மடையர்கள் ஒரு சமூகத்தின் இழுக்கு. அவர்கள் என்றும் அந்த சமூகத்தின் குருட்டுக்
கண்களே. அந்த குருடர்கள் அறியமாட்டார்கள் தங்களின் ஊனமுற்ற அறிவீனத்தை. இருந்தபோதும் அதனையும் ஆர்வமூட்டும் மடமை சமூகம் இருக்கத்தான் செய்கின்றது எம் சூழலில்.
ஒரு உயிரின் பெறுமதி இன்று இழக்கப்பட்ட பொருளாதார இழப்பீட்டுக்கு ஈடாக முடியாது. இருந்தபோதும் இந்நிகழ்வு எம்மவர்களின் தலைமுறைக்கு நல்லதோர் பாடமாகவே இதனை பிரதிபலிக்க எம்மவர்கள் எத்தனிக்கவேண்டும். நாளைய தலைமுறையாவது பிரச்சினையை அறிவுபூர்வமாக தீர்த்துவைக்க முன்வரட்டும்.

இனவாதிகளுக்கு நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமன்று. இருந்தும் புரிந்துணர்வுள்ள மானிடர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுடன் நடுநிலைமையாக நீங்களாவது நடந்துகொள்ள வழிநடத்தவும், வழிநடக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
"(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து" (அல்குர்ஆன் 48:26)
No comments:
Post a Comment