சமகாலங்களில் உயிரியல் தொழிநுட்பத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்ற மூலக்கூற்று உயிரியல் (molecular biology) தொழிநுட்பம், ஜெனட்டிக் தொழிநுட்பம் (Genetic engineering) மற்றும் குளோனிங் தொழிநுட்பங்களை (Cloning technology) சுட்டிக்காட்ட முடியும்.
இம்மூன்று தொழிநுட்பங்களும் சமகால தாவர விலங்கு உற்பத்தியில் பெருமளவு பிரயோகிக்கப்பட்டு வந்தாலும் மனிதனில் இதுவரை சட்ட ரீதியாக பிரயோகிக்கப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.
மேற்படி மூன்று தொழிநுட்பங்களும் கிட்டத்தட்ட ஒத்தவகையான கருப்பொருளைக் கொண்டு இருந்தாலும் இவற்றில் மூலமாக உண்டாக்கப்படும் விளைப்பொருளில் வேறுபாடு காணப்படுகின்றது. அந்தவகையில் குளோனிங் தொழிநுட்பம் பற்றி இங்கே சற்று ஆராய்வோம்.
July 11, 2005 இல் Michael Bay தயாரிப்பில் வெளிவந்த கொலிவூட் திரைப்படமே The Island என்ற விஞ்ஞானம் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் மனிதன் குளோனிங் மூலமாக சட்டவிரோதமாக எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் என்பதை சித்தரித்து நிற்கின்றது. அத்துடன் குளோனிங்கில் உருவாகும் உயிரினம் எவ்வாறு மூல உயிரினத்தின் புறத்தோற்ற இயல்பைக்கொண்டு இருக்கும் என்பதையும் வசீகரமான தோற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் சுருக்கம் என்னவெனில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உடலியல் அங்கக் குறைபாடுகளை அல்லது பாதிப்புக்களை அவர்களின் மூலவுயிர்க் கலங்களை (Totipotentcy cells) கொண்டு அவர்களை ஒத்த ஒரு மனிதனை உருவாக்கி உருவாக்கப்பட்ட பிரதி மனிதனில் இருந்து தேவையான ஆரோக்கியமான பாகத்தை தோற்றுவிப்பதாகும். இதனூடாக குறித்த செல்வந்த உண்மை மனிதனின் நோய் குணமாக வாய்ப்பளிக்கப்படுகின்றது. மேற்படி எண்ணக்கருவை ஒத்து தமிழில் July 13, 2007 இல் வியாபரி என்ற திரைப்படம் வெளிவந்தது.

குளோனிங் தொழிநுட்பத்தில் Dolly என்ற செம்மறியாடு உருவாக்கப்பட்டது. மேற்படி தொழிநுட்பத்தினால் சமகாலங்களில் அழிந்துவரும் உயிரிகளை பாதுக்காக்கும் செயன்முறை பிரபலமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமன்றி தாவர இனங்களை பாதுகாக்க மேற்படி தொழிநுட்பத்தில் இழைய வளர்ப்பு (Tissue culture) ஐ பயன்படுத்தி மிக விரைவாக பெருக்குகின்றமை மிக ஆரோக்கியமான செயற்பாடாக அமைந்துள்ளது.
மூலக்கூற்று உயிரியல் மற்றும் ஜெனட்டிக் தொழிநுட்பம் என்பது ஒரு உயிரியின் நுகத்தில் (Zygote) அதாவது தாயின் புணரி தந்தையின் புணரி இணைந்து உருவாகும் கலத்தில் எமக்கு விருப்பமான, வெறுப்பான இயல்புகளை சேர்த்தல், நீக்குதலைக் குறிக்கும். இன்னும் சில தனிக்கல அங்கிகளில் அதாவது நுண்ணங்கிகளில் மாற்றி அமைக்கப்பட்ட DNA பாகங்களை உட்செலுத்தி புதியவகை நுண்ணக்கியை தோற்றுவித்தலும் உள்ளடங்கும். மேற்படி தொழிநுட்பத்தில் சமகாலங்களில் பெரும் புரட்சி உண்டாகியுள்ளது. (இது பற்றி வேறொரு தலைப்பில் பேசுவோம்)
குளோனிங் தொழிநுட்பம் மனிதனில் பிரயோகிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை கருத்தில் கொண்டே மேற்படி தொழிநுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தன்னை ஒத்த பல பிரதிகளை ஒரு தனிமனிதன் உண்டாக்கினால் சட்டவிரோத செயற்பாடுகளை குறித்த நபர் செய்துவிட்டு மற்றவரை தண்டனைக்கு உண்டாக்க முடியும்.
மரணம் அற்ற வாழ்க்கையினை குறித்த புறத்தோற்ற இயல்பைக்கொண்ட அங்கி அனுபவிக்கலாம்...
எது எவ்வாறோ மிகப்பெரும் தொழிநுட்ப அறிவு நவீன ஆய்வுகூட வசதிகளின் நிபந்தனையில் உண்டாக்கப்படும் இச்செயன்முறை பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே கருதப்படும் தனி ஒருவனில் பிரயோகிக்கப்பட்டால்....
No comments:
Post a Comment