர்கள் தங்கள் கடமையான 5 வேலை தொழுகையின் போது குறித்த நிலையில் சுமார் 34 தடவைகள் செய்கின்றார்கள்.
அதுவும் அதிகாலை தொடக்கம் இரவு வரை குறித்த நேர இடைவெளிகலான சூரிய உதயம், மதியம், மாலை, சூரிய அஸ்தமனம், இரவு நேரங்களில் செய்கின்றார்கள்.
மேற்படி பயிற்சியால் மேலும் பல உடலியல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. (நீண்ட நேர இருப்பு long sajda)

2. சுவாசம் சீராக வாய்ப்பாகும்.
3. கண்பார்வை சீராகும்.
4. மூளை செயல்திறன், முகச்சுருக்கம் அற்றுப்போகும். (குருதி ஓட்டம் முகம், தலைக்கு சீராக பாச்சப்படுவதனால்)
5. மூட்டுக்கள் சார்ந்த பிரச்சினை இழிவலவாகும்.
இவ்வாறான சில செயற்பாடுகள் காரணமாகவே பொதுவாக முஸ்லிம்கள் உளவியல் சார்ந்த பல நோய்களில் இருந்து விடுபட வாய்பாகின்றது.
இவ்வாறு செய்ய யார் பணிதிருப்பார்கள் என்று ஒருகணம் நீங்கள் சிந்திக்கவேண்டாமா??? என்ன
இது பற்றி புனித அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்" (அல்குர்ஆன் 22:77, 25:60, 25:64)
No comments:
Post a Comment