“குருவே!
என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை” என்றான்.
“இதோ இவற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து வா!”
–குரு அவனிடம் சொன்னார்.
அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். அவனால் எந்தப் பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை.
“பரவாயில்லை. வா, நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்!” என்ற குரு அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார்.
இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி அவன் கைகளிலேயே வந்து அமர்ந்தது.
“இதுதான் வாழ்க்கை!
நீ எதை தேடி ஓடினாலும் நீ உன்னை சூழவுள்ள புறச்சூழலை கற்றுக்கொண்டு ரசிக்கப் பழகாதவரை உனது வாழ்க்கையை நீ உணரமாட்டாய்.... அதுமட்டுமன்றி
மகிழ்ச்சியைத் தேடி துரத்து அலைவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்துவிடும்!”
இதுவே வாழ்வின் எதார்த்தம்.
No comments:
Post a Comment