பொதுவாக எமக்கு விருப்பு வெறுப்புக்கள்
வாழ்கையில் அநேகம் இருக்கின்றது. அவ்வாறானவற்றில் வெறுப்படைந்த சிலவற்றில் நாட்டம்
குறைவாக இருக்கும்.
ஆனால் ஒரு மனிதரை வெறுக்கின்றோம். ஆனால்
அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆராய்கின்றோம். காரணம் வேறுப்பதனால் என்னமோ தெரியவில்லை.
குறித்த நபரின் சிந்தனை,
நோக்கம் செயற்பாடு எமக்கு ஒவ்வாமையாக இருப்பின் அது வெறுப்பை உண்டாகின்றது.
இது சாதாரண மனித இயல்பு விருப்பும் வெறுப்பும். அதில் ஒருவரை பார்த்து ஒருவர் குறை
கூறிவிடமுடியாது. ஆனாலும் நாம் இதில் நிதானமாக செயல்படவேண்டும்.
காரணம் எமது வாழ்வு நிர்ணயம் ஆவது எமது உள்ளத்தின்
சிறந்த ஆரோக்கியத்தின் பாலே... ஆக சில காரியங்களை நாம் சுயமாக உள்ளத்தில் கொண்டுள்ள
மனித இயல்புகளுக்கு அப்பால் சில மாந்தர்களின் இயல்புகளை உள்வாங்கி சிந்தனைமிக்க வாழ்வாக
மாற்றவேண்டியது கடப்பாடாக உள்ளது.
அந்தவகையில் வெறுப்புறும் காரணி மீது நாங்கள் எமது தேடலை தொடரும்போது எமக்கு எம்மை
அறியாமலே ஒருவகை உளவியல் ரீதியான பலஹீனத்தை அனுபவிக்கின்றோம். இதனால் உளவியல் சார்ந்த
சில வகை தொற்றாத கண்ணுக்கு புலப்படாத நோய்களான பொறாமை,
குரோதம், வஞ்சகம் இன்னும் மன அழுத்தம் கூட காலப்போக்கில் உண்டாகிட வாய்ப்பாகிவிடும்.
இது உங்கள் வாழ்வின் சுவாரசியத்தை இலக்கச்செய்யலாம்.
அவ்வாறாயின் இதற்கு என்னதான் தீர்வு?????
வெறுப்படையும்
1. குறித்த காரணியை வாழ்வில் இருந்து முற்றாக நீக்குதல்.
2. குறித்த காரணியை விட்டு விலகி இருத்தல்.
3. குறித்த காரணியை காணாது கடந்து செல்லல். (பாராமுகமாக இருத்தல்)
என்னைப்பொறுத்தவரையில் 3 காரணி மிகபொருத்தமாக
அமையும். காரணம் இது எந்தவகையிலும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமையும் என்பதனால்.
இன்னும் வாழ்வில் உண்மையான சுவாரசியம் தோல்வி,
கஷ்டம், மனக்கசப்பு என்பவற்றில் இருந்து விடுபடும் போதே பிறக்கின்றது.
நானும் பல பொழுதுகள் இவ்வாறு செய்துள்ளேன்.
ஆனால் அநேக நபர்கள் குறித்த காரணியில் கொண்ட வெறுப்புக் காரணமாக மீண்டும் மீதும்
குறித்த வெறுப்புக் காரணியில் நாட்டம் கொண்டு பல உன்னதமான தருணங்களை எமது வாழ்வில்
இழந்து விடுகின்றோம்.
வாழ்க்கை வாழ்வதற்கு. நீங்கள் ஒருபோதும் மற்றவரை சார்ந்தவர் அன்று. மாறாக நீங்கள்
உங்களுக்கு தனித்துவமானவர்.
உங்களினால் பல விடயங்கள் சாதிக்க இயலும். இதற்காக முன்னோர்
சென்ற பாதையில் செல்லவேண்டிய அவசியம் அன்று. உங்களுகென்று தனித்துவ பாதையை தேர்ந்தெடுங்கள்.
அடுத்தவரை கண்டு நீங்கள் ஆச்சரியம் கொள்வதிலோ அல்லது ஆத்திரம்
கொள்வதிலோ எதுவித பயனும் இல்லை. காரணம் நீங்கள் அவர் வாழ்வை வாழப்போவதில்லை.
"எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது, அவர்களுடைய (நெஞ்சங்களில்) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு
அதிகரிக்கி விட்டது" (அல்குர்ஆன் 9:125)
குறிப்பு - மேற்படி பதிவு சமூக வலைத்தளங்களில் இனங்காணப்பட்ட
சில நபர்களின் நடத்தையை அடிப்படையாக கொண்டும் இன்னும் சிலர்கள் முகநூல் வாயிலாக வினவப்பட்ட
வினாக்களைக் கொண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
No comments:
Post a Comment