பல மனிதர்கள் ஒரு மனிதனின் புறத்தோற்ற இயல்பைகொண்டு அவன் நல்லவன் இறை அடியான் , பாவி என்று சாதரணமாக எடைபோட்டு விடுகின்றோம். உண்மையில் ஒருவனை பற்றி எடைபோட்டு முடிவு செய்ய எமக்கு என்ன தகுதி உண்டு என்று நீங்கள் என்றாவது வினாவை தொடுத்ததுண்டா......
காரணம் எம்மிடமே பல குறைபாடுகள் இருக்கின்றது. அவன் வெளிப்படையாக செய்கின்றான். நாங்கள் மறைமுகமாக செய்கின்றோம். என்ன வித்தியாசம் உண்டு இறைவனின் பார்வையில் விமர்சிக்கும் நல்லடியார்கள் என்று கூறிக்கொண்டு வலம்வரும் எமக்கும் விமர்சனத்திற்கு உள்ளாகும் அவர்களுக்கும்?????
ஒருவர் தொடர்ந்தும் பாவம் செய்பவராக இருக்க மாட்டார். அதே போல் ஒருவர் தொடர்ந்தும் நன்மை செய்பவராக இருக்க மாட்டார்.
"ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்"(அல்குர்ஆன் 7:153)
ஒரு நிகழ்வு இடம்பெற்று இருப்பின் அதற்கான காரண காரியங்களை நோக்குக. புறத்தோற்ற காரணிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு நீங்களே முடிவு செய்து மிகப்பெரும் பாவத்தை செய்யாதீர்கள்.
"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்" (அல்குர்ஆன் 5:98)
சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு சொந்தமானது என்று மறவாதீர்கள். அது பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
"எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்" (அல்குர்ஆன் 17:36)
தனிப்பட்ட ஒருவரின் நடத்தை முழு சமூகத்தையும் பிரதிபலிப்பது அன்று. மாறாக இவற்றுக்கு காரணம் யார் என்று என்றாவது விமர்சனம் பந்தி பந்தியாக எழுதும் நாம் சிந்தித்து உண்டா.....
காரணம் நாம் தாம்...
மாற்றுமத கலாச்சாரம் கொண்ட கல்வியல் நிலையங்களில் எமது குழந்தைகளை அனுப்பியுள்ளோம். மாறாக இவ்வாறான கல்வியல் வளங்கள் எம்மிடம் இருக்கின்றதா என்றால் இல்லை. காரணம் மட்டும் நாம் வாய்கிழிய கூறுவது. எமது சமூகத்தில் பல அடிப்படைக் குறைப்பாடுகள் இருக்கின்றது. அவற்றை நாம் முதலில் நிவர்த்திக்க முன்வருவோம். அப்புறம் குறைகளை இனங்கண்டு சமூகத்தை வழிநடத்துவோம்.

சமகாலங்களில் பள்ளிவாசல் கட்டு அழகு பார்ப்பதோ அல்லது திருவிழாக்கள் நடாத்தி பெருமைப்படுவது தேவையன்று. மாறாக நாம் கல்வி ரீதியாக பலவீனமான சமூக கட்டமைப்பை கொண்டுள்ளோம். அவற்றை நிவர்த்திக்க கல்வி கூடங்கள், இஸ்லாமிய கல்லூரிகள் , சர்வதேச தரமிக்க ஆய்வு கூடங்கள், சர்வதேச தரமிக்க நூல்நிலையங்கள் நிறுவுவதும் அதற்காக எமது சிறார்களை வளர்ப்பதுமே காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளது.....
முதலில் இதனை நிவர்த்தி செய்யுங்கள்.....
அப்புறம் பலூன் உடைத்தல் பற்றிய சமூக எழுட்சி பற்றி பேசுவோம்.....
No comments:
Post a Comment