ஓர் கணம் மானிட நாகரிக வரலாற்றை புரட்டிப்பார்த்தோம் ஆனால் தலையை மூடுவது மட்டுமன்றி முழு உடலையும் பெண்கள் மூடுவது அன்று தொடக்கம் இருந்துவருகின்ற நடைமுறையே....ஆனால் மிக அண்மையில் ஏற்பட்ட நவநாகரீக ஆடைக்கலாச்சாரம் பெண்களை அரை நிர்வாணியாக சமூக மட்டத்தில் அலங்கரித்து அலையவிட்டுள்ளது எனலாம். இது ஒருவகை ஆணியவாதம் என்று கூறினாலும் தவறன்று.
பண்டைய எகிப்திய நாகரிகம், பாரசீக நாகரிகம், இந்து வெளி நாகரிகம், கிழக்காசிய நாடுகளின் ஆடை நாகரீகங்கள் இதற்கு நல்ல உதாரணம் என்று கூறலாம்.





மானிட உளவியல் ரீதியாக இதனை நோக்குவோம்.
குறிப்பாக பெண்களை காட்டிலும் ஆண்களின் பாலியல் ரீதியான தேட்டம் ஒரு பெண்ணின் உடலியல் சார்ந்து மிக அதிகம் உள்ளது. இயற்கையில் அவ்வாறுதான் ஆண்மை உள்ளது. இது ஆணின் குணாதிசியம் என்றும் கூறலாம். ஆனால் ஆடை என்ற ஒரு காரணியே இதனை தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகின்றது.
ஆண்கள் பொதுவாக எதனை நோக்குகின்றார்கள். முழு ஆடை அணிந்த ஒரு பெண்ணில் இயல்பாகவே ஒரு மரியாதை உண்டாகும். ஆனால் குறை ஆடை அணிந்த ஒரு பெண்ணில் மரியாதைக்கு பதிலாக மரிமயக்கமே உண்டாகும்.


உண்மையில் பெண்களின் சுதந்திரம் அவர்களின் முழு ஆடை அணிவதில் உணரப்படுகின்றது. ஆனால் அவர்கள் உலக நடைமுறைக்கு என்றவாறு மாறுவது சமூக மட்டத்தில் பெரும் பிறழ்வை உண்டாக்குகின்றது. இன்னும் பாடசாலை மட்டம் தொடக்கம் உலகளாவிய மட்டம் வரைக்கும் பெண்களை காமப்பொருளாக பார்ப்பதுவே சமகால நடைமுறை. இதற்காக அழகுராணி போட்டி தொடக்கம் ஆண்மை ராணி போட்டி வரை நடந்தேறுகின்றது பொதுவெளியில்.... இதை சுதந்திரம் என்று கூவித்திரியும் கூட்டமும் ஒருபுறம்.

அண்மைக்காலத்தில் நடைபெறும் அநேக பெண்மைக்கு எதிரான கொடுமைகளில் செல்வாக்குச்செலுத்திய காரணி என்றால் அது ஆடை என்று கூறலாம். ஆடைக் குறைப்பில் ஏற்பட்ட ஒரு புரட்சி ஆண்களுக்கு வாசியாகவும் பெண்மைக்கு அழிவாகவும் மாறியது... ஏன் இது தனிமனித வாழ்விலே காண்கின்றோம்.
பெண்மைக்கு ஆடையில் சுதந்திரம் கோரும் நபர்கள் தங்களின் தாய், குழந்தை, சகோதரி, மனைவி போன்ற அடிப்படை மட்டத்தில் இருந்து புரட்சியை உண்டாக்கி வெற்றி காணச்சொல்லுங்கள்....
ஏன் என்றால் அவர்கள் எவ்வாறு அடுத்தவன் அடிப்படை உறவை ரசிக்க எத்தனிக்கின்றானோ அதுபோல மற்றவர்களும் ஆசையை இவன் தங்களின் உதிர உறவுகளில் இருந்து தொடங்கட்டும்....
"தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்" (அல்குர்ஆன் 24:31)
No comments:
Post a Comment